Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினை அதிகரிக்குமாம்...! -
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
பங்குனி உத்திரத்துக்கு 1 கப் பச்சை பயறு இருந்தா இந்த மாதிரி டக்குனு பாயாசம் பண்ணுங்க...டேஸ்ட் அமோகமா இருக்கும் -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் டாப் 5 ஸ்டார் தொகுதிகள்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகும் டாப் 10 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சுட்ட கத்திரிக்காய் சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
கம்ப்யூட்டர் போல அசாத்திய நினைவாற்றல் கொண்ட 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா? -
கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ரெசிபி...வாழைக்காயை இந்த மாதிரி செய்யுங்க... மட்டன் சுக்கா மாதிரியே இருக்கும்!
நோயாளியுடன் உடலுறவில் ஈடுபட்ட நர்ஸ், டாப்லெஸ் படங்களை தோழிகளுடன் பகிர்வு!
நோயாளியுடன் உடலுறவில் ஈடுபட்ட நர்ஸ், டாப்லெஸ் படங்களை தோழிகளுடன் பகிர்வு!
நாம் கற்சிலைகளுக்கு அடுத்து கடவுளாக பார்ப்பது மருத்துவர்களை மட்டும் தான். வக்கீலிடமும், டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது, அவர்கள் நம்மையும், நமது வாழ்வையும் காப்பாற்ற போராடுபவர்கள் என்று கூறுவர்.
ஆனால், இன்று அனைத்து துறைகளுடன் சேர்ந்து மருத்துவமும் பொருளாதார ரீதியாக பெரும் லாபம் ஈட்டும் துறையாக மாறிவிட்டது. சொல்லப் போனால், மற்ற துறைகளை எல்லாம் தாண்டி மருத்துவம் தான் முதல் இடத்தில் லாபமீட்டி வருகிறது.
மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்டதால் தானோ என்னவோ, கடவுளாக காணப்பட்ட மருத்துவர்களில் சிலர் எமனாக மாறிவிட்டனர். எமனாக மட்டுமல்ல, சிலர் கொஞ்சம் கேவலமான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று கூட பரிசோதனை செய்ய தெரியாது இறப்பு சான்றிதழ் அளிக்கும் டாக்டர்கள், மன நோயாளியுடன் உடலுறவில் ஈடுபடும் நர்ஸ், இறந்த நபர்களை கேலியாக படம் எடுத்துக் கொண்டாடும் கொடுமை என மருத்துவ உலகின் மற்றொரு பக்கம் மெல்ல, மெல்ல வெளிவர துவங்கியுள்ளது.

கைதி!
ஸ்பெயின் சிறை ஒன்றில் கொன்சாலோ மொண்டாயோ (29) என்ற கைதி இருந்தார். திடீரென ஒரு நாள் காலை இவர் சிறையில் எழுந்திருக்காமல் படுத்திருந்தார். இவரை பரிசோதனை செய்த மூன்று மருத்துவர்கள் கொன்சாலோ இறந்துவிட்டார் என்று அறிவித்தனர். இதை அடுத்து இவரது உடல் பேக் செய்யப்பட்டு பிணவறைக்கு அனுப்பட்டது.

எல்லாம் ரெடி...
கிட்டத்தட்ட கொன்சாலோவின் உடலை இனி அறுத்து பிரத பரிசோதனை செய்ய வேண்டியது மட்டும் தான் பாக்கி. தடயவியல் நிபுணர் உடலை அறுக்க முற்பட்ட போது தான். பேக் செய்திருந்த பைக்குள் குறட்டை சப்தம் வருவதை கேட்டு அதிர்ந்துள்ளார். பிறகு, மூட்டையை அவிழ்த போது உடலில் அசைவுகள் இருந்துள்ளன. உடனே, அவசர உதவி அறைக்கு சென்ற பிரத பரிசோதனை நிபுணர், கொன்சாலோ உயிருடன் இருப்பதை கூறியுள்ளார்.

கையொப்பம்!
பிறகு தான் மூவரில் ஒருவர் மட்டும் அரைகுறையாக பரிசோதனை செய்தார் என்றும், மற்ற இரண்டு மருத்துவர்கள் ஒப்புக்கு கையொப்பம் இட்டனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கைதியின் உறவினர்கள் அந்த மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தையை கொன்ற மருத்துவர்கள்...
சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ஜோத்பூர் மருத்துவமனையில் நடந்த சம்பவம் இது. பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இரண்டு மருத்துவர்களுக்குள் உண்டான வாக்குவாதம் காரணமாக, பரிதாபமாக வயிற்றில் இருந்து சிசு இறந்து போனது. மருத்துவர்கள் அசோக் நைன்வால் மற்றும் எம்.எல். தாக் எனும் இருவரும் இந்த நிகழ்வுக்கு பிறகு சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

