For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உலகை உலுக்கிய விசித்திர கொள்ளையர்கள்!

  |

  கஷ்டப்பட்டு உழைப்பதெல்லாம் தற்போது மிகவும் தேவையற்ற விஷயமாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். குறுக்கு வழி ஸ்மார்ட் வொர்க் என்பதைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். அது நீண்ட கால பயனை நமக்கு அளிக்காது என்றாலும் உடனடியாக கிடைக்க வேண்டும். உடனடியாக அதை அனுபவித்துவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது தான் கை கொடுக்கும்.

  ஒரு விஷயத்தை காத்திருந்து, அனுபவிக்கும் மனப்பக்குவமோ அல்லது நேரமோ நமக்கெல்லாம் இல்லை. எதுவாக இருந்தாலும் உடனே கிடைத்திட வேண்டும் , நினைத்தது உடனே நடந்திட வேண்டும் அப்படி நினைத்தவர்கள் பெரும்பாலும் க்ரிமினல்கள் வேலைகளில் தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.

  இது ஒன்றும் எளிமையான காரியமும் கிடையாது, அதற்காக பயங்கரமாக திட்டமிடுவார்கள். நம்மையெல்லாம் ஏமாற்றி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட சில ப்ரில்லியண்ட் க்ரிமினல்களைப் பற்றியும் அவர்கள் செய்த குற்றங்களைப் பற்றியும் இதில் தெரிந்து கொள்ளலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  டிபி கூப்பர் :

  டிபி கூப்பர் :

  போர்ட்லேண்ட்டில் உள்ள விமானநிலையத்தில் ஓரியண்ட் ஏர்லைன்ஸில் கமர்சியல் ஃப்ளைட் ஏறுகிறார். விமானத்தில் ஏறியதும் அங்கிருக்கும் பணிப்பெண்ணிடம் குடிக்க டிரிங்கஸ் கொண்டு வரச் சொல்கிறார் அவரிடம் ஒரு காகிதத்தை திணிக்கிறார் கூப்பர். அதில் என் கையில் இருக்கும் சூட்கேஸில் பாம் இருக்கிறது என்று எழுதியிருந்தது.

  பதறிப்போன பணிப்பெண்ணிடம் இந்த தகவலை கேப்டனிடம் சொல்லுமாறும் தனக்கு நான்கு பேராசூட் மற்றும் இருபது லட்சம் டாலர் பணமும் தருமாறு கேட்கிறார்.

  Image Courtesy

  கடலில் :

  கடலில் :

  அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் சியாட்டின் தரையிரக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. அங்கே பணமும் பாராசூட்டும் கொடுக்கப்படுகிறது. அங்கே விமானத்தில் இருந்த பயணிகளில் 36 பேரை மட்டும் இறக்கிவிடப்படுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக கூப்பர் சொன்ன இன்னொரு 36 பயணிகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

  அங்கிருந்து விமானம் மெக்சிகோ நகரத்திற்கு செல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறார் கூப்பர். பயணிகள் மற்றும் விமானிகளின் உயிரை கருத்திற்கு கொண்டு கட்டளைகள் எல்லாம் நிறைவேற்றப்படுகிறது. மெக்ஸ்கோ நகரத்திற்கு விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே பாராசூட் உதவியுடன் பணப்பெட்டியுடன் கடலில் குதித்து தப்பித்து விடுகிறார் கூப்பர்.

  1971 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. இன்று வரையில் யாரந்த கூப்பர், அவர் எதற்காக விமானத்தை கடத்தினார், அவருடைய கூட்டாளிகள் யார், கடலில் குதித்து எப்படி எங்கு தப்பிப்பிழைத்தார் , அவர் இன்றும் உயிருடன் தான் இருக்கிறாரா என்று எதற்குமே விடை தெரியவில்லை. இவர் குறித்து திரைப்படமும் எடுக்கப்பட்டது.

  Image Courtesy

  டெரிக் பெர்டீ ஸ்மால்ஸ் :

  டெரிக் பெர்டீ ஸ்மால்ஸ் :

  பெர்டீ லண்டனின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். பதினைந்து வயதாக இருக்கும் போதே, ரயில்வே ரெஸ்டாரண்ட் காரை சேதப்படுத்தியதாக கூறி போலீசார் இவரை கைது செய்தனர். அங்கே சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்படுகிறார்.

