For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ரஷ்ய புதுமண தம்பதிகளின் எடக்குமடக்கான விவகாரமான புகைப்படங்கள்!

  |

  ஒவ்வொரு நாட்டிலும் திருமண சடங்களுகள் ஒவ்வொரு மாதிரியானதாக இருக்கும். இந்த மாடர்ன் டிஜிட்டல் யுகத்தில் உலகின் அனைத்து பகுதிகளிலும் இன்று கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம் திருமணத்தின் போது புகைப்படங்களும், வீடியோக்களும் எடுப்பது. திருமணத்தின் போது மட்டுமல்ல, ப்ரீ-வெட்டிங் ஷூட், போஸ்ட் வெட்டிங் ஷூட், சினிமாட்டிக் ஷூத்ட், கேண்டிட் ஷூட் என திருமணத்தின் போது பலவிதமான புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.

  மேற்கத்திய நாடுகளில் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் ரொமாண்டிக்காக திருமண படங்கள் எடுப்பது பிரபலமாக இருக்கிறது. அதே போல, கொரியன், சீனா போன்ற நாடுகளை பல வி.எப்.எக்ஸ் செய்து, காற்றிலே பறப்பது போல, நீரிலே மிதப்பது போல, மினியேச்சர் போன்று புகைப்படங்கள் எடுத்து அசத்துகிறார்கள். நம் ஊருகளில் புல்லட்டு ஓட்டுவது போல, விவசாய நிலங்களில் அசத்தலாக போஸ் கொடுப்பது போன்ற படங்கள் பிரபலமாக காணப்படுகிறது.

  ஆனால், ரஷ்யாவில் புதுமண தம்பதிகள் மத்தியில் கேலி, கிண்டல், நக்கல் நிறைந்த... டபிள் மீனிங் புகைப்படங்கள் எடுப்பது பரவலாக காணப்படுகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தர்பூசணி

  தர்பூசணி

  தர்பூசணி ஒரு ஆரோக்கியமான உணவு. பல காலமாக இயற்கையான முறையில் வயகாரா அளிக்கும் பலன்களை அளிக்கும் பழங்களில் தர்பூசணியும் ஒன்றென கூறப்பட்டு வருகிறது. எனவே, புதுமண தம்பதிகள் இந்த பழத்தை விரும்பி உண்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால், இப்படி ஒரு போஸில் அமர்ந்து உண்பது தான் ஏடாகூடமாக இருக்கிறது.

  சிக்கன்!

  சிக்கன்!

  ஒருவேளை சைவ விரும்பிகளாக இருப்பாங்களோ... பொண்ணு முகத்துல சந்தோஷம் தெரிஞ்சாலும், பையன் அய்யோ சிக்கன் போச்சேன்னு வருந்துற மாதிரி தான் இருக்கு. பொதுவா கல்யாணம் முடிஞ்சா கைய்யோட பறவைய பறக்கவிடுவாங்க. அதுல ஒரு ரொமான்ஸ் இருக்கும். இங்க பாருங்களேன் சிக்கன பறக்க விடுறாங்க. அதுல புது மணப்பெண் ட்ரெஸ் கவனிச்சீங்களா? பச்சை பசேல்ன்னு இருக்குள்ள... ஒருவேளை பீட்டாவா இருக்குமோ...? அப்படியே இருந்தாலும் கோழிய தோலுரிக்க விட்டிருக்க மாட்டாங்களே?

  ஜீபூம்பா!

  ஜீபூம்பா!

  கரக்டு தானே.. டிசைனருக்கு முன் அனுபவம் இருக்கும் போல, விளக்கு தேச்சு வர பூதம் மட்டமில்ல, இந்த பாட்டில் தேச்சு வர பூதமும் கேட்கிறத எல்லாம் செஞ்சே ஆகணும்... இல்லாங்காட்டி பட்டினி தான் எல்லா வகையிலும்.!

  நார்னியா உலகம்!

  நார்னியா உலகம்!

