இந்த விசித்திர விளையாட்டுக்களை விளையாடி இருக்கீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

உடலை வலுப்படுத்துவதற்கும் மனதை திடப்படுத்துவதற்கும் நமக்கு உறுதுணையாய் இருப்பது விளையாட்டு. இன்றைக்கு பல பெற்றோர்கள் விளையாட அனுமதிக்காமல் கையில் ஸ்மார்ட் போனை கொடுத்து குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே முடக்கி விடுகிறார்கள். எல்லாமே க்ராபிக்ஸ் மயமாகிவிட்ட பின்னர் அதனை நோக்கிய குழந்தைகளின் கவனமும் திரும்புகிறது.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. அதில் காலோச்சிய தயான்சந்தின் நினைவு நாளான இன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் சில விசித்திரமான விளையாட்டுக்களைப் பற்றிய ஓர் பார்வை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்ட்போர்டு ஃபைட் :

கார்ட்போர்டு ஃபைட் :

கார்போர்டால் தங்களை முழுவதும் மூடிக் கொண்டு சண்டையிடுவார்கள். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய மக்களிடையே இது மிகவும் பிரபலம். கையாலேயே செய்யப்பட்ட கார்ட் போர்டு கத்தி, எதிராளி தாக்குவதை தடுக்க தடுப்பு போன்றவற்றை செய்து விளையாடுகிறார்கள்.

Image Courtesy

சீபக் டக்ரா :

சீபக் டக்ரா :

வாலி பால் மற்றும் ஃபுட் பாலின் கலவை இது. ஆரம்பத்தில் போசா பால் என்று தான் அழைக்கப்பட்டது. ஆறு பேர் விளையாடும் இந்த விளையாட்டில் மூன்று நபர்கள் ஒரு டீம் என்று பிரிந்து கொள்வார்கள். நடுவில் நெட் இருக்கும் பந்தை எதிரில் இருப்பவர்களிடம் தட்டிவிட வேண்டும் அதை கீழே விழச் செய்யாமல் அங்கிருப்பவர்கள் இவர்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். எளிதாக இருக்கிறதென நினைக்க வேண்டாம். பந்தை தட்டி விட கைகளை பயன்படுத்தக்கூடாது.முழுக்க முழுக்க கால்களின் உதவியுடன் தான் செய்ய வேண்டும்.

Image Courtesy

ஃபையர் பால் சூக்கர் :

ஃபையர் பால் சூக்கர் :

தேங்காய் நார் மற்றும் மட்டை கொண்டு விளையாட்டு துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இந்த பந்தை தயார் செய்வார்கள். அந்தப் பந்தை நெருப்பு பற்ற வைத்திடுவார்கள். வீரர்கள் வெறும் காலில் அந்தப் பந்தை உதைத்துச் சென்று எல்லைக் கோட்டிற்கு வெளியே கொண்டு வர வேண்டும். இந்தோனேசியாவில் விளையாடப்பட்டு வந்த இந்த விளையாட்டு தற்போது விளையாடுவது குறைந்து விட்டது.

Image Courtesy

கோன்னா புல்லிங் :

கோன்னா புல்லிங் :

உடும்பு விளையாட்டு இது. இருவீரர்கள் தரையில் குப்புற படுத்துக் கொண்டு கையை தரையில் ஊன்றி முன் உடலை மட்டும் உயர்த்தியிருக்க வேண்டும். இருவீரர்களின் கழுத்தை சேர்த்த மாதிரி ஒரு பெல்ட் போடப்படும். இருவரின் எல்லையை நிர்ணயிக்கும் பொருட்டு நடுவில் ஒரு கோடும் இழுக்கப்பட்டிருக்கும். கையை பயன்படுத்தாது எதிரணியை கோட்டிற்கு உள்ளே அதாவது உங்கள் எல்லைக்குள் கொண்டு வர வேண்டும். இது தான் கோன்னா புல்லிங்.

Image Courtesy

பூசணிப் படகு போட்டி :

பூசணிப் படகு போட்டி :

சுமார் 800 மீட்டர் ஆற்றின் தூரத்தை கடக்க வேண்டும் தோணியையோ, படகையோ பயன்படுத்தக்கூடாது அதற்கு பதிலாக பூசணிக்காயை பயன்படுத்த வேண்டும். அளவில் பெரிதாய் இருக்கும் பூசணிக்காயை நடுவர் முன்பாக வைத்து அங்கேயே வெட்டி ஒரு ஆள் உட்காரும் படி வெட்டி நீங்கள் ஓட்டிச் செல்ல வேண்டும்.

