For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  18+ மட்டும் இங்கே உள்ள போக அனுமதியாம்!

  By Staff
  |

  ஒவ்வொரு வெக்கேஷன் டைமுக்கும் எங்கே செல்லலாம் என்று திட்டமிட்டு அவசர அவசரமாக கிளம்பிச் செல்வோம். என்ன தான் மூன் கூட்டியே திட்டமிட்டிருந்தாலும் கடைசி நேரத்தில் ப்ளான் சொதப்பும்.

  இந்த ட்ரிப் பிளான்களில் குடும்பத்துடன் சேர்ந்து செல்வது ஒரு ரகம் என்றால் நண்பர்களுடன் சேர்ந்து செல்வது இன்னொரு ரகம். நண்பர்களுடன் செல்லும் போது அட்வென்ச்சர் ட்ரிப்பினைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதைத் தவிர தீம் பார்க்!

  ஐயையோ தீம் பார்க்கா அதெல்லாம் குழந்தைங்க விளையாடுறது அதெல்லாம் நமக்கு செட்டே ஆகாது அப்டின்னு நினைக்கிறீங்களா? அப்போ இத கண்டிப்பா படிங்க... இதெல்லாம் குழந்தைங்க விளையாடுற தீம் பார்க் இல்ல... 18+ மக்களுக்கானது... அங்க அப்டி என்ன தான் இருக்கும்னு தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  வைன் :

  வைன் :

  நண்பர்களுடன் சந்திப்பு என்று சொன்னாலே பார்ட்டி.... சரக்கு என்ற பேச்சு எழும். அவர்கள் எல்லாரும் சிட்டி ஆஃப் வைன் எனப்படுகிற இந்த தீம் பார்க்கிற்கு சென்று வரலாம். ஃபிரான்ஸின் உள்ள போர்டியுக்ஸ் என்ற இடத்தில் தான் இந்த தீம் பார்க் இருக்கிறது.

  இந்த இடம் வைன் உற்பத்திக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இந்த தீம்பார்க் 2016 ஆம் ஆண்டு தான் திறக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் ஏகப்பட்ட மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

  Image Courtesy

  என்னென்ன இருக்கிறது? :

  என்னென்ன இருக்கிறது? :

  இங்கு த்ரில்லிங்கான விஷயங்கள் என்று எதுவும் இல்லை. உள்ளே 20 தனித்தனி செக்சன்கள் இருக்கின்றன. அவை எல்லாம் வைன் தயாரிக்கப்பட்ட விதம், அது வளர்ந்த விதம் ஆகியவற்றை சொல்கிறது. இதைத்தவிர 250 பேர் வரை அமரக்கூடிய ஆடிட்டோரியம் இருக்கிறது.

  மேலும் வைன் ருசி பார்க்கிற இடமும் இருக்கிறது. உள்ளேயே ஒரு போட் ரைட் அழைத்துச் செல்கிறார்கள். முதன் முதலாக கடல் மார்க்கமாக பயணித்து வைனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க உதவிய முதல் பயணத்தை அந்த ரைடு நினைவூட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

  Image Courtesy

  செக்ஸ் அகாடெமி :

  செக்ஸ் அகாடெமி :

  இதனை தீம் பார்க் அல்லது மியூசியம் என்று சொல்வதை விட பள்ளி என்று அழைப்பது தான் சரியானதாக இருக்கும். மிகவும் வித்யாசமான தீம் கொண்டது இது. லண்டனில் அமைந்திருக்கும் அமோரா அகாடமி பாலியல் குறித்த கல்வியை போதிக்கிறது.

  இங்கே வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு சிலைகள் மூலமாக செக்ஸ் குறித்த அறிமுகம், அறிவுரை வழங்கப்படுகிறது. இங்கே செக்ஸ் தெரப்பிஸ்ட்களும் இருக்கிறார்கள். இதைத் தவிர முத்தம் கொடுப்பது,ஃபோர் ப்ளே ஆகியவற்றிற்கும் பயிற்சி அளிக்கிறார்களாம்.

  2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தீம் பார்க்க என்ன காரணத்தினாலோ ஐந்தாண்டுகளில் மூடிவிட்டார்கள்.

  Image Courtesy

  பயமில்ல :

  பயமில்ல :

  அட்லாண்டாவில் இருக்கிறது இந்த தீம் பார்க். பெயரே எக்ஸ்ட்ரீம் ஹாண்டட் ஹவுஸ்.உள்ளே செல்லும் போதே உள்ளே நிறைய பயங்கரமான விஷயங்கள் இருக்கும் என்று எச்சரித்தே அனுப்புகிறார்கள்.

  ஹாரர் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கான பெஸ்ட் சாய் இது.

  Image Courtesy

  திகில் :

  திகில் :

  இதனை உருவாக்கியவர்கள் லுயுக் கோட்ஃப்ரே மற்றும் ரெனி அரிகடா ஆகியோர் தான். இதனை 2013 ஆம் ஆண்டு உருவாக்கியிருக்கிறார்கள். பேய்ப்படங்களில் வருகிற திகிலான காட்சிகள் இங்கே இடம்பெற்றிருக்கும். அதனை நீங்கள் உணரவும் செய்யலாம்.

  Image Courtesy

  லவ் லேண்ட் :

  லவ் லேண்ட் :

  தென் கொரியாவின் ஜிஜு சர்வதேச விமான நிலையத்திலிருந்து பத்து நிமிடத்தில் இந்த லவ் லேண்டுக்கு சென்றுவிடலாம். இங்கே கிட்டத்தட்ட 140க்கும் மேற்பட்ட சிலைகள் இருக்கிறது.அவை எல்லாமே செக்ஸுவல் பொசிசனில் இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

  சிலைகளைத் தவிர பொம்மைகள்,புகைப்படங்கள் என நிறைய வைத்திருக்கிறார்கள். இங்கே உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் வருகிறார்கள்.

