For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாப்பிங் மாலில் ஜாலியாக பிறந்த மேனியாக உலா வந்த பாடி பெயிண்டிங் மாடல்! #வீடியோ

ஷாப்பிங் மாலில் ஜாலியாக பிறந்த மேனியாக உலா வந்த பாடி பெயிண்டிங் மாடல்! #வீடியோ

By John
|
Body Painted Model Walked Around a Mall Naked!

ஜென் செய்டல் ஒரு தொழில்முறை பாடி பெயிண்டிங் கலைஞர். இவரும், இவரது மகளும் இணைந்து மாடல் அழகிகளை கொண்டு பாடி பெயிண்டிங் செய்து நிறைய நிகழ்சிகள் செய்து வருகின்றனர்.

இவர்கள் ஒருமுறை மாடல் அழகி ஒருவரை வரவழைத்து மூன்று மணி நேரம் செலவழித்து அந்த மாடல் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் உடை அணிந்திருந்தது போல பாடி பெயிண்டிங் செய்தனர்.

நிஜமான உடை என்று அவர்கள் அந்த மாடலுக்கு உடுத்த கொடுத்தது என்பது தாங் வகை உள்ளாடை மற்றும் ஸ்கார்ப் மட்டும் தான். மற்றபடி, இந்த பாடி பெயிண்டிங் முடிந்து, அந்த மாடலை ஒரு மாலுக்கு அழைத்து சென்று ஜாலியாக வந்த போது அவர் ஏறக்குறைய 95% நிர்வாண உடலுடன் தான் இருந்தார்.

பெரும்பாலும் முதலில் அந்த மாடலை அனைவரும் சகஜமாக தான் கண்டனர். காரணம், உடன் சென்ற ஜென் மற்றும் அவரது மகளும், அந்த மாடலுக்கு செய்த பாடி பெயிண்டிங் போன்ற உடைய தான் அணிந்திருந்தனர்.

ஆனால், மிக அருகில் அந்த மாடலை கண்டவர்கள் தான் அதிர்ச்சி அடைந்தனர். அருகாமையில் கண்டவர்களுக்கு மட்டும் தான் அந்த மாடல் நிர்வாணமாக பாடி பெயிண்ட் செய்த உடலுடன் உலா வந்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

சிலர், உடனே தங்கள் கேமராவை எடுத்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். சிலர் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். ஜென் மேற்கொண்ட இந்த வினோத முயற்சி இணையங்களில் வைரலாக பரவின.

அடிக்கடி நிறைய நிகழ்சிகள் மற்றும் விழாக்களில் ஜென் பாடி பெயிண்டிங் செய்ய பங்கெடுத்துக் கொள்வதுண்டு. சிலர் முறை ஜென் தனக்கு தானே பாடி பெயிண்டிங் செய்துக் கொள்கிறார். பாடி பெயிண்டிங் ஆர்டிஸ்ட்டான ஜென்னை இன்ஸ்டாவில் 3.7 இலட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இதுவரை 206 பதிவுகள் இட்டிருக்கிறார் ஜென்.

ஜென் நிறைய ஆண், பெண் மாடல்களை வைத்து பொதுவாக நாம் உடுத்துவது போன்ற உடையை தத்ரூபமாக பாடி பெயிண்ட் செய்து, அவர்களை பொதுமக்கள் கூடும் பொதுவிடங்களில் உலாவவிட்டு மக்களை வியப்படைய செய்கிறார்.

ஜிம், பார்க், யோகா, ஷாப்பிங் மால், மார்கெட் ஸ்ட்ரீட் என்று மக்கள் வந்து செல்லும் பொது இடங்களில் தனது முயற்சியை பலமுறை செயல்படுத்தி இருக்கிறார் ஜென். ஜென் இது போல நிறைய பாடி பெயிண்டிங் செய்திருந்தாலும், கடந்த ஓராண்டு காலமாக அடிக்கடி இணையத்தில் நிறைய ஷேர் ஆவது ஜென் மேற்கொண்ட இந்த விசித்திர முயற்சி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source and Courtesy - Jen Seidel / jenthebodypainter| Instagram

உலகின் பல நாடுகளில் பாடி பெயிண்டிங் போட்டிகள் மற்றும் திருவிழாக்கள் நடக்கின்றன. இவற்றில் குதுகலமாக பங்கெடுத்துக் கொள்ள ஒரு கூட்டம் இருக்கிறது என்றால், கண்டுகளிக்க பெரும் கூட்டம் கூறுகிறது.