  நார்னியா படத்த பார்த்திருந்த.. உங்களுக்கு டக்குன்னு அந்த படத்துல வர ஒரு கதாப்பாத்திரம் நினைவுக்கு வரும். குதிரை பாதி, மனுஷன் பாதியா ஒருத்தர் வருவாப்புல. ஒரு வேளை நார்னியா படத்த ரசிச்சு பார்த்த ரசிகர்களா இருப்பாங்களோ... இது கூட நல்ல கிரியேட்டிவா தானுங்க இருக்கு. என்ன ஆங்காங்கே கொஞ்சம் கூடுதல் டச்சப் வேலைபாடுகள் பண்ணி இருக்கலாம்.

  சமவுரிமை?!

  சமவுரிமை?!

  இப்ப எல்லாம் சமவுரிமைங்கிற பேருல... எதெல்லாம் பண்ணக் கூடாதோ அதத்தான் பண்றாங்க. சமீபத்துல பெரிய முதலாளி நிகழ்ச்சியில இருந்த ஒரு பெண் பிரபலம், முன்ன எல்லாம் தமிழ் நாட்டு பெண்கள் மேலாடை அணியாம இருந்தாங்கங்கிற மாதிரியான பேச்செல்லாம் பேசி பரபரப்பா ஏற்படுத்தினாங்க.

  அப்ப இருந்திருக்கலாம்... ஆனா, இப்ப காலம் மாறிப் போச்சு. இப்ப ரோட்டுல நிர்வாணமா போறதே என் உரிமைன்னு கூட பேசிக்கிறாங்க சில நாடுகள்ல. அதனால, நாமளும் அப்படியே போக முடியுமா? நம்ம நாட்டுல தற்சமயம் ஆண், பெண் என்னென்ன செஞ்சா சரியா இருக்குமோ, சமூகத்துல பிரச்சனைகள் ஏற்படாம இருக்குமோ அத பின்பற்றுவது தான் ஒரு சரியான வழி. இல்லாங்காட்டி இப்படி தான் கொஞ்சம் நாறிடும்!

  கியூட்!

  கியூட்!

  கேலியா இருந்தாலும், இந்த ஜோடி கியூட்டா இருக்குங்க! பொஞ்சாதிய நெஞ்சுல வெச்சு தாங்குறவன் தான் நல்ல புருஷன்னு ஊரு பக்கம் சொல்லுவாங்க. அத அப்படியே டிட்டோவா பின்பற்றி இருக்காரு நம்ம கியூட் மாப்பிளை. நல்லா தானே இருக்கு!

  சாரி!

  சாரி!

  என்னடா பொண்ணு, கல்யாணம் ஆன நாளா பார்த்து இப்படி பார்ட்டியில ஃபுல் போதையில தலை கால் புரியாம விழுந்து கிடக்குன்னு யாரும் தவறா நினைச்சுட வேண்டாம். ஆக்சுவலா அவங்க டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்காங்க. இது b boyingன்னு சொல்லப்படுற ஒரு நடன வகை. அதான் தரையில போட்ட மீனு போல துள்ளி, துள்ளி சுத்தி, சுத்தி ஆடுவாங்களே அதே தான்.

  நியாயமாரே!

  நியாயமாரே!

  ஒருவேளை நம்ம ஊருல இந்த புடவை கொசுவம் சரிப்பண்ண கணவன்மார்கள் உதவுற மாதிரி அந்த ஊருல அவரு ஏதோ ஹெல்ப் பண்றாரு போல. என்ன இருந்தாலும், ஏனுங்க பாஸ்., வெட்ட வெளியில... மொட்ட வெயில்ல பண்ற காரியமா இது.. இதெல்லாம் வீட்டுக்குள்ள, இல்ல மறைவான இடமா பார்த்து வெச்சுக்க வேண்டாமா!

  பால்!

  பால்!

  பால் அடிச்சு விளையாடுங்க தப்பில்ல.. ஆனா, இப்படி பால் அடிச்சு விளையாடுனா.. லாஸ் அவருக்கு மட்டும் இல்ல, உங்களுக்கும் தான். முள்ள முள்ளால எடுக்கிறதுல ஒரு டெக்னிக் இருக்கு. ஆனா, இப்படி பால, பாலால அடிக்கிறதுல அப்படி என்ன டெக்னிக் இருக்கு? ரணகொடூரமால இருக்கு.