நடவடிக்கை!
அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருந்த போது திடீரென இரு மருத்துவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வை உடனிருந்த ஊழியர் வீடியோ எடுத்து, அதை டிவி நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டார். இந்த செய்தி மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய செய்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலி!
டானியலா போக்கியலி என்ற நபர் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் கைதானார். இவர் ஒரு நர்ஸ். இவர் இறந்த உடல்களுடன் கேலியான போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்து வந்தது அறியப்பட்ட காரணத்தால் இவர் கைதானார். இத்தாலியை சேர்ந்த இந்த பெண்மணி 38 பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததும் பின்னர் விசாரணையின் போது அறியப்பட்டது.
Image Soruce: Ansa

கொடூரம்!
இவர் டிடக்ட் செய்து எளிதாக கண்டறிய முடியாத அளவிற்கு விஷயத்தை, மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு கொடுத்து கொன்றதாக தெரியவந்தது. மேலும், இவர் அவர்களுடன் கேலியாக போஸ் கொடுத்து, தம்ப்ஸ்-அப் காண்பித்து படங்களும் எடுத்து வைத்திருந்தார்.
தன் ஷிப்ட் முடிந்து செல்லும் போது நோயாளிகளுக்கு மலமிளக்கி மருந்துகள் கொடுத்துவிடுவாராம். இதன் காரணத்தால் அடுத்த ஷிப்ட் பார்க்க வரும் நர்ஸ் சிரமத்திற்கு ஆளாவர் என்று கருதி இவர் கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Image Soruce: Ansa

இறந்தவர்களுடன் விளையாட்டு...
ரஷ்யாவை சேர்ந்த நர்ஸ் சிலர், இறந்த நபர்களின் உடலுடன் விளையாடி மகிழ்ந்து அதை படங்களும் எடுத்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின. நர்சுகள் இப்படி என்றால், அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் மகள், மார்பக அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிரும் போது புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
Image Soruce: East 2 West News

இழுக்கு!
இதுமட்டுமல்ல, அறுவை சிகிச்சைக்கு நடுவே நோயாளியின் மண்ணீரல் உடன் புகைப்படம், சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் உடலுறவில் ஈடுபடுவது போன்ற நிலையில் படங்கள் எடுப்பது என இவர்கள் பல கேவலமான வேலைகள் செய்துள்ளனர். மேலும், நோயாளிகளுக்கு அளிக்கவிருந்த சேமிக்கப்பட்ட இரத்த பையை ஏதோ ஜூஸ் குடிப்பது போல போஸ் கொடுத்தும் தங்கள் துறைக்கு இழுக்கை தேடித் தந்துள்ளனர் இந்த நர்ஸ் மற்றும் மருத்துவர்கள்.
Image Soruce: East 2 West News

செக்ஸ்!
கன்வி கவுண்டி என்ற பகுதியை சேர்ந்த மனநல மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிகோலா எனும் நர்ஸ் நோயாளிகளுடன் செக்ஸில் ஈடுபட்டு வந்தது மட்டுமின்றி, தன்னுடன் பணிபுரியும் நபர்களுடனும் உடலுறவில் ஈடுபட நிபந்தம் செய்துள்ளார். இதற்கு இவர் ஐம்பது யூரோ அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

விசாரணை!
மருத்துவ நிர்வாகம் விசாரித்த போது இவர் கடந்த டிசம்பர் 2013 - பிப்ரவரி 2015 வரையிலும் நோயாளிகளுடன் உறவில் இருந்து வந்தது அறிய வந்தது. இவர் தான் மேலாடை இன்றி நோயாளியுடன் இருக்கும் படத்தை தன்னுடன் பணிபுரியும் நர்சுகளுக்கு அனுப்பியதும் விசாரணையின் போது அறியவந்தது.

தடை!
மேலும், இவருடன் பணிபுரிந்த நபர் ஒருவர் நிகோலாவின் மொபைலில் டேட்டிங் தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட நிர்வாண படங்கள் இருப்பதாகவும் கூறி இருந்தார். தனது அனைத்து தவறுகளையும் விசாரணையின் போது நிகோலா ஒப்புக் கொண்டார். முடிவில், இத்தகைய குணம் கொண்டுள்ள ஒருவர் மருத்துவ துறையில் பணி செய்ய தகுதியற்றவர் என்று கூறி, வாழ்நாள் தடை அளித்தனர்.



Click it and Unblock the Notifications











