For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஐந்து நபர்களை மட்டும் ஒருபோதும் நம்பிவிடாதீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்

சாணக்கியர் அர்த்தசாஸ்த்திரத்தை மட்டும்தான் எழுதியுள்ளார் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற நூலும் உள்ளது அதுதான் சாணக்ய நீதி.

|

இந்தியாவின் புகழ்பெற்ற நூல்களில் ஒன்று அர்த்தசாஸ்திரம். வாழ்க்கை நெறிகளையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் உணர்த்தும் இந்த நூலின் ஆசிரியர் யார் அனைவருமே நன்கு அறிவோம். அவர்தான் சாணக்கியர். சாணக்கிய தந்திரம் என்பது உலகப்புகழ் பெற்ற ஒன்று. ஏனெனில் சாணக்கியரின் தந்திரம் என்பது ஒருபோதும் பொய்த்ததில்லை என்பது வரலாற்றில் நிருபிக்கப்பட்ட ஒன்று.

Chanakya quotes for relationship from Chanakya Niti

சாணக்கியர் அர்த்தசாஸ்த்திரத்தை மட்டும்தான் எழுதியுள்ளார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற நூலும் உள்ளது அதுதான் சாணக்ய நீதி. இந்த நூலில் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற என்னே செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை சாணக்கியர் மிகவும் ஆழமாக கூறியிருப்பார். அந்த நூலில் இருக்கும் சில முக்கியமான சிந்தனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிந்தனை 1

சிந்தனை 1

எவர் ஒருவர் சாஸ்திரங்களையும், வேதங்களையும் படித்து அதில் இருந்து அளவில்லா அறிவை பெருகிறாரோ அவர் வாழ்க்கையில் எந்த கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும், எதனை பின்பற்றக்கூடாது என்பதை நன்கு உணரவேண்டும். குறிப்பாக எது நல்லது எது கெட்டது என்பதை நிச்சயம் உணர வேண்டும்.

சிந்தனை 2

சிந்தனை 2

தான் கற்ற கல்வியிலிருந்து தான் வாழும் சமூகத்திற்கு நல்லது எது என்பதை புரிந்துகொண்டு அதனை மற்றவர்களுக்கு சரியான கண்ணோட்டத்தில் புரியவைத்து அதற்காக பேசவேண்டும்.

MOST READ: இதெல்லாம் நியாயமா மக்களே, பெத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க...? - # Funny Photos

சிந்தனை 3

சிந்தனை 3

எவர் ஒருவர் வீட்டில் தாயும் இல்லாமல் மனைவியும் இனிமையாக பேசக்கூடியவராக இல்லாமல் போனால் அவன் வாழ்க்கை காட்டில் வாழ்வது போலாகும். அதற்கு அவன் வனத்திற்கு சென்றே வாழலாம்.

சிந்தனை 4

சிந்தனை 4

ஒருவர் தன்னிடம் இருக்கும் செல்வத்தை எதிர்காலத்தில் வரக்கூடிய கடினமான காலத்திற்காக பாதுகாக்க வேண்டும். தனது செல்வத்தை இழந்தாவது தன்னுடைய மனைவியை பாதுகாப்பவனே சிறந்த மனிதன். அதைவிட தன் மனைவியும், செல்வத்தையும் தியாகம் செய்யாமலேயே தன் ஆன்மாவை காத்துக்கொள்பவனே வாழ்க்கையில் வெற்றிபெறுவான்.

MOST READ: தினமும் சுய இன்பம் காணுவதால், ஆண்குறியில் இந்த பிரச்சனை ஏற்படுமா?

சிந்தனை 5

சிந்தனை 5

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரழிவிற்காக உங்கள் செல்வத்தை பாதுகாத்து வையுங்கள். " செல்வந்தனுக்கு பணத்தை பற்றிய அச்சம் எதற்கு? " என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் செல்வந்தர்களே தங்களுக்குள் பனிப்போரில் ஈடுபடும்போது அவர்கள் செல்வம் அழியத்தொடங்கும்.