  அப்போதிருந்து பெர்டீயின் வாழ்க்கையே மாறிடுகிறது, தன் நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார். நாளடைவில் ஒரு கூட்டத்தையே தனக்கு பின்னால் சேர்ந்து கொண்டு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட ஆரம்பித்தார். லண்டனில் இருக்கும் பெரும்பாலான வங்கிகளில் கொள்ளையடித்தும் போலீசால் அவரை பிடிக்க முடியவில்லை இறுதியாக அவரது வீட்டை சோதனையிட்ட போது தான் இதுவரை வங்கிக் கொள்ளையில் ஈடுப்பட்ட நபர் இவர் தான் என்று தெரிய வரவே கைது செய்கிறார்கள்.

  Image Courtesy

  வேக்கும் கேங் :

  வேக்கும் கேங் :

  வீட்டில் பயன்படுத்துகிற வேக்கும் க்ளீனரைக் கொண்டு இவர்கள் திருடியிருக்கிறார்கள். அதற்காக வேக்கும் க்ளீனரில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். பிரான்ஸில் இருக்கக்கூடிய பதினைந்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும் அதன் கிளைகள் என கிட்டத்தட்ட அறுபது லட்சம் யூரோக்களை திருடியிருக்கிறார்கள்.

  Image Courtesy

  இரவில் :

  இரவில் :

  கார்ல் குகசைன் என்ற இவரை வெள்ளி இரவு திருடன் என்றே அழைக்கிறார்கள். முப்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வங்கிகளில் கொள்ளையடித்திருக்கிறார் இவர் கொள்ளையடித்த தொகை மட்டும் இரண்டு மில்லியன் டாலரைத் தாண்டும்.

  இவர் கொள்ளையடிக்கும் ஸ்டைல் தான் இவருக்கு ப்ளஸ்ஸாக இருந்திருக்கிறது,எந்த இடத்திலும் தன்னைப் பற்றிய சிறு துரும்பைக்கூட விட்டுச் செல்லமாட்டார். இவர் எப்போதும் ஒரு மாஸ்க் அணிந்து தான் கொள்ளையடிப்பார் அதனால் இவரது அடையாளம் கூட தெரியவில்லை.

  Image Courtesy

  சிக்கிய கார்ல் :

  சிக்கிய கார்ல் :

  கிட்டத்தட்ட இனி திருட்டுத் தொழில் போதும் வேறு எதாவது செய்யலாம் என்று முடிவெடுத்திருந்தார் கார்ல், வீட்டிற்குள் வைத்திருந்த ஆயுதங்களை,தான் வங்கியில் கொள்ளையடியக்க பயன்படுத்திய ஆயுதங்கள், மேப்ஸ், கண்ணாடி,டைமர்,மாஸ்க் உட்பட அப்போது பயன்படுத்திய பொருட்களை எல்லாம் பென்சல்வேனியாவின் ராட்னர் என்ற பகுதியில் அமைந்திருக்கும் தன் வீட்டிற்கு வெளியே வீசுகிறார்.

  அதனை அங்கே விளையாடிய சிறுவர்கள் பார்த்து விடுகிறார்கள். சிறுவர்கள் மூலமாக அவர்களது பெற்றோருக்கும், பின் போலீஸுக்கும் தெரியவருகிறது. தற்போது பதினேழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

  Image Courtesy

  போஸ்டன் ஆர்ட் :

  போஸ்டன் ஆர்ட் :

  1990 ஆம் ஆண்டு போஸ்டன் நகரில் உள்ள இசபெல்லா ஸ்டீவர்ட் கார்னர் மியூசியத்தில் ஒரு திருட்டு சம்பவம் நடக்கிறது. அங்கு காவலுக்கு இருந்த இரண்டு காவலர்களையும் கட்டிப்போட்டு விட்டு அங்கிருந்து மிகவும் விலை உயர்ந்த ஓவியங்களை திருடிச் சென்றுவிடுகிறார்கள்.

