தாயின் ஓவ்வொரு இரவும் இப்படித்தான் கழிகிறது! (வீடியோ)

Posted By:
Subscribe to Boldsky

தாய்மை என்பது மிக எளிதான காரியம் அல்ல. இதனை எல்லாருமே ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா? அந்த குழந்தை பிறப்பதுடன் ஒரு தாயின் கடமை முடிந்து விடுவதில்லை அதற்கு பிறகு தான் இன்னும் இரண்டு மடங்கு அதிக வேகமாக சுற்ற வேண்டியிருக்கிறது.

அதிலும் இரண்டாவது குழந்தை என்று சொன்னால் அந்த தாயின் நிலைமையைப் பற்றி சொல்லவே வேண்டாம். முதல் குழந்தையையும் சமாளிக்க வேண்டும். பகல் நேரத்திலாவது குழந்தைகளை வீட்டில் இருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லலாம்.... ஆனால் இரவில் கைக்குழந்தை விடிய விடிய தூங்காது. சில நேரத்தில் பெரிய குழந்தை தன்னருகில் வந்து படுக்கச் சொல்லி அழும் குழந்தையை அருகில் படுக்க வைத்துவிட்டு நாம் நிம்மதியாக தூங்கிட முடியுமா? நிமிடத்திற்கு ஒரு முறை விழித்து குழந்தை தூங்குகிறதா முழித்திருக்கிறதா? என்று கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

மறு நாள் காலை விடிந்ததிலிருந்தே மறுபடியும் பழைய கதை ஓட ஆரம்பித்துவிடும். அம்மா பசிக்குது என்று குழந்தை கேட்பதற்கு முன்னதாக உணவு சமைத்து தட்டில் போட்டு கொடுக்க வேண்டும். அதோடு முடிந்ததா தொடர்ந்து வீட்டு வேலைகள் ஆரம்பித்துவிடும்... ஆக பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்கு பிறகு ஹெவி ரோல் என்று தான் சொல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெலானி டார்னெல் :

மெலானி டார்னெல் :

மெலானிக்கு இன்ஸ்டாகிராமில் எண்பத்தியேழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். அப்படி என்ன செய்துவிட்டார் மெலானி..... மெலானிக்கு மூன்று குழந்தைகள் தாய் என்ற பொறுப்பை எப்படி அவர் தினமும் கடந்து வருகிறார் குழந்தைக்கு தருகிற அதே முக்கியத்துவத்தை தன்னுடைய உடல்நலத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார் என்பது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

வீடியோ :

வீடியோ :

சமீபத்தில் மெலானி ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அது ஒவ்வொரு பெற்றோருமே தங்களுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளும்படியாக இருந்தது. பலருக்கும் ஒவ்வொரு தாயும் இவ்வளவு சிரமமடைகிறாளா என்பது அப்போது தான் புரிந்திருக்குமே.... அந்த வீடியோவைத் தொடர்ந்து மெலானிக்கு பாராட்டுக்கள் குவியத் துவங்கியது.

ஒரு இரவு :

ஒரு இரவு :

மூன்றாவது குழந்தை பிறந்து பத்து மாதம் ஆகியிருந்தது. அப்போது தான் மெலானிக்கு இந்த ஐடியா வந்தது மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு நான் எவ்வளவு சிரமமடைகிறேன் என்பதை வீடியோ பதிவு எடுத்துப் போட்டால் என்ன? என்று தோன்றிடவே தன் பெட்ரூமின் சீலிஙில் கேமரா ஒன்றை ஃபிக்ஸ் செய்கிறார்.

அம்மானா சும்மா இல்லடா :

அம்மானா சும்மா இல்லடா :

குழந்தைக்கு தாயின் அரவணைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை யதார்த்தமாக சொல்கிறது இந்த வீடியோ அதை விட குழந்தைக்கு ஒரு தேவை என்று வரும் போது அதை தட்டிக் கழித்துவிட்டு தாய் தன் வேலையை தொடர்ந்து விட முடியாது.

ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளும் வந்தாலுமே அவர்களை சமாளிக்க வேண்டும். தாய்க்கு முன்னால் நிற்கக்கூடிய சவால்கள் இன்னும் ஏராளம்.