  அடப்பாவிகளா!

  அடப்பாவிகளா!

  ஐடியா எல்லாம் நல்லா தான் இருக்கு, கொஞ்சம் வி.எப்.எக்ஸ் சேர்த்து அங்கங்க.. இரதத்த தெறிக்க விட்டிருக்கலாம்... சந்தேகம் என்னன்னா.. இவங்க ரெண்டு பெரும் துப்பாக்கிய தூக்கிட்டு நிக்கிறாங்களா, இல்ல வெயிட்டு தாங்காம.. அதுமேல சாஞ்சு நிக்கிறாங்களா?

  பெயிண்டர்?

  பெயிண்டர்?

  மாப்பிள்ள பையன் பில்டிங் பெயிண்டர இருப்பாப்புல போல... ஒருவேளை கல்யாணத்துக்கு கூட லீவ் கிடைக்கலையோ...

  நிஜமாவே பெயிண்டர வேலை எல்லாம் கஷ்டம் தான். சாரம் கூட கட்டித் தரமாட்டாங்க. ஒத்த கயித்த நம்பி அந்தரத்துல தொங்கணும்.. அதும் எத்தன பெரிய உயரமா இருந்தாலும் சரி!

  செத்தாண்டா சேகரு!

  செத்தாண்டா சேகரு!

  இதுல இருக்குற கிரியேட்டிவிட்டு என்னனா.. பின்னாடி இருக்க யானை படத்த மாதிரியே இவங்க போஸ் கொடுக்குறாங்களாம். எல்லாம் சரி தாயி.. நீ சும்மா ரெண்டு விரல்ல தட்டுனாலே அந்த பய பொட்டுன்னு போற கண்டீஷன்ல தான் இருக்கான். இப்படி நசுக்குனா... அவனுக்கு முதராத்திரிக்கு பால் கொடுக்குறதுக்கு பதிலா.. மறு நாள் பால் ஊத்த வேண்டிய நிலைமை வந்திடும் போல.

  பாவம் மை சன்!

  பாவம் மை சன்!

  என்ன கிரியேட்டிவா இருந்தாலும், படத்துல சின்னஞ்சுறு மழழைய சேர்க்கிறது பாவம் மை சன். படம் கலர்புல்லா இருந்தாலும்.. சிம்ப்ளி வேஸ்ட்.. நோ கமண்ட்ஸ்!

  அடி, உதை!

  அடி, உதை!

  இந்த படத்த பார்த்ததும், கோவை சரளா - வடிவேலு எத்தனை பேருக்கு ஞாபகம் வந்துச்சு... தப்புன்னு கையா தூக்குங்க... சரி! இப்படி எல்லாம் எடுத்தா தான் நக்கல், கேலி... போன படத்துல ஒருத்தர் எடுத்திருந்ததுல எங்க இருந்துத்து நக்கல், கேலி? ஒருவேளை அவங்க ஊருல அதெல்லாம் தான் நக்கலா இருக்குமோ?!

  ஆப்ரிக்கா காட்டு புலி!

  ஆப்ரிக்கா காட்டு புலி!

  என்னம்மோ தெரியில.. இந்த படத்த பார்த்ததும்.. "ஆப்பிரிக்கா காட்டு புலி, ஆல் தின்னும் வேட்டை புலி, முன் ஜென்மன் மோப்பம் தேடி அலையுதே.."ங்கிறே ஆளவந்தான் பாட்டு தான் ஞாபகம் வருதா?. பொண்ணும் அழகா தான் இருக்கு, போட்டோவும் அழகா தான் இருக்கு. இப்படி எல்லாம் ஏதாவது கிரியேட்டிவ் காமிங்கப்பு!

  All Image Source: Bored Panda

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Awkward Russian Wedding Photographs!

  While in the Western world it's all about romance, beauty and gazing longingly into each others eyes, Russian couples choose to let their humor and personalities shine through.
  Story first published: Friday, July 20, 2018, 12:40 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more