For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  குடியை நிறுத்தறதுக்கு ஜோதிடத்துல ஏதாவது பரிகாரம் இருக்கா?... இருக்கே... இதுதான் அது...

  |

  குடிப்பழக்கம் மிக மோசமான பழக்கம் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஏன் அதை குடிப்பவர்குளுக்கே அதனால் ஏராளமான ஆரோக்கியக் கேடுகள் உண்டாகும் என்பது தெரியும். கல்லீரரல் செயலிழக்கும் என்று தெரிந்தும் அப்படி என்னதான் அந்த ஆல்கஹாலில் இருக்கிறது என்று தான் தெரியவில்லை. அவ்வளவு ஏன்?... அந்த சரக்கு பாட்டிலிலும் கூட குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் வீட்டைக் கெடுக்கும் என்று தானே எழுதப் பட்டிருக்கிறது. பிறகு ஏன் இப்படி குடிக்கிறார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  குடிப்பழக்கம்

  குடிப்பழக்கம்

  குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் புாகிறது. அது இன்றைய இளைஞர்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் ஃபேஷனாக இருந்து பின்னாட்களில் அதுவே பழக்கமாக மாறிவிடுகிறது. இன்றைய சூழலில் இளைஞர்கள் மிக அதிக அளவில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

  குடியை நிறுத்த

  குடியை நிறுத்த

  குடி மிகவும் ஆபத்தானது. அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று ஒரு கட்டத்தில் எல்லா ஆண்களுமே நினைக்கிறார்கள். ஆனால் அப்படி யுாசிக்கும் காலத்துக்கு முன்பாகவே அதன் மூலம் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படி திருந்துவது என்பது, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது தானே. அதை முதலில் மனதார உணர்ந்து கொண்டால் தான், நாம் திடமான ஒரு முடிவை மேற்கொள்ள முடியும்.

  ஜாதக பரிகாரம்

  ஜாதக பரிகாரம்

  மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பது உண்மை தான். ஆனாலும் அதற்கான முயற்சியை நாம் தானே எடுக்க வேண்டும். ஜாதகத்தில் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அதை நம்பியாவது களத்தில் இறங்கலாம். ஆம் ஜோதிடத்தில் கூட குடிப்பழக்கத்தை கைவிடுவதற்கான பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றை கொஞ்சம் நம்பிக்கையோடு முயற்சித்தாலே போதும். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடலாம்.

  குடிக்கு அடிமையாவதற்கு நம்முடைய ஜாதகக் கட்டங்களும் சில சமயங்களில் காரணமாகின்றன என்று தான் சொல்ல வேண்டும். அவற்றை எப்படி சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

  கிரக பலவீனம்

  கிரக பலவீனம்

  உங்களுடைய ஜாதகத்தில் சந்திரனுடைய கிரக திசையும் சனி பகவானின் திசையும் கூட உங்களுடைய குடிப்பழக்கத்துக்கு காரணமாக அமையலாம். அப்படி ககிரக பலவீனங்களின் காரணமாகவும் கூட, குடிப்பழக்கம் அதிகரிக்கும்.

  ராகு திசை

  ராகு திசை

  ராகுவினாலும் கூட குடிப்பழக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. ராகு உங்களுக்கு எதிராக இருந்ததென்றால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். கண்ட இடத்தில் குடித்துவிட்டு, கீழே விழுந்து கிடக்கும் அளவுக்கு மோசமாகி விடும். அதனால் ராகுவுக்கு பூஜை செய்தால், குடிப்பழக்கத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கொஞ்சம் குறைக்க முடியும்.

  வியாழன்

  வியாழன்

  குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பவர்களுடைய ஜாதகத்தில் முக்கிய கிரகங்கள் அத்தனையும் நிச்சயம் மிகவும் பலவீனமாக இருக்கும். குறிப்பாக, ஏற்கனவே அவரைப் பழிவாங்கிக் கொண்டும் ராகு திசை வியாழனையும் சேர்த்து பாதிக்கச் செய்யும்.

  பரிகாரம்

  பரிகாரம்

  கிரகங்கள் பலவீனமாக இருக்கிறது. அதனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டோம் என்பதெல்லாம் சரிதான். அதற்கு என்ன தான் பரிகாரம் என்று தானே கேட்கிறீர்கள். அதற்கு பெரிதான மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முதலில் ஒரு நல்ல ஜோதிடரைப் பார்த்து ஆலோசனை பெறுங்கள். ஏனெனில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான பரிகாரங்கள் பலனைத் தராது. உங்களுடைய ஜாதகத்துக்கு ஏற்ப கிரக நிலைகளை ஆராய்ந்த பின், அவரினி ஆலோசனையோடு நல்ல நாட்களில் ராகுவுக்கு உரிய பூஜைகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டு, அதை செய்து வாருங்கள். நிச்சயம் ராகு உங்களுடைய குடிப்பழக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து, பின் எல்லா நன்மைகளையும் அள்ளித் தருவார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Astrological Remedy To Quit Alcohol

  The habit of drinking is a very bad and people should not even think about it. Now a days it is seen that mostly youngsters drink just for enjoyment or bad friend circle.
  Story first published: Monday, June 11, 2018, 20:21 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more