For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சமூகவலைதளத்தை அதிகமா யூஸ் பண்றவங்களுக்கு மட்டுமே இதெல்லாம் புரியும்!

  |

  பல வரிகளில் புரியவைக்க முடியாத மிகப்பெரிய விஷயத்தை ஒரு ஓவியத்தில் எளிதாக புரியவைத்திட முடியும். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிற அவலங்கள். இவ்வளவு காலங்களாக நாம் செய்து கொண்டிருக்கிற தவறுகளை சுட்டிக் காட்டவும் இது பயன்படும்.

  இந்த ஓவியங்களை இத்தாலியை சேர்ந்த மார்கோ மெல்கர்ட்டி என்பவர் வரைந்திருக்கிறார். இவர் தற்போது மெக்ஸிகோவில் வாழ்ந்து வருகிறார். இவர் தனது ஓவியங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் அவற்றிலிருந்து சில சாம்பிள்கள் இங்கே

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  நிழலும் நிஜமும் :

  நிழலும் நிஜமும் :

  பலருக்கு முன்னால் தன்னை காட்டிக் கொள்கிறவர்கள் பிறரது குற்றங்களை எளிதாக பார்த்துவிடலாம் ஆனால் தன் குற்றத்தை கவனித்து அதனை உணர்ந்து சரி செய்வது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது அதை தன் ஓவியத்தின் மூலம் கச்சிதமாக உணர்த்தியிருக்கிறார்.

  ராஜகுமாரன் :

  ராஜகுமாரன் :

  இன்றைக்கு பல பெற்றோரின் எண்ணமாகவும் பெண்களின் கனவாகவும் இது தானே இருக்கிறது. தனக்கான வாழ்க்கைத்துணை எங்கிருந்தோ பறந்து வருவான் அவன் பெரும் செல்வந்தனாகவும் ராஜகுமாரனாகவும் இருப்பான் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.

  இயல்பு வாழ்க்கையில் அவையெல்லாம் சாத்தியமில்லை என்பது யாருக்கும் புரிவதில்லை அதனால் தங்களது திருமண வாழ்க்கையையே பெரும் இன்னல்களில் சிக்கிக் கொள்கிறார்கள்

  ப்ரோஃபைல் பிக் :

  ப்ரோஃபைல் பிக் :

  ஒவ்வொருவரின் ப்ரோஃபைல் படத்தை பார்த்து அவரது குணத்தை மதிப்பிட வேண்டுமென்று சொன்னால் நம் முடிவுகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தவறாகத்தான் முடியும். இந்த சமூக ஊடகங்கள் வந்ததிலிருந்து இந்த வழக்கம் அதிகரித்து வருகிறது. நாம் வாழும் வாழ்க்கை, சூழ்நிலை ஒரு மாதிரி இருக்கும். ஆனால் அதனை வெளியில் பகட்டாக அல்லது முற்றிலும் வேறு மாதிரியாகத்தான் நம்முடைய சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறோம்.

  ஆரோக்கியம் :

  ஆரோக்கியம் :

  ஒரு காலத்தில் செல்வத்தை தேடி அலைவதில் அவற்றை சேமிப்பதில் நம் காலம் ஓடியது. ஆனால் இன்றைக்கு செல்வம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது ஆனால அவற்றை அனுபவிப்பதற்கான வாழ்நாள் தான் இல்லை.

  ஆரோக்கியத்திற்காகவும், வாழ்நாளுக்காகவும் அதிகப்படியான செல்வத்தை செலவழிக்க வேண்டியுள்ளது.

  பாலியல் சீண்டல் :

  பாலியல் சீண்டல் :

  இன்றைய குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை டிவி முன்பாக தான் செலவிடுகிறார்கள். அவற்றிலிருந்து தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். அது குழந்தைகளுக்கான பொம்மை படமாக இருந்தாலும் அதில் காட்டப்படுகிற விஷயம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது என்பதை அசத்தலாக உணர்த்தியிருக்கிறார்.

  இது தான் உலகம் :

  இது தான் உலகம் :

  யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வராத ஓர் மாய உலகம் தான் இந்த சமூக வலைதளங்கள். நம்மவர்கள் அது தான் உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டி வெளியே மிகப்பெரிய உலகம் இருக்கிறது. அதிலேயே சிறைபடுத்திக் கொள்ளாதீர்கள் என்பதை சொல்கிறது இந்தப் படம்.