  Image Courtesy

  காரணம் :

  காரணம் :

  2004 ஆம் ஆண்டு இந்த லவ் லேண்டினை ஹாங்கிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான் இதனை உருவாக்கியிருக்கிறார்கள்.

  இந்த தீம் பார்க்கினை உருவாக்க காரணம் என்ன என்று கேட்டபோது செக்ஸ் என்பது இயல்பான ஒரு விஷயம் ஆனால் அதனைச் சுற்றி பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

  அதனால் செக்ஸ் குறித்த பல்வேறு கற்பிதங்களை நினைத்து அதன் உண்மையை யாரும் உணர்வதில்லை அதனை வெளிப்படுத்தவே இந்த தீம் பார்க் என்கிறார்கள்.

  Image Courtesy

  வாட்டர் பார்க் :

  வாட்டர் பார்க் :

  இது அடல்ட்ஸ் ஒன்லி வாட்டர் பார்க். 2015 ஆம் ஆண்டு இது திறக்கப்பட்டிருக்கிறது. இங்கே மலோர்கா கற்களைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை சர்வதேச டி ஜே க்கள் வந்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

  இதைத் தவிர இபிஜா ஸ்டைலில் பீச் கிளப் ஒன்றும் இருக்கிறது அதோடு இங்கே அட்ரலின் அதிகரிக்கச் செய்திடும் அக்வாலூப் ஆகியவை இருக்கிறது.

  Image Courtesy

  எரோடிகா லேண்ட் :

  எரோடிகா லேண்ட் :

  ப்ரேசிலில் இந்த ஆண்டு திறக்கப்பட்டிருக்கும் செக்ஸ் தீம் பார்க் இது. இங்கே இருக்கிற பம்ப்பர் கார் எல்லாம் ஆண்களின் பிறப்புறுப்பு வடிவத்தில் இருக்கிறது. வாட்டர் ஸ்லைடரில் பயணிக்க தனி ஆடை எல்லாம் வழங்கப்படுவதில்லை வேண்டுமானால் நீங்கள் நிர்வாணமாக கூட பயணிக்கலாம்.

  உள்ளேயே ரெஸ்ட்டாரண்ட் இருக்கிறது, இதைத்தவிர ப்ளஸர் ட்ரைனில் நீங்கள் ஜாலி ரைடு செல்லலாம். உள்ளேயே 7டி திரையரங்கமும் இருக்கிறது.

  Image Courtesy

  பென்னீஸ் பார்க் :

  பென்னீஸ் பார்க் :

  இதுவும் தென் கொரியாவில் அமைந்திருக்கிறது.இந்த பார்க்கிற்கு பின்னால் ஒரு கதையே சொல்கிறார்கள். முன்னொரு காலத்தில் இளம் பெண்ணொருத்தியின் காதலன் அவளை கரையில் இருக்கச் சொல்லிவிட்டு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருக்கிறான்.

  ஆனால் கரையில் வீசிய புயலில் தூக்கிவீசப்பட்ட அந்த காதலி பரிதாபமாக உயிரிழந்துவிட்டாள். தன் காதலனை நினைத்து ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த போது உயிரிழந்துவிட்டதால் அவளுடைய ஆவி ஊரையே பயமுறுத்தியிருக்கிறது.

  அவளை சாந்தப்படுத்த பல முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள் எதுவுமே கை கொடுக்காத நிலையில், யாரோ சொன்னதைக் கேட்டு இறந்த பெண்ணின் காதலனின் பிறப்புறுப்பினை செய்து அவள் இறந்த இடத்திலேயே வைத்திருக்கிறார்கள்.

  Image Courtesy

  எல்லாம் நன்மைக்கே :

  எல்லாம் நன்மைக்கே :

  நினைத்தது போலவே அந்த ஆவி சாந்தியடைந்ததாம். இளம்பெண்கள் குறிப்பாக திருமணமாவதற்கு முன்னால் பெண்கள் இறந்தால் இங்கே வந்து ஆணின் பிறப்புறுப்பு போன்ற சிலையை வாங்கி வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதனால் அந்தப் பெண்ணின் ஆன்மா நிம்மதியாக உறங்கும் என்றும் நம்புகிறார்கள்.

  நாளடைவில் இந்த வழக்கம் ஒழிந்துவிட்டது. ஆனால் சில கலைஞர்கள் இணைந்து இதனை மக்கள் பார்வையிடும் இடமாக மாற்றியிருக்கிறார்கள்.

  Image Courtesy

  தொண்டு நிறுவனத்திற்காக :

  தொண்டு நிறுவனத்திற்காக :

  2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரோலர் கோஸ்டரில் அனைவருமே நிர்வாணமாக பயணித்து சாதனை படைத்தார்கள். இது ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்கு நடந்திருக்கிறது.

  இதே போல 2010 ஆம் ஆண்டு சுமார் 102 பேர் நிர்வாணமாக பயணித்தது கின்னஸ் சாதனையாக இருந்தது. ஐந்து வருடங்கள் கழித்து அந்த உலக சாதனையை நினைவுகூறும் விதமாகவும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டவும் இந்த நிர்வாண பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Adult Theme Parks Around the World

  Adult Theme Parks Around the World
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more