  அது எல்லாம் பெயர் பெற்ற ஓவியர்களால் வரையப்பட்டது ஆகும். வரலாற்றில் இதுவரை இவ்வளவு ஓவியங்கள் திருடு போனதேயில்லையாம். இன்றுவரை திருடிய ஓவியங்கள் என்ன செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

  Image Courtesy

  பத்து அடுக்கு பாதுகாப்பு :

  பத்து அடுக்கு பாதுகாப்பு :

  லியார்ண்டோ நோடர்பார்டோலோ என்பவர் இத்தாலியில் மிகவும் புகழ்ப்பெற்ற கொள்ளைக்காரனாகும். இவரும் இவருடைய சகாக்களும் சேர்ந்து ஆண்ட்வெர்ப் வைர நகைக்கடையில் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் விலையுயர்ந்த கற்களை திருடிச் சென்றிருக்கிறார்கள்.

  இங்கே பத்து அடுக்குகளாக காவலர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்ஃப்ரா ரெட் சென்சார்,டோப்லர் ரேடார்ஸ்,செஸிமிக் சென்சார் என மிக உயர்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் மீறி லியார்ண்டோ கொள்ளையடித்திருக்கிறார்.

  Image Courtesy

  பிங்க் பேந்தர்ஸ் க்ரூப் :

  பிங்க் பேந்தர்ஸ் க்ரூப் :

  இந்த கூட்டம் நகரத்தில் இருக்கக்கூடிய மிக விலையுயர்ந்த தங்க நகைக்கடைகளில் தான் இவர்கள் கொள்ளையடித்திருக்கிறார்கள். ஐரோப்பா, ஆசியா உட்பட கண்டம் விட்டு கண்டம் தாண்டி கொள்ளையடிக்கும் வல்லுனர்கள் இவர்கள். எப்போதும் கூட்டமாகவே செல்வார்களாம். கிட்டத்தட்ட 35 நாடுகளில் 340 கொள்ளையர்கள் உதவியுடன் மூன்று மில்லியன் யூரோவுக்கும் அதிகமாக கொள்ளையடித்திருக்கிறார்கள்.

  பெண் வேடமிட்டு கொள்ளையடிப்பது, கடைக்குள்ளேயே காரை மோதவிட்டு கொள்ளையடிப்பது என ஒவ்வொரு முறையும் வித்யாசமாக கற்பனை கூட செய்து பார்க்க முடியாதபடி கொள்ளையடிப்பது இவர்களது ஸ்டைலாக இருந்திருக்கிறது.

  Image Courtesy

  300 மில்லியன்!

  300 மில்லியன்!

  ஜப்பானில் இதுவரை கொள்ளை அடிக்கப்பட்டதிலேயே மிக அதிகமான தொகை இது தான்! கிட்டத்தட்ட 300 மில்லியன் யென், அதவாது 80 லட்சம் டாலர் மதிப்பிலான பணத்தை வங்கிக்கு சொந்தமான வண்டியில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

  வழியில் அந்த வண்டியை போலீஸ் ஒருவர் நிறுத்துகிறார். கொள்ளையர்கள் வங்கி அதிகாரி வீட்டை சேதப்படுத்தியிருக்கிறார்கள் அடுத்ததாக இந்த வண்டிக்கு தான் குறிவைத்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது என்று பதற்றத்துடன் சொல்கிறார். வந்து சொல்வது போலீஸ் அதிகாரி ஆயிற்றே... உள்ளேயிருந்த நான்கு பேரும் காரை விட்டு இறங்குகிறார்கள்.

  Image Courtesy

  போலீஸ் வேடம்! :

  போலீஸ் வேடம்! :

  உடன் காரை பரிசோதிப்பது போல அந்த போலீஸ் அதிகாரி சுற்றி வருகிறார். கீழே குனிந்து எதையோ தேட புகை வருகிறது. பாம்.... என்ற கத்த நான்கு பேருமே தெரிந்து ஓடுகிறார்கள் அடுத்த நொடி காரில் உட்கார்ந்து பறந்து விடுகிறார் போலீஸ் அதிகாரி.

  அதன் பிறகு தான், வந்தது போலீஸ் அதிகாரியே கிடையாது... பணத்தை கொள்ளையடிக்க அவர் போட்ட நாடகம என்று தெரிந்திருக்கிறது. இன்று வரையில் அந்த கொள்ளைக்காரனை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Brilliant Criminals in The History

  Brilliant Criminals in The History
  Story first published: Monday, April 2, 2018, 12:43 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more