For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹரிஹர ராஜா ஷர்மா என்கிற எச். ராஜா பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

ஹரிஹர ராஜா ஷர்மா என்கிற எச். ராஜா பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

By Staff
|

Recommended Video

ஹரிஹர ராஜா ஷர்மா என்ற எச் ராஜா யார் ? அவரின் பூர்விகம் என்ன?- வீடியோ

சமீப காலமாக நெட்டிசன்களுக்கும், மீம் கிரியேட்டர்களுக்கும் பிடித்தமான பெயர் எச். ராஜா. அதே போல சமீப காலமாக தமிழக அரசியல்வாதிகள், பெரியார் ஆதரவளார்கள், தமிழின போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள், ஏன் தமிழகத்தில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காத நபராகவும் மாறி வருகிறார் எச்.ராஜா.

ஒரு நபர் கூறும் கருத்து அல்லது ஒரு செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பு. அதிலும் அரசியல் ரீதியான எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால், பா.ஜ.க-வின் எச்.ராஜா எதிர்ப்பு தெரிவிக்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் மிகுந்த அளவில் மனதை புண்படுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் தான் அமைகின்றன.

இப்படி சர்ச்சை நாயகனாக திகழும் எச். ராஜா யார்? இவரது பூர்வீகம் குறித்து இணையத்தில் பரவும் ஒரு குட்டி கதை என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு!

பிறப்பு!

எச்.ராஜா பிறந்தது தஞ்சாவூர் அருகே அமைந்திருக்கும் மிலட்டூர் / மெலட்டூர் எனும் சிறிய கிராமத்தில். இவர் தனது பள்ளிப்படிப்பை அழகப்பா பள்ளியில் படித்திருக்கிறார். வணிகவியல் படித்த எச். ராஜாவுக்கு விவசாயத்திலும் பெரும் ஆர்வம் உண்டு. இவர் காளைகளும் வளர்த்து வருகிறார்.

MOST READ: உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!!

இயற்பெயர்!

இயற்பெயர்!

சமூக தளங்கள் மற்றும் தமிழக, இந்திய அரசியலில் அடிக்கடி தனது அறிக்கைகளால் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் சர்ச்சை நாயகன் எச் ராஜாவின் முழுப்பெயர் ஹரிஹர ராஜா ஷர்மா என்பதாகும். ஹரிஹரன் என்பது எச். ராஜாவின் தகப்பானார் பெயராகும்.

கல்வி!

கல்வி!

எச். ராஜா மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வணிகம் (காமர்ஸ்) பட்டப்படிப்பு படித்து முடித்தவர் ஆவார். வணிகவியல் படித்த முடித்த பிறகு எச். ராஜா சட்டம் படித்தார். இவர் அரசியலில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு முன்னர் பட்டயக் கணக்கீடு எனப்படும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் வேலை செய்து வந்தார்.

தேர்தல்!

தேர்தல்!

எச். ராஜா இதுவரை ஐந்து முறை தேர்தலில் நின்றிருக்கிறார். இதில் தமிழக சட்டமன்ற தேர்தலில் இரண்டுமுறை மற்றும் லோக் சபா தேர்தலில் இரண்டு முறை ஆகும்.

இதில் 2001ல் காரைக்குடி தொகுதியில் நின்று ஒரே ஒருமுறை மட்டுமே இவர் வெற்றிக் கண்டிருக்கிறார். மற்ற நான்கு முறையும் இவர் தோல்வி மட்டுமே அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தநா சட்டசபை தேர்தல்!

தநா சட்டசபை தேர்தல்!

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது எச். ராஜா பெற்ற வாக்கு கணக்கு

2001ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக காரைக்குடி தொகுயில் போட்டியிட்டு 54,093 (48.40%) வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் எச். ராஜா.

2006ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆலந்தூர் தொகுயில் போட்டியிட்டு வெறும் 9,298 (3.27%) வாக்குகள் மட்டுமே பெற்று நான்காவது இடத்தைப் பிடித்து படுதோல்வி கண்டார் எச். ராஜா.

2016ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக தியாகராய நகர் தொகுயில் போட்டியிட்டு 19,888 (14.01%) வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து தோல்வியை சந்தித்தார் எச். ராஜா.

லோக்-சபா தேர்தல்!

லோக்-சபா தேர்தல்!

லோக் சபா தேர்தலில் போட்டியிட்டு எச். ராஜா பெற்ற வாக்கு கணக்கு!

1999ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிவகங்கை தொகுயில் போட்டியிட்டு 2,22,267 (36.340%) வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை மட்டுமே பிடித்து தோல்வி அடைந்தார் எச். ராஜா.

2014ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிவகங்கை தொகுயில் போட்டியிட்டு 1,33,763 (13.02%) வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்து தோல்வி அடைந்தார் எச். ராஜா.

MOST READ: மோசமான வாய் ஆரோக்கியத்தால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்

இவரது பூர்வீகம் என்ன?

இவரது பூர்வீகம் என்ன?

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க ஆதரவாளர் இந்து மத ஆதரவாளர் எச். ராஜாவின் பூர்வீகம் என்ன என்பது பலருக்கும் தெரியாது. ஆனால், இவரது பூர்வீகம் இன்னது, இவரது குடும்பம் எப்படி தமிழகம் வந்தது என்பர் இணையங்களில் ப்ளாக்குகளில் (Blog) ஒரு குட்டி அரசல்புரசல் கதை பகிரப்பட்டு வருகின்றன.