  அரசியல் :

  அரசியல் :

  அரசியல் மேடை ஏற வேண்டும் என்று சொன்னால் அதற்கான படிநிலைகள் எப்படியிருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறார் . இதை யாராலும் மறுக்க முடியாது என்றாலும் இந்த உண்மை வெளிப்படையாக தெரிந்தும் அதனையும் மவுனமாக நாம் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அந்த தவறினை தொடர்ந்து செய்ய ஆதரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தால் நல்லது.

  கூக்குரல் :

  கூக்குரல் :

  இன்னொருவரின் வளர்ச்சியை மட்டும் பார்த்து அவனைப் பார் அப்படி வாழ்கிறான், இவனைப் பார் நிம்மதியான மற்றும் சந்தோசமான வாழ்க்கை அமைந்திருக்கிறது எனக்கு மட்டும் இப்படி துரதிஷ்டவசமான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று உங்கள் மீது கோபம் கொள்வதால் ஒரு பிரியோஜனமும் இல்லை.

  வானத்தில் பறந்து கொண்டிருக்கிற பறவையின் நிழலைப் பார்த்து நாம் கத்துவதற்கு சமம். இதனால் வானில் பறக்கிற பறவைக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படப்போவதில்லை.

  கூண்டில் :

  கூண்டில் :

  வருங்காலத்தில் நம் நிலமை இப்படித்தான் ஆகும் போல. எல்லா இயற்கை வளங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி ஒரு கட்டத்தில் முற்றிலுமாக இல்லாமல் போகப்போகிறது அதன் பிறகு நாமும் இன்று மிருககாட்சி சாலையில் சென்று விலங்குகளை பார்ப்பது போல நம்மைப் பார்க்க மனிதகாட்சி சாலையில் தான் அடைந்து கிடக்கப் போகிறோம். நமக்கில்லை என்றால் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு இது தான் நிலைமை.

  ட்ரெண்டிங் :

  ட்ரெண்டிங் :

  எந்த பிரச்சனை என்றாலும் அது சீரியசான விஷயமென்றாலோ அல்லது வெறும் ட்ரோல் என்றாலோ ஒரு வாசகத்தை போட்டு ஹேஸ்டேக் சேர்த்து இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கிவிடுகிறோம், அன்றைக்கு பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருக்கும் பேசப்பட்டிருக்கும். ஆனால் அதன் பிறகு அல்லது அடுத்தப் பிரச்சனை வந்தவுடன் முதலில் பேசிய விஷயத்தை முற்றிலுமாக மறந்து விடுவோம்.

  அப்படி நாம் ட்ரெண்டாக்கிய ஹேஷ்டேக்கினை கொண்டு இவர் என்ன செய்கிறார் என்று பாருங்கள்.

  முதுகில் குத்துகிறவனைப் பார் :

  முதுகில் குத்துகிறவனைப் பார் :

  நம்மில் பெரும்பாலானோர் செய்கிற தவறு இது நம் கண் முன்னால் தெரிகிறவர்களை, நமக்கு ஆதரவாக இல்லை என்பவர்களை தான் நம்முடைய எதிரியாக பாவிக்கிறோம். இவர்களை எதிர்ப்பதாய் நினைத்து நம்முடைய வளர்ச்சியை தடுக்கிறோம். முதலில் உங்கள் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டே உங்களை குத்துகிற எதிரியை அடையாளம் காணுங்கள் அவனை வீழ்த்தினால் போதும் வெற்றி உங்களுக்கு வசமாகும்.

  பெண் கல்வி :

  பெண் கல்வி :

  இவ்வளவு வருடங்கள் போராடி பெண்ணுக்கு கல்வியறிவு கொடுக்க வேண்டுமென்று சொல்லி எண்ணற்ற தலைவர்கள் போராடி கல்வி உரிமையை பெற்றுத் தந்திருக்கிறார்கள். கல்வி கற்றால் பெண் சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிடுவாள், கேள்வி கேட்பாள் என்று சொல்லி பல்வேறு காரணங்களை சொல்லி மீண்டும் அவளை வீட்டிற்குள்ளேயே முடக்க நினைக்கிறார்கள்.

  இதோ அதற்கான ஓர் உதாரணப்படம் தான் இது.

