For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நிர்மலா தேவி பத்தி மட்டும் பேசினா எப்பிடி இவரப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!

  |

  தமிழகத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் சூடு பிடித்திருப்பது போல சில ஆண்டுகளுக்கு முன் பாட்னாவில் ஃபேமஸானவர் தான் பேராசிரியர் மட்டுக்நாத் சௌத்ரி. கடந்த 2006 ஆம் ஆண்டு தன்னைவிட முப்பது வயது குறைவான தன் வகுப்பு மாணவியான ஜூலியுடன் லிவ்வின் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக புகார் எழுந்தது.

  பாட்னா பல்கலைக்கழகத்தில் சௌத்ரி பேராசிரியராக இருந்த போது தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஒரு மாதம் பரபரப்பாக பேசப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு தவறான முன்னுதாரணம் காட்டுவதாக சொல்லி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  போராட்டம் :

  போராட்டம் :

  தனக்கு பிடித்த இணையை தேர்ந்தேடுக்கும் உரிமை எல்லாருக்கும் இருக்கிறது. தனி மனித சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது என்று சொல்லி போராட ஆரம்பித்தார் சௌத்ரி.

  அதோடு சௌத்ரியின் மனைவியும் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடுத்தார்.பீகார் மாநிலத்தின் லவ் குரு என்றே சௌத்ரி அழைக்கப்பட்டார். இவர் லவ் குரு என்று அழைக்கப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது .

  Image Courtesy

  காதல் பள்ளி :

  காதல் பள்ளி :

  இவர் பீகாரில் தன்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த ஊரான பகல்பூர் மாவட்டத்தில் ப்ரேம் பாத்சலா என்ற பெயரில் காதல் பள்ளி ஒன்றையும் துவங்கியிருக்கிறார். கல்லூரி நிர்வாகத்திடமிருந்து தான் பெற்ற ஓய்வூதிய பணம் ஜூலிக்காக ஒரு கார் வாங்க வேண்டும் மீதமிருக்கும் தொகை மொத்தமும் இந்த பள்ளிக்குத் தான் செலவிடுவேன் என்றார்.

  இந்த பள்ளி ஆரம்பித்ததற்கான அடிப்படை காரணமே காதல் பற்றிய புரிதலை மக்களிடம் ஏற்படுத்துவதற்குத் தான்.காதல் என்பது வெறும் உடல் சார்ந்த தேவை என்று பார்க்கப்படுகிறது ஆனால் இந்த சமுதாயத்தை கட்டமைப்பதிலிருந்து இயங்க வைப்பது முதல் எல்லாவற்றிலும் காதலின் பங்கு அவசியமானதாய் இருக்கிறது

  Image Courtesy

  வீடியோ :

  வீடியோ :

  இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து பரபரப்பாக பேசப்பட்டு கிட்டத்தட்ட பத்தாண்டுகளையும் கடந்து விட்டது. இந்நிலையில் சௌத்ரி மீண்டும் சென்சேசன் ஆகியிருக்கிறார். இம்முறை சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவினால் தான் இந்த பரபரப்பு.

  Image Courtesy

  அந்த வீடியோவில் :

  அந்த வீடியோவில் :

  மட்டுக்நாத் டேன்ஸ் என்று வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் பல பெண்களுடன் சௌத்ரி நடனமாடுகிறார். கல்லூரியில் ஒரு கேம்ப்கைன் நடத்திய போது ஜூலிக்கும் சௌத்ரிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது

  2004 ஆம் ஆண்டிலிருந்து பழக்கம் இருந்தாலும் 2006 ஆம் ஆண்டு வெளிப்படையாகவே லிவ்வின் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்தார்கள். ஜூலியை பார்ப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் ஆல்பா சௌத்ரியை திருமணம் செய்திருந்தார்.

  Image Courtesy

  ஜீவனாம்சம் :

  ஜீவனாம்சம் :

  மனைவிக்கு மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்தும் தொடர்ந்து போராடினார் சௌத்ரி. மனைவிக்கு பாட்னாவில் 2.5கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது. அதிலிருந்து வாடகைப் பணம் வருகிறது அதோடு மனைவியும் நாற்பதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.

  என்னுடைய முதலீடு அத்தனையையும் நான் அந்த வீட்டில் தான் போட்டிருக்கிறேன். ஏற்கனவே நிறைய வருமானங்களை வைத்திருப்பவருக்கு நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டார் சௌத்ரி

  Image Courtesy

  நஷ்ட ஈடு :

  நஷ்ட ஈடு :

  அதே போல தன்னை சஸ்பெண்ட் செய்த கல்லூரிக்கு எதிராகவும் போராடினார். இறுதியாக தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்தின் சம்பளம் மற்றும் நஷ்ட ஈடு என கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் வரை சௌத்ரிக்கு கிடைத்தது.