பாராட்டு :

பாராட்டு :

இது எதுவும் ப்ளான் செய்து எடுக்கப்பட்ட வீடியோ எல்லாம் இல்லை ஒரு நாள் இரவு மெலானியின் வீட்டில் நடக்கூடிய சம்பவம் இதே போன்ற சம்பவம் நம் வீடுகளிலும் நடந்து கொண்டிருக்கிறது இரவில் குழந்தைகள் இப்படியெல்லாம் சேட்டை செய்கிறார்களா என்பது பலருக்கும் இந்த வீடியோ பார்த்த பிறகாவது புரியட்டும்.

இந்த வீடியோவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதோடு மெலானிக்கும் ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தது.

வீடியோவில் :

வீடியோவில் :

சுமார் ஒன்றரை நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் முதலில் இரண்டு குழந்தைகளையும் அவரவர் அறையில் படுக்க வைத்துவிட்டு தன் அறைக்கு இரவு பத்து மணியளவில் தூங்க வருகிறார். ஒன்றரை மணி நேரத்தில் சுமார் 11.20 மணிக்கு மூன்றாவது குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு கட்டிலுக்கு வருகிறார்.

காது வலி :

காது வலி :

குழந்தை சிறிது நேரம் விளையாடுவது, மெலானியிடம் தாய்ப்பால் குடிப்பது, சிறிது நேரம் தூங்குவது மீண்டும் தாய்ப்பால் என மெலானியை தூங்கவிடாமல் செய்கிறது. இரவு ஒரு மணி வாக்கில் இரண்டாவது குழந்தை அழுது கொண்டே வருகிறது.

தனக்கு இன்னமும் காது வலிக்கிறது என்று சொல்ல அந்த குழந்தையை தூக்கி மார்பில் சாய்த்து படுக்கிறார்.

சமாதானம் :

சமாதானம் :

சிறிது நேரம் தன் மார்பிலும் சிறிது நேரம் தன் அருகிலும் படுக்க வைத்துக் கொள்கிறார். பின் மீண்டும் அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த குழந்தையின் அறைக்கு சென்று படுக்க வைக்கிறார். இப்போது மூன்றாவது குழந்தையும் மெலானியும் மட்டுமே இருக்கிறார்கள்.

மறுபடியும் விளையாடுவது தாய்ப்பால் குடிப்பது, என போக்கு காட்டிக் கொண்டேயிருக்கிறது அந்த குழந்தை.

அம்மா எந்திரி :

அம்மா எந்திரி :

ஒரு வழியாக மெலானி நன்றாக தூங்கிப் போக மூன்றாவது குழந்தை மெலானியை முகத்தை தட்டி எழுப்புகிறது. குழந்தை எழுப்பும் போது விடிந்திருக்கிறது. இரவு முழுவதும் தூக்கமின்றி அப்போது தான் தூங்க ஆரம்பித்திருப்பார் அதற்குள் விடிந்திருக்கும்.

எழுந்து வெளியே வந்தால் மற்ற இரண்டு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மூன்றாவது குழந்தையை இடுப்பில் வைத்தபடியே தனக்கான உணவை கலந்து அன்றைய ஓட்டத்திற்கு தயாராகிவிடுவார் மெலானி.

ஃபிட் மாம் :

ஃபிட் மாம் :

குழந்தை பிறந்தவுடன் ரெஸ்ட்,குழந்தையை கவனிக்கிறேன் என்று சொல்லி பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் உடலை கவனித்துக் கொள்ள மறந்து விடுவார்கள் அவர்களுக்காகவே மெலானி ஒரு இணையதள பக்கத்தை ஆரம்பித்து அதில் தாய்மார்கள் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள், ஹெல்த் டிரிங்க்ஸ்,அழகு குறிப்புகள் ஆகியவற்றை எல்லாம் பகிர்ந்து வருகிறார்.

இது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மெலானி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ இது தான்.... ஒரு இரவு மெலானிக்கு எப்படி கழிகிறது என்பதை பார்க்க இதை க்ளிக் செய்யுங்க 

Read more about: insync pulse
English summary

CCTV Footage Explains How mother Spent one night

CCTV Footage Explains How mother Spent one night
Story first published: Tuesday, April 17, 2018, 13:00 [IST]