TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
கிம் ஜோங்-உன் மனைவி கடைப்பிடிக்க வேண்டிய 9 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்
கிம் ஜோங்-உன், பார்க்க தான் ஆள் பொறி உருண்டை மாதிரி இருப்பார். ஆனால், மூன்றாம் உலக போர் மூண்டால் அதற்கு முக்கிய காரணமாக இவரும் இருக்கலாம் என உலக அரசியல்வாதிகள் பேசிக் கொள்கிறார்கள். ஜப்பான் மீது அணு ஆயுதங்களை பறக்கவிட்டது, அவ்வபோது மிஸைல் மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து பீதியை கிளப்புவது என ஆள் கலாட்டா செய்துக் கொண்டே இருப்பார்.
இவரால் டொனால்ட் டிரம்ப்க்கு மட்டும் தான் பிரச்சனை என்றில்லை, இவரது மனைவிக்கே பல பிரச்சனைகள் இருக்கின்றன. வடகொரிய மக்களுக்கு இருக்கும் ரூல்ஸ் காட்டிலும், கிம் ஜோங்-உன்னின் மனைவி பின்பற்ற வேண்டிய ரூல்ஸ் மிகவும் கடுமையானவை...
திருமண தேதிகள்...
கிம் ஜோங்-உன் மனைவி மட்டுமல்ல, இந்த ஒரு சட்டத்தை வடகொரிய நாட்டு மக்கள் அனைவருமே பின்பற்ற வேண்டும். பிப்ரவரி 16 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய நாட்களில் யாரும் திருமணம் செய்யக் கூடாது. இந்த தேதிகள் கிம் ஜோங்-உன் தாத்தா மற்றும் தந்தையின் பிறந்த நாட்கள் ஆகும். இந்த நாட்களில் அவர்களுக்கு பூக்கள் இட்டு, பாரம்பரிய உடை அணிந்து மரியாதை செலுத்தும் தினமாக கடைபிடித்து வருகிறார்கள்.
தனி இமேஜ்...
சற்று உற்று கவனித்தால் கிம் ஜோங்-உன் உடன் இரண்டு பெண்கள் இருப்பதை காணலாம். ஒன்று அவரது மனைவி, மற்றொன்று அவரது சகோதரி. சகோதரி எப்போதும் பாரம்பரிய உடை தான் அணிந்திருப்பார். இது அவர்கள் நாட்டு கலாச்சாரத்தை காட்டும். மேலும், மனைவி எப்போதும் மாடர்ன் உடைகள் தான் அணிந்திருப்பார் இது கிம் ஜோங்-உன்னின் தாராள மனதை காட்டும். இப்படியான இமேஜ் உருவாக்கவே கிம் ஜோங்-உன் இதை பின்பற்ற ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்டிருக்கிறார் போல.
MOST READ: அரசு சலுகைகளோடு விபச்சாரத் தொழில் நடக்கும் டாப் 15 நாடுகள்
பெயர்!
திருமணத்திற்கு பிறகு பெண்களின் பெயரில் மாற்றம் ஏற்படுவது உலக நாடுகளில் காணப்படும் வழக்கம். ஆனால் ரி சோல் ஜூ (கிம் ஜோங்-உன்னின் மனைவி) தனது மொத்த பெயரையும் மாற்றிக் கொண்டுள்ளார். இது வடகொரிய அரசு சட்டத்தின் படி இவரது பழைய வாழ்க்கையை முற்றிலும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட முடிவு.
பெற்றோர்!
கிம் ஜோங்-உன் மனைவியால் தனது பெற்றோரை மிக எளிதாக எல்லாம் பார்த்துவிட முடியாது. தனது கணவருடன் அவர் நேரம் செலவழிக்க, பயணங்கள் மேற்கொள்ளவே நேரம் ரசியக இருக்கும். இதற்கு நடுவே பெற்றோரை காண்பது என்பது இன்றியமையாத காரியம். மேலும், இவரது பெற்றோர் குறித்த தகவல்களும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பொது இடங்களில்...
கிம் ஜோங்-உன்னின் மனைவியால் பொது இடங்களில் சாதாரணமாக சென்று வர இயலாது. இவர் எப்போதுமே பாதுகாப்புடன் தான் இருக்க முடியும். இவர் பொது இடங்களுக்கு தனியாக சென்று வர முடியாது. இவர் மட்டுமல்ல, இவரது குழந்தைகளையும் கூட பொது இடங்களில் யாரும் கண்டதில்லை.
ப்ரோடோகால்!
பாதுகாப்பு காரணம் கருதி கிம் ஜோங்-உன் குடும்பத்தின் இயக்கம், பயணம் போன்றவை மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுடன் வடகொரியா நல்ல உறவில் இல்லை என்பதால், இவர்கள் குடும்பத்திற்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால், பெரும் பாதுகாப்பு வட்டத்திற்குள் தான் இவர்களது குடும்பம் இயங்கி வருகிறது.
MOST READ: இயேசுநாததர் பூமியில் பிறக்கும்முன் எங்கிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
துக்க நிகழ்வுகள் / இடங்கள்...
பொது இடங்களில் கிம் ஜோங்-உன்னின் மனைவியை காண்பது மிகவும் அரிது. ஏதேனும் துக்க நிகழ்வு அல்லது கிம் ஜோங்-உன்னின் தந்தை, தாத்தா இறந்த நாட்களின் போது மரியாதை செலுத்த மட்டுமே இவரை பொது இடத்தில் காண முடியும்.
கட்டாயம்!
திருமணம் ஆனவுடனே குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிம் ஜோங்-உன்னின் மனைவிக்கு இருந்தது. அதிலும், ஆண் குழந்தை பெற்றெடுக்க வேண்டிய அவசியம். ஆண் குழந்தை இருந்தால் தான் இவர்கள் வம்சம் தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருக்க முடியும். இதனால், இவர் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டிருந்தது.
பழையவை!
வடகொரிய அரசானது கிம் ஜோங்-உன்னின் மனைவி ஆரம்பத்தில் எங்கே படித்தார், என்ன செய்தார் என அனைத்து தகவல்களையும் அழித்துவிட்டன. இவர் ஒரு இசை குழுவில் இருந்தார், அதில் சில பாடங்கள் பாடி இருந்தார் என்று அறியப்படுகிறது. அவற்றையும் ஒட்டு மொத்தமாக அழித்துள்ளது வடகொரிய அரசு. எனவே, இவர் யார், எவர் என்பது குறித்து யாராலும் அறிந்துக் கொள்ள இயலாது.
MOST READ: உடல் எடையை 2 வாரத்திலேயே குறைக்க, ஒரு துண்டு இஞ்சியை இப்படி பயன்படுத்துங்க...!