சாவுக்கு தண்ணி காட்டியவர்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு!

Subscribe to Boldsky

கரணம் தப்பினால் மரணம் என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள். லேசாக அசந்து விடும் நேரத்தில் நடக்கிற கவனக்குறைவான பிரச்சனை நம் உயிரையே வாங்கிடும் அளவிற்கு ஆகிவிடுவதும் உண்டு. அதே நேரத்தில் மிகப்பெரிய விபத்தாக இருக்கும் அவர்களை பார்த்த மாத்திரத்தில் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று நினைத்திருப்பார்கள் ஆனால் சர்வசாதரணமாக பிழைத்து வந்திருப்பார்கள்.

அப்படி மரணத்திற்கே தண்ணிகாட்டிய சில அதிர்ஷ்ட்டக்கார நபர்களைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். அவர்கள் இது மாதிரியான விபத்துகளிலிருந்து தப்பிவிட்டார்கள் அதனால் நாமும் தப்பிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு ஏடாகூடாமான செயல்களில் எல்லாம் இறங்கிவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்கள் பாதுகாப்பு :

கண்கள் பாதுகாப்பு :

குழந்தைகள் விளையாடும் போது ஏன் பெற்றோர் உடனிருந்து கவனிக்க வேண்டும், சரி அவர்கள் பாட்டுக்கு விளையாடட்டும் என்று நிம்மதியாக எல்லாம் உட்கார்ந்து விடமுடியாது. இல்லையென்றால் இப்படித்தான் எதாவது ஏடாகூடமாக செய்துவிட்டு நிற்பார்கள்.

அம்பு எய்தி விளையாண்டிருக்கிறார்கள் இரண்டு சிறுவர்கள். அதில் ஒரு சிறுவன் எய்த அம்பு இன்னொரு சிறுவனின் கண்களை குத்தி ஒரு அடி அளவுள்ள கம்பி தலைக்குள்ளே நுழைந்து விட்டது. தலையில் ஆப்பிள் பழத்தை வைத்து அதற்கு குறிவைத்து இந்த அம்பு எரியப்பட்டிருக்கிறது ஆனால் தவறுதலாக சிறுவனின் கண்களை பதம்பார்த்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர்பிழைத்தான்.

Image Courtesy

கார் :

கார் :

கார் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற வாகனத்தில் இந்த அஸ்பெஸ்டாஸ் தகடுகளை வைத்து கொண்டு போயிருக்கிறார்கள். அப்போது அந்த வாகனம் சட்டன் ப்ரேக் போட அதிலிருந்த அஸ்பெஸ்டாஸ் பின்னால் வந்து கொண்டிருந்த கார் மீது மோதி கண்ணிமைக்கும் நேரத்தில் கார் வழியாகவே உள் நுழைந்து ஊடுருவி வெளியே வந்துவிட்டது.

நல்ல வேளையாக இந்த விபத்தின் போது ஓட்டினர் இருக்கையில் மட்டுமே ஒரு நபர் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லையாம்.

Image Courtesy

ட்ரெக்கிங் :

ட்ரெக்கிங் :

இண்டியானா பகுதியைச் சேர்ந்தவர் ரால்ட்சன். பதினோரு வயதில் பெற்றோர்கள் க்ளோரடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அங்கே கல்வி முடித்த பிறகு இவருக்கு இண்டெல் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவருக்கு ட்ரெக்கிங் செல்வது அதுவும் ஆபத்தான இடங்களுக்கு சவாலான பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் அதிகமானது. இதனைடுத்து தன்னுடைய வேலையை விட்டுவிட்டு ட்ரெக்கிங் செல்ல கிளம்பிவிட்டார்.

க்ளோரடாவில் இருக்கும் மலைப்பிரதேசங்கள் முழுவதும் ஏறி இறங்கியிருக்கிறார் ரால்ட்சன். கிட்டத்தட்ட 55 மாநிலங்களில் உள்ள மலைகளை ஏறி சாதனைப் படைத்திருக்கிறார் இந்த ரால்ட்சன்.

Image Courtesy

127 மணி நேரம் :

127 மணி நேரம் :

2003 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் உட்டாஹ் அமைந்திருக்கும் செங்குத்தான மலையில் ஏறத் துவங்குகிறார். திடிரென்று கால் இடறி இரண்டு பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறார். இவரது வலது கை பெரிய கல்லின் இடுக்குகளில் சிக்கிக் கொள்கிறது.

மேலே ஏறவும் முடியாமல் கீழே இறங்கவும் முடியாமல் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார் ரால்ட்சன். தன்னைக் காணாமல் யாராவது வந்து தன்னை மீட்பார்கள் என்று காத்திருக்கிறார். மிகப்பெரிய மலை அங்கே வெளியே நின்று கொண்டிருந்தாலே மற்றவர்களுக்கு தெரிவது கடினம் இதில் ரால்ட்சன் உள்ளே பாறைகளின் இடுக்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார் எப்படி காப்பாற்றுவது?