  அந்த பணத்தில் தான் தன் காதலியான ஜூலிக்கு காரும் காதல் பள்ளிக்கும் செலவு செய்திருக்கிறார். அவருடைய மனைவியும் விடவில்லை இறுதியாக சௌத்ரி சம்பாதிக்கிற மூன்றில் ஒரு பங்கை மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்றார்கள்.

  Image Courtesy

  வரி :

  வரி :

  பாட்னா பல்கலைக்கழகத்தின் ஹிந்தி பேராசிரியரான இவருக்கு கல்லூரி நிர்வாகம் 20.70 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஒப்புக்கொண்டது. ஆனால் தன்னிடம் பதினாறு லட்சம் மட்டுமே கொடுத்ததாகவும் மீதித் தொகை வரியாக கழிந்து விட்டதாகவும் சொல்லப்பட்டதாம்.

  இவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றவில்லை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட போல்னாத் எனப்படுகிற பிஎன் கல்லூரியில் பணியாற்றினார் என்றும் சொல்லப்படுவதுண்டு.

  Image Courtesy

  ஜேன்யு :

  ஜேன்யு :

  இவர் 1970களில் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தவர். இவர் ஜூலியுடன் சேர்ந்து ஜேஎன்யுவில் உள்ள சட்லஜ் விடுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

  கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு எழுதியது. இதே விடுதியில் 107வது அறையில் தங்கியிருந்தது என இந்த கல்லூரியில் ஏற்பட்ட பசுமையான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

  Image Courtesy

  காதலும் சமூகமும் :

  காதலும் சமூகமும் :

  அறிமுக உரை, இந்த கல்லூரி உடனான தன்னுடைய அனுபவங்களுக்குப் பிறகு மிக முக்கியமான விஷயத்தை பேச ஆரம்பிக்கிறார்.அது தான் காதலும் சமூகமும். இந்த சமூகத்தை கட்டமைப்பதில் காதல் மிக முக்கியமான பங்காற்றுவதாக நம்பினார்.

  தோற்றத்தில் வேண்டுமானால் நான் முதியவனாகவும் அவள் இளமையானவளாகவும் தெரியலாம் ஆனால் நாங்கள் மனதளவில் ஒரே வயதுடையவர்களாகவே உணர்கிறோம். ஜூலி குமாரிக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.முதன் முதலாக ஜூலியை சந்தித்த போது எனக்கு வயது 51.

  Image Courtesy

  கழுதைகள் :

  கழுதைகள் :

  இந்த சமூகத்தில் ஒவ்வொருவரும் கழுதைப் போலத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளைஞர்கள் ஒவ்வொருவரும் கேள்வியெழுப்ப வேண்டும். ஒவ்வொருக்கும் என்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் அவற்றை கவனித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும. எல்லாரும் செய்கிறார்கள் அதனால் செய்கிறேன் . பிறர் தவறு என்கிறார்கள் அதனால் தவிர்க்கிறேன் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பிறருக்காக என்று வாழ்வது கழுதைக்குச் சமம் என்கிறார்.

  Image Courtesy

   ஜூலி :

  ஜூலி :

  உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க உரிமையுண்டு. வயதானால் காதல் வராதா என்ன? நமக்கு நாமே ஒர் எல்லையை வகுத்துக்கொண்டு நின்றுவிடுகிறோம். ஜூலியை பிடித்தது காதலைச் சொன்னேன். முதலில் தயங்கியவர் பின் ஏற்றுக் கொண்டார்.

  காதல் என்பது வெறும் உடல் சார்ந்த தேவையாக மட்டும் பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

  என்று சொல்லும் சௌத்ரி லவ் பார்டி என்ற கட்சியையும் ஆரம்பித்து உத்திரபிரதேச தேர்தலின் போது தன் கட்சி சார்பில் சிலரை போட்டியிட வைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் யாருமே தேர்தலில் ஜெயிக்கவில்லை.

  Image Courtesy

  காதல் பாடம் :

  காதல் பாடம் :

  இதோடு காதல் குறித்தும், காதலில் சுய ஒழுக்கம், செல்ஃப் கன்ட்ரோல் ஆகியவை குறித்தும் பல முறை பேசியிருக்கிறார் சௌத்ரி. எனக்கு இந்தந்த உறுதி மொழிகளைக் கொடு எப்போதும் விட்டுச் செல்லாமல் உடனிருப்பேன் என்று சொல் என்று எழுதி வாங்கிவிட்டு,அவன் இருப்பான் என்று ஊர்ஜிதப்படுத்திய பிறகு வரும் காதலில் எனக்கு நம்பிக்கை இல்லை.

  இன்னும் சொல்லப்போனால் அதையெல்லாம் நான் காதலென்றே சொல்லமாட்டேன். அது ஒரு வகை புரிதல் அவ்வளவு தான்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Bihar Love Guru Who Opens School for Lovers

  Bihar Love Guru Who Opens School for Lovers
  Story first published: Tuesday, April 24, 2018, 12:28 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more