6000 ஆண்டுகள் பழமையான மரங்கள் திடீர் மரணம், நெருங்குகிறதா மனிதரின் அழிவு காலம்?

6000 ஆண்டுகள் பழமையான மரங்கள் திடீர் மரணம், நெருங்குகிறதா மனிதரின் அழிவு காலம்?

இயற்கையை அழித்த காரணத்தால், ஒரு மீளா துயரை மனிதர்களுக்கு அளிக்க காத்திருக்கிறது உலக வெப்பமயமாதல். இது ஏதோ திடீரென உருவானது அல்ல. மனிதர்களின் வளர்ச்சி என்ற போதை பழக்கத்தால் உலகில் உண்டான தாக்கத்தின் வீரியமே இன்று உலகில் பல உயிரினங்கள், இயற்கை வளங்கள் அழிய துவங்கியுள்ளன.

ஆப்ரிக்காவில் போபாப் மரங்கள் என்ற மிகவும் பழமையான மர வகைகள் ஆகும். இந்த மரங்களின் சராசரி ஆயுலானது ஆயிரம் வருடங்களை கடந்ததாக இருக்கிறது. சமீபத்திய வருடங்களில் மட்டும் ஆயிரத்து நூறு வயதான போபாப் மரம் ஒன்றும், இரண்டாயிரத்து ஐநூறு வயதான போபாப் மரமொன்றும் மரணித்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அபூர்வ மரம்!

அபூர்வ மரம்!

இந்த போபாப் மரமானத்தை அப்சைடு டவுன் த்ரீ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். ஏனெனில், இந்த மரத்தின் தோற்றமானது அப்படியாக இருக்கிறது. ஆப்ரிக்காவின் தனித்துவமான மரமாக காணப்படுகிறது போபாப் மரங்கள். ஒருசில ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்டதாக கருதப்படும் இந்த போபாப் மரங்கள் ஆப்ரிக்காவில் ஆறாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரமாக காணப்படுகிறது.

Image Source: Pxhere

வெறும் பத்தாண்டுகளில்...

வெறும் பத்தாண்டுகளில்...

கடந்த தசாப்தத்தில் (பத்து வருடத்தில்) மட்டும் பல போபாப் மரங்கள் காரணம் அறியப்படாத விதமாக மரணித்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது போபாப் மரங்களின் இந்த திடீர் மரணத்திற்கு மிக வேகமாக அதிகரித்து வரும் உலக வெப்பமயமாதல் தான் ஒரே காரணமாக இருக்க கூடும் என்றும். இதனால், அவற்றின் வாழ்வியல் பாதிக்கப் பட்டிருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

Image Source: Flickr/klemmo

எதனால் அழிந்தன...

எதனால் அழிந்தன...

நேச்சர் பிளான்ட்ஸ் என்ற அறிவியல் பத்திரிக்கையில் ஒரு ஆராய்ச்சி குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்ரிக்காவில் இருந்து 13 மிகவும் பழமையான போபாப் மரங்களில் ஒன்பது மரங்கள் மரணித்துவிட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில மரங்களில் அவற்றின் சில பாகங்கள் (கிளைகள், நடுப்பகுதி) போன்றவை கடந்த 12 ஆண்டுகளாக செயலற்று போய்விட்டன, மிகவும் சேதமடைந்து இருக்கின்றன என்றும் அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு மாற்றம் கண்டிருக்கும் பூமி வெப்பமயமாதல் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

மேலும், போபாப் மரங்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் இம்மரங்கள் ஏதேனும் நோய் அல்லது தொற்று மூலமாக மரணிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். பண்டைய காலங்களில் இருந்து காணப்பட்டு வரும், வாழ்ந்து வரும் இந்த மரங்கள் அச்சுறுத்தும் வகையிலான வேகமாக அதிகரித்த வறட்சி காரணமாக தான் மரணித்துள்ளன என்றும் கூறுகிறார்கள்.

Image Source: Flickr/munchyyc

தொடர் ஆய்வு!

தொடர் ஆய்வு!

கடந்த 2005ம் ஆண்டில் இருந்து ஒரு ஆராய்ச்சி குழு இந்த போபாப் மரங்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.கார்பன் டேட்டிங் டெக்னிக் மூலமாக இந்த மரங்களின் வயது மற்றும் தன்மையை இவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். முக்கியமான மற்றும் ஒரு கண்டத்தின் நினைவு பொருளாக கருதப்படும் இந்த போபாப் மரங்களின் மறைவுக்கு ஆப்ரிக்காவில் மிக வேகமாக அதிகரித்து வரும் வெப்பமயமாதல் தான் காரணம் என்று கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ரிசலட் மற்றும் போபாப் மரங்களின் மறைவுக்கான காரணம் பற்றி பல விஷயங்கள் அறியவும் தொடர்ந்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Image Source: Flickr/jeanmas

வளர்ச்சி!?

வளர்ச்சி!?

இன்று வரை நாம் நமது வளர்ச்சியால் அழிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் மிகவும் குறைவே. செல்போன் டவரால் சிட்டுக்குருவி அழிந்த கதை மட்டுமே நாம் அறிவோம். புவி வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகா, ஆர்டிக், கிரீன்லாந்து போன்ற பகுதிகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்த பனிமலைகள் அழிந்து வருகின்றன. பசிபிக், அன்டார்டிகா சமுத்திரத்தில் இருந்து நிறைய குட்டி தீவுகள் நீரில் மூழ்கி வருகின்றன. இந்த பகுதிகளில் மட்டும் உயிர் வாழ்ந்து வந்த நிறைய அரியவகை உயிரினங்களும் அழியும் தருவாயில் இருக்கின்றன.

Image Source: pxhere

முற்றுப்புள்ளி!

முற்றுப்புள்ளி!

மனிதனுக்கு மட்டுமே வளர்ச்சியாக தெரிந்த சில தொழில்நுட்பமும், தொழிற்சாலைகளும் உலகின் பிற அனைத்து உயிர் இனங்களை பொருத்துவரையில் ஒரு கொடூரமான படுகொலை தாக்குதல். இது இயற்கை, கடல்வாழ் உயிரினங்கள் என்று மட்டுமல்ல... ஒட்டுமொத்தமாக இதன் முடிவு மனித இனத்தையும் விட்டு வைக்காது. இயற்கையின் அழிவு, மனித இனத்தின் முடிவுக்கான துவக்கப்புள்ளி.

Image Source: pxhere

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, July 3, 2018, 16:05 [IST]
Desktop Bottom Promotion