சிந்தனை 6

சிந்தனை 6

உங்களுக்கு மரியாதை இல்லாத ஒரு நாட்டில் குடியேறாதீர்கள். ஏனெனில் அங்கு உங்களால் உங்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொள்ள இயலாது, நண்பர்களை பெற இயலாது, அறிவையும் ஒரெ முடியாது. இது நாட்டிற்கு மட்டுமல்ல வீட்டிற்கும் பொருந்தும்.

சிந்தனை 7

சிந்தனை 7

இந்த ஐந்து நபர்கள் இல்லாத இடத்தில் ஒரு நாள் கூட தங்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் செல்வந்தன், வேதம் கற்ற பிராமணன், மன்னன், ஆறு மற்றும் ஒரு மருத்துவர். இவர்களில் ஒருவர் இல்லையென்றாலும் அந்த இடத்தில் தங்கக்கூடாது

MOST READ: ஒரே மாதத்தில் 10 கிலோ குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்தால் போதும்

சிந்தனை 8

சிந்தனை 8

ஞானமுள்ள மனிதர்கள் ஒருபோதும் இந்த இடத்திற்கு செல்ல மாட்டார்கள்.அதாவது தனக்கான வாழ்வாதாரத்தை உருவாக்க வாய்ப்பு இல்லாத இடம், யாரும் யாருக்காகவும் பயப்படாத இடம், அவமானம் என்னும் உணர்வு இல்லாத இடம், அறிவு இல்லாத இடம், தொண்டு மனப்பான்மை இல்லாத இடம். ஏனெனில் அவமானங்களும், பயமும், ஞானமும் இவைதான் உங்கள் வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கும்.

MOST READ: நாய்க்கறி சர்ச்சை: ஆட்டுக்கறிக்கும் நாய்க்கறிக்கும் என்ன வித்தியாசம்? எப்படி கண்டுபிடிப்பது?

சிந்தனை 9

சிந்தனை 9

கடமையில் இல்லாத பொது வேலைக்காரனை பற்றியும், கஷ்டகாலத்தில் உறவினர் பற்றியும், பாதகமான சூழலில் நண்பனை பற்றியும், துரதிஷ்டத்தில் மனைவியை பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

சிந்தனை 10

சிந்தனை 10

எவன் ஒருவன் கஷ்டகாலத்திலும், பஞ்சத்திலும், போரிலும், மன்னனின் நீதிமன்றத்திலும், சுடுகாட்டில் உன்னை விட்டு பிரியாமல் விட்டு கொடுக்காமல் இருக்கிறானோ அவனே உன் உண்மையான நண்பன்.

சிந்தனை 11

சிந்தனை 11

எவன் ஒருவன் அழிந்துபோக கூடிய பொருளுக்காக அழியா பொருள்களை விட்டு கொடுக்கிறானோ அவன் அந்த அழியாப்பொருளை இழக்கிறான் அதேசமயம் அவன் ஆசைப்பட்ட அந்த அழியக்கூடிய பொருளையும் இழந்துவிடுவான்.

சிந்தனை 12

சிந்தனை 12

ஒருபோதும் இவர்களை நம்பிவிடாதீர்கள். அமைதியாக இருக்கும் நதி, ஆயுதம் ஏந்திய ஆண், கொம்புகள் மற்றும் நகங்கள் உள்ள மிருகம், அழகிய மற்றும் அமைதியான பெண், அரச மற்றும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த நபர்களை நம்பக்கூடாது.

MOST READ: இந்த பொருட்களை வியாழக்கிழமையன்று தானமாக கொடுத்தால் அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரும்

சிந்தனை 13

சிந்தனை 13

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு பசி இரண்டு மடங்கும், வெட்கம் நான்கு மடங்கும், தைரியம் ஆறு மடங்கும், காமம் எட்டு மடங்கும் அதிகமாக இருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship
English summary

Chanakya quotes for relationship from Chanakya Niti

Chanakya Niti is a book which was written by the great Chanakya. It gives a valuable life lessons to everyone.
Story first published: Thursday, November 22, 2018, 12:26 [IST]
Desktop Bottom Promotion