  சிறை :

  சிறை :

  நமக்கு நாமே ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு இது தான் உலகம் இவ்வளவு தான் நம்முடைய வரைமுறைகள் என்று நின்று விடுகிறோம். சிறகடித்து பறக்க வேண்டும் என்கிற உயர்ந்த லட்சியம் இருந்தாலும் நம்முடைய மன எல்லை காரணமாக நம் லட்சியத்தை அடைய முடியாமல் தவிக்கிறோம்.

  கேள்வியை கேட்காதே :

  கேள்வியை கேட்காதே :

  ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தொடர்ந்த் கேள்வி கேட்பதால் தான் அதைப்பற்றிய தெளிவு ஏற்படுகிறது மேலும் நாம் கேள்வி கேட்போம் என்று நினைப்பவர்கள் நம்முடைய தவறு வெளியே தெரிந்து விடுமோ அல்லது நம் செய்தவற்றிற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்குமோ என்ற பயத்தில் கேள்விகளை ஆரம்பத்திலேயே வெட்டி எரிந்து விடுகிறார்கள். அதோடு அந்த கேள்வியை தனக்கு ஏற்றார் போல சாதகமாகவும் மாற்றிக் கொள்கிறார்கள்.

  நான் யார் :

  நான் யார் :

  உங்களைப் பற்றிய மிக உயர்ந்த எண்ணத்தையே எப்போதும் கொண்டிருங்கள் உங்களது தோற்றத்தை வைத்தோ அல்லது தற்காலிக தோல்வியினாலோ மனம் சோர்ந்து வாழ்க்கையையே வெறுத்து ஒதுக்குபவராக இருந்தால் உங்களால் லட்சியத்தை அடையவே முடியாது.

  தான் இயல்பில் எப்படியிருக்கிறார் ஆனால் அவருடைய உருவம் பற்றிய பிம்பத்தை எப்படி வரைந்திருக்கிறார் பாருங்கள்.

  ஆயிரம் நண்பர்கள் :

  ஆயிரம் நண்பர்கள் :

  இணையத்தில் ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம் அதற்கும் மேற்பட்டோர் நமக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசலாம் ஆனால் அந்த அந்த கற்பனை உலகத்தை விடுத்து நமக்கு எவ்வளவு பேர் துணையாக நிற்கிறார்கள். அப்படி நிற்கும் அளவிற்கு நாம் எத்தனை நண்பர்களை சந்தித்து வைத்திருக்கிறோம் என்பதில் தான் வாழ்க்கையின் சூட்சமமே அடங்கியிருக்கிறது.

  விமர்சனங்கள் :

  விமர்சனங்கள் :

  உங்களைப் பற்றி உங்களுடைய செயல்களைப் பற்றி தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து கொண்டேயிருக்கும். அவை ஒவ்வொன்றிற்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் அவர்களிடம் உங்களை நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் உங்களுடைய செயல்களில் மட்டும் கவனமாய் தொடர்ந்திடுங்கள்.

  வாழ்க்கை வசமாகட்டும்.

  பலமும் பலவீனமும் :

  பலமும் பலவீனமும் :

  நீங்கள் வெற்றியை தவறவிடும் போதும் உங்களை விட பலம் வாய்ந்தவர்களால் மிரட்டப்படும் போதும் உங்களுடைய பலம் என்ன என்று பார்த்து அதனை வெளிப்படுத்துங்கள். சரியான நேரத்தில் நீங்கள் எடுக்கப்போகிற முடிவுகள் உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடியதாகவும் தக்க சமயத்தில் உங்கள் உயிரை காக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.

  நினைவுகள் :

  நினைவுகள் :

  இளமை பருவத்தில் நீங்கள் வீணடிக்கிற ஒவ்வொரு மணித்துளிக்கும் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று பெரியவர்கள் நம்மிடம் சொல்லும் போது அசட்டையாக கடந்து விடுவோம். ஆனால் இந்த ஓவியத்தையும் அவை உணர்த்தும் விஷயத்தை புரிந்து கொண்டால் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணி நேரங்களை நாம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாக உணரலாம்.

  ஓய்வுகாலத்தை ஆனந்தத்துடன் கழிப்பதற்கு நல்ல மனிதர்களையும் சந்தோஷமான நினைவுகளையும் சேர்த்து வைத்திடுங்கள்.

  All Image Source

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Amazing Art Explains Today Social Life

  Amazing Art Explains Today Social Life
  Story first published: Monday, April 16, 2018, 11:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more