அது என்ன கதை?

அது என்ன கதை?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் தான் எச். ராஜாவின் அப்பா ஹரிஹர ஷர்மா. இவர் தமிழ் நாட்டில் தமிழ் கற்றுக் கொடுத்து கொடுக்கும் வேலை செய்துக் கொண்டிருந்தார் என்றும். முக்கியமாக ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மற்றும் வட இந்தியர்களுக்கு இவர் அதிகம் தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் என ஆரம்பமாகிறது அந்த அரசல்புரசலாக இணையங்களில் பரவும் கதை.

ஊடுருவல்!

ஊடுருவல்!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன என்றும். அதில் ஒன்றாக தான் ஹரிஹர ஷர்மாவும் தமிழகத்திற்கு வந்தார் என்றும் தொடர்கிறது அந்த செவிவழி கதை.

ஹரிஹர ஷர்மா என்ன தான் தமிழ் கற்றுக் கொடுக்கும் நபார இருந்தாலும் கூட, அவரது தமிழுமே தமிழர்கள் பேசும் தமிழ் போல அச்சு அசலாக இன்றி, வட இந்தியர்கள் பேசும் கலப்பு தமிழாக தான் இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிள்ளைகள்!

பிள்ளைகள்!

தங்களால் தமிழை சரியாக கற்றுக் கொள்ளவும், அதன் பால் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பரப்ப முடியாத காரணத்தால், அன்று பலர் தங்கள் குழந்தைகளை தமிழ் கற்றுக்கொள்ள இங்கேயே பள்ளிகளை சேர்த்தனர் என்றும். அப்படியாக சிறுவயதில் தமிழ் கற்க தமிழ் பள்ளியில் சேர்க்கப்பட்டவர் தான் எச். ராஜா என்றும் நீள்கிறது அக்கதை!

எது உண்மை?

எது உண்மை?

ஆக, ஆர்.எஸ்.எஸ்'ன் தமிழக ஊடுருவலாக வந்தவர் தான் எச்.ராஜா என்று பல அழமான, பகிரங்கமான கருத்துக்களை முன்வைக்கிறது அந்த அரசல்புரசலான பகிர்வு கதை. இது உண்மையா, பொய்யா? நிஜமாகவே எச். ராஜாவின் பூர்வீகம் என்னவென்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.

MOST READ: எமன் உங்களை நெருங்கிவிட்டார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

தேசிய செயலாளர்!

தேசிய செயலாளர்!

கடந்த 2014-களுக்கு பிறகு எச்.ராஜா ஒரு சர்ச்சை நாயகனாக மட்டுமே இருக்கிறார். அந்த ஆண்டு தான் எச். ராஜா பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். அன்றில் இருந்து இன்று வரை பல சமயங்களில் கருத்து கூறுகிறேன் என்று இவர் குட்டையைக் குழப்பி சர்ச்சைகளை எழுப்புவதை தான் தனது வேலையாக பின்பற்றி வருகிறார்.

சர்ச்சை நாயகன்!

சர்ச்சை நாயகன்!

2014ம் ஆண்டு பொதுவெளியில் பெரியார், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் மனம் புண்படும் வழியாகவும், தீங்கிழைக்கும் வகையாகவும் பேசி வருகிறார் என எச். ராஜா மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது.

பிறகு, இரு குழுவினர் / மதத்தினர் மத்தியில் கலவரம் தூண்டும் வகையில் பேசுகிறார் என இவர் மீது சென்னை உயர் நீதிமன்றம் எப்.ஐ.ஆர் பதிய காவலர்களுக்கு ஆணையிட்டது.

சாரணர் தேர்தல்!

சாரணர் தேர்தல்!

கடந்த சாரணர் தேர்தலில் இவர் வெற்றி பெற முடியாமல், பதிவான 286 வாக்குகளில் வெறும் 52 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இதன் பின்னரே இவர் சமூக தளங்களில் கேலிக்கு அதிகம் ஆளானார். அன்றில் இருந்து இன்று வரை இவர் என்ன ட்வீட் செய்தாலும், அறிக்கை வெளியிட்டாலும் இவரை ட்ரால் செய்வதற்கு என்றே ஒரு கும்பல் இருக்கிறது.

மெர்சல்!

மெர்சல்!

சென்ற வருடம் மெர்சல் படத்திற்கு எதிராக எச். ராஜா பேசி, வெளியிட்ட அறிக்கைகள் அப்படத்திற்கும், படத்தின் நாயகனான விஜய்க்கும் பெரும் பிரமோஷனாக அமைந்தது. மேலும், படம் தெனிந்தியா மட்டுமின்றி வட இந்தியா மற்றும் உலக அளவில் பல நாடுகளில் நல்ல கலக்ஷன் பார்த்தது.

மேலும், சில சமயம் இவரது ட்வீட் மற்றும் பேச்சு சமூக தளங்களில் சர்ச்சைக்குள்ளாக, தன் அட்மின் பதிவிட்டது என்றும், பேசியதே நானே இல்லை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றும் கூட இவர் கூறி இருக்கிறார்.

MOST READ: அடிக்கடி சோயா சாப்பிடுவீங்களா? அப்போ நீங்கதான் இத மொதல்ல படிக்கணும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Biography and Facts To Know About Harihara Raja Sharma Aka HRaja!

Biography and Facts To Know About Harihara Raja Sharma Aka HRaja!
Desktop Bottom Promotion