Image Courtesy

போ டோஷி :

போ டோஷி :

குழு விளையாட்டான இதில் 150 பேர் வரை விளையாடுகிறார்கள். ஜப்பான் நாட்டில் விளையாடப்படும் இந்த விளையாட்டு பார்க்கவே கொஞ்சம் ஆக்ரோசம் நிறைந்ததாக காணப்படுகிறது. பத்தடி உயரம் உள்ள ஒரு கம்பத்தில் வீரர் ஒருவரை ஏற்றி விடுகிறார்கள். அதற்கு பாதுகாப்பாக முதல் அணி சூழ்ந்து நின்று கொள்கிறது. அடுத்த மணியோசை கேட்டதுமே நாலாபுறத்தில் இருந்தும் ஓடி வரும் எதிரணி வீரர்கள் கம்பத்தில் உட்கார்ந்திருக்கும் வீரரை தள்ளிவிட்டு அவர்களில் ஒருவன் உட்கார வேண்டும் அல்லது அந்த கம்பத்தையே சாய்க்க வேண்டும்.

முக்கியமாக இந்த விளையாட்டு ஜப்பான் ராணுவ வீரர்களால் விளையாடப்படுகிறது.

Image Courtesy

சீஸ் ரோலிங் :

சீஸ் ரோலிங் :

இங்கிலாந்தில் கிடைக்க கூடிய கடினமான சீஸ் வகைகளில் ஒன்றை சறுக்கலான மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடுகிறார்கள். அதனைப் பிடிக்க பலரும் முண்டியடித்துக் கொண்டு ஓடிவருகிறார்கள். மலை உச்சியிலிருந்து மிகம் சறுக்கலான பாதையாக இருப்பதால் பலருக்கும் காயம் ஏற்படுவது சகஜம்.

ஆரம்பத்தில் ப்ராக்வொர்த் என்ற கிராம மக்கள் மட்டுமே பாரம்பரியமாக இதனை விளையாடி வந்தனர் காலப்போக்கில் உலகின் பல்வேறு நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமாகிவிட்டது.

Image Courtesy

க்யுடிச் :

க்யுடிச் :

ஹாரிப்பாட்டரில் வந்தவற்றின் ரியல் வெர்ஷன் இது. கால்களுக்கு இடையில் துடைப்பானை வைத்துக் கொண்டு எதிரணியை சமாளித்து பந்தை வளையத்தில் போட வேண்டும்.

Image Courtesy

பீர் மைல் :

பீர் மைல் :

இதில் மொத்தம் நான்கு லாப்ஸ் ஓட வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் தனியாக நான்கு டின் பீர் வைக்கப்பட்டிருக்கும் . போட்டி ஆரம்பித்ததும் முதல் டின் பீரை முழுவதுமாக குடித்து விட்டு ஓடி வர வேண்டும். அதே போல ஒவ்வொரு ரவுண்ட் துவங்கும் போதும் ஒரு டின் குடித்து முடித்தப் பிறகே ஓட வேண்டும். நான்கு டின்னையும் காலி செய்து யார் ஓடி வருகிறார்களோ அவர்களே வெற்றியாளர்.

Image Courtesy

சின் கிக்கிங் :

சின் கிக்கிங் :

400 ஆண்களுக்கு முன்பிருந்தே இங்கிலாந்தில் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள். இரு வீரர்கள் தங்கள் கால்களில் வைக்கோலை நிரப்பிக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் தோள்பட்டையை பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும் நடுவரின் விசில் சத்தம் கேட்டதுமே காலால் எதிரிலிருப்பவரை உதைத்து கீழே விழச்செய்ய வேண்டும். எதிரில் இருப்பவர் விழுந்தால் உங்களுக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும்.

Image Courtesy

360 பால் :

360 பால் :

ஒரு கூண்டிற்குள் நான்கு பேர் இருப்பார்கள் இரண்டு பேர் ஓர் அணி மற்ற இருவர் ஒரு அணி. கூண்டின் நடுவே போடப்பட்டிருக்கும் ஜம்பிங் ப்ளேஸில் பால் போடப்படும் பின்னர் அதனை வழக்கமாக டென்னிஸ் ஆடுவது போல ஆட வேண்டும். நம் அணி வீரர் அடித்த பந்தை மட்டுமே அடிக்க வேண்டும். எதிரணி அடித்த பந்தை நாம் அடித்தால் நமக்கு பாயிண்ட்ஸ் குறையும். பந்தை மிஸ் செய்தாலும் பாயிண்ட்ஸ் குறைந்திடும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

worlds weird sports

worlds weird sports
Story first published: Tuesday, August 29, 2017, 17:47 [IST]
Subscribe Newsletter