Image Courtesy

திரைப்படம் :

திரைப்படம் :

நேரம் சென்று கொண்டிருந்தது கிட்டத்தட்ட 127 மணி நேரம் வரை காத்திருந்தார் கிட்டத்தட்ட ஐந்தரை நாட்கள் அந்தரத்தில் பாறைகளுக்கு இடுக்கில் காத்திருந்தார். இதற்கு மேலும் காத்திருக்க முடியாது என்று நினைத்தவர் தான் கொண்டு வந்த கூர்மையான கத்தியாலேயே இடுக்கில் சிக்கியிருக்கும் தன் கையை வெட்டினார். முழங்கைக்கு கீழே அங்கேயே சிக்கியிருக்க உயிரைமட்டும் பிடித்துக் கொண்டு மேலே ஏறி வந்திருக்கிறார் ரால்ட்சன்.

இவரது கதையைத் தழுவி 127 ஹவர்ஸ் என்ற திரைப்படம் கூட எடுக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

ஷார்க் :

ஷார்க் :

மெக்கீலா மெடீனா என்ற பதினான்கு வயதுடைய சிறுமி கடலில் கடற்கரையோரம் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தன் முதுகில் ஏதோ படுவது போல இருக்கவே உடனேயே நீந்தி கரைக்குச் சென்றிருக்கிறார் அங்கே அவரது முதுகை பார்த்தவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாம். அவரது முதுகில் ஷார்க் கடித்ததற்கான அடையாளம் இருந்திருக்கிறது.

மிக லேசான காயமாகத்தான் ஷார்க்கின் கடி இருந்திருக்கிறது. இதற்காக எந்த மருத்துவ சிகிச்சை கூட எடுக்கவில்லையாம் மெக்கீலா.

Image Courtesy

கத்தியால் குத்து :

கத்தியால் குத்து :

22 வயதான ஜூலியா பப்புவா என்ற பெண் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது இவரை வழிமறித்த திருடர்கள் கத்தியால் குத்தியிருக்கிறார்கள். ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்திருக்கிறார். வீட்டில் வந்து பிறகு தான் அவரது பின் கழுத்துப் பகுதியில் கத்தி குத்தப்பட்ட நிலையிலேயே இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்கள்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரைப் பார்த்த மருத்துவர்களே அதிர்ந்து விட்டார்களாம். இன்னும் ஒரு இன்ச் ஆளமாக சென்றிருந்தால் கூட முதுகுத் தண்டையே பாதித்திருக்குமே என்றிருக்கிறார்கள். அதோடு இதை எப்படி அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது என்பது குறித்தும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பின் ஒரு வழியாக கழுத்தில் சிக்கியிருந்த கத்தி அகற்றப்பட்டது சுமார் பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

Image Courtesy

ஆணி :

ஆணி :

மீன் பிடிக்க பயன்படுகிற ஒரு வகையான கேஸ் மூலமாக இயக்கப்படுகிற துப்பாக்கியை பயன்படுத்தி ஏரியில் இருக்கிற மீன்களை பிடிப்பார்களாம். அதிலிருந்து கூர்மையான ஆணி வெளிவருகிறது. அப்படி மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனது தலையில் எதிர்பாராத விதமாக இந்த ஆணி மாட்டிக் கொண்டிருக்கிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது சுமார் பதினெட்டு இன்ச் கொண்ட ஆணி அந்த இளைஞனின் மண்டையோட்டில் ஊடுறுவி சென்றிருந்ததாம். சுமார் மூன்று மணி நேர அறுவை சிகிச்சையினை மேற்கொண்டு அதனை அகற்றியிருக்கிறார்கள். இவ்வளவு விரைவாக அவர் மீண்டு வருவார் என்று நாங்களே எதிர்ப்பார்க்கவில்லை என்று அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டார்களாம்.

Image Courtesy

33 ஆயிரம் அடி :

33 ஆயிரம் அடி :

வெஸ்னா வுலோவிக் என்ற பெண் விமானப் பணிப்பெண்ணாக இருந்திருக்கிறார். இவர் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான விபத்து ஏற்பட்டு விமானம் நொறுங்கி விழுந்திருக்கிறது. இதில் பயணித்த பலரும் இறந்துவிட்டார்கள் சுமார் 33000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுகிறார் வெஸ்னா. பாராஷூட் கூட இல்லாமல் குதித்த இவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய 66 வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

Image Courtesy

பாதி தலை :

பாதி தலை :

கார்லோஸ் என்பவர் கார் விபத்தில் சிக்கிக் கொள்கிறார் அதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கே இவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் எலும்பு, சதை, திசுக்கள் பெரும்பளவு சேதமடைந்திருப்பதாக சொல்கிறார்கள்.

அதனால் பாதி தலையை வெட்டியெடுக்க இன்னமும் காதல் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறார் கார்லோஸ்.

Image Courtesy

பத்து நாட்கள் :

பத்து நாட்கள் :

இதுவும் ஓர் விமான விபத்து குறித்த கதை தான். இந்த சம்பவம் 1971 ஆம் ஆண்டு நடந்திருக்கிறது அமேசான் காட்டிற்கு அருகில் பெருவியன் என்ற பகுதியில் விமனம் சென்று கொண்டிருந்த போது விமானம் விபத்திற்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. இதில் தப்பிய ஜூலியன் கோப்சீக்கு அப்போது வயது பதினேழு மட்டுமே. அந்த அடந்த காட்டுப் பகுதியில் சுமார் பத்து நாட்கள் வரை வெளியேற முடியாமல் தவித்திருக்கிறார். பின்னர் மீட்புப்படையினர் சென்று மீட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Amazing Stories of People Who Cheated Death

  Amazing Stories of People Who Cheated Death
  Story first published: Monday, April 9, 2018, 16:59 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more