#2

#2

Image Source and Courtesy - Jen Seidel / jenthebodypainter| Instagram

90 களின் இறுதிகளில் இருந்து இந்த பாடி பெயிண்டிங் காலண்டர் போட்டோ ஷூட்களில் இடம்பெற துவங்கின. ஆரம்பக் காலக்கட்டங்களில் மாடல்கள் மட்டுமே இதில் ஆர்வம் காட்டினார்கள். பிறகு, மெல்ல, மெல்ல ஸ்போர்ட்ஸ் பர்சனாலிட்டிகள் மற்றும் பிரபலங்களும் இதற்கு ஆர்வம் காட்ட துவங்கினர்.

#3

#3

Image Source and Courtesy - Jen Seidel / jenthebodypainter| Instagram

சிலர் வெளியில் இருந்து இதை ஒரு இச்சை காரியமாக காண்கிறார்கள். ஆனால், ஓவியம் போன்ற ஒரு கலையாக தான் பாடி பெயிண்ட் செய்துவரும் நபர்கள் கருதுகிறார்கள். சிலர் பொழுதுபோக்குக்காக செய்கிறார்கள். சிலர் இதை தங்கள் தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

#4

#4

Image Source and Courtesy - Jen Seidel / jenthebodypainter| Instagram

பிரபலமான நிறுவனங்களுக்கு அல்லது பெரும் நிகழ்சிகள், விழாக்களுக்கு பாடி பெயிண்ட் செய்ய திறமையான கலைஞர்களை வலைவீசி தேடுகிறார்கள். பாடி பெயிண்டிங் மட்டுமே செய்து கைநிறைய சம்பாதிக்கும் கலைஞர்களும் இருக்கிறார்கள்.

#5

#5

Image Source and Courtesy - Jen Seidel / jenthebodypainter| Instagram

பாடி பெயிண்ட் செய்யும் கலைஞர்கள் என்று மட்டுமின்றி, இதற்கு மாடலாக வருவோருக்கும் நிறைய பணம் கிடைக்கிறது. என்ன தான் காசை தூக்கிக் கொடுத்தாலும் அவ்வளவு லேசில் பாடி பெயிண்டிங்கிற்கு மாடல்கள் கிடைத்துவிட மாட்டார்கள். பலர் கூச்சம் காரணமாக இதற்கு சம்மதிப்பது இல்லை.

#6

#6

Image Source and Courtesy - Jen Seidel / jenthebodypainter| Instagram

போட்டோஷூட், போர்ட்போலியோ போன்றவைக்கு கூட மாடல்களை பிடித்துவிடுவது எளிது. ஆனால், பாடி பெயிண்டிங் விழாக்கள், போட்டிகளுக்கு மாடல்கள் பிடிப்பது கொஞ்சம் கடினம் தான். போட்டி நடக்கும் இடத்தில் கலைஞர்கள், மாடல்கள் என்பதை தாண்டி, பார்வையாளர்கள் பலர் கூடி இருப்பார்கள். அனைவர் முன்னிலையில் மணிக்கணக்கில் நிர்வாணமாக நிற்க பலர் தயக்கம் காரணமாக முன் வருவதில்லை.

#7

Image Source and Courtesy - Jen Seidel / jenthebodypainter| Instagram

ஆயினும், கடந்த பத்து ஆண்டுகளாக இந்த பாடி பெயிண்டிங் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. நம்ம ஊரில் புலி வேஷம் கட்டி ஆடி வந்தது போன்ற சாயல் இருந்தாலும். கடந்த சில ஆண்டுகளாக பாடி பெயிண்டிங்கையே தத்ரூபமாகவும், குலோயிங் மற்றும் 3D எப்பெக்ட் கொடுக்கும் ரேஞ்சுக்கு எடுத்து செல்கிறார்கள் சில கலைஞர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Body Painted Model Walked Around a Mall Naked!

Jen Seidel is a professional body painter. She painted a model body and walked around in a mall. The model just wore a thong, a hat and scarf. But, Basically she was naked and mostly no one noticed that.
Desktop Bottom Promotion