நாம இன்னிக்கி யூஸ் பண்ற பொருள் எல்லாம், ஆரம்பக் காலத்துல எப்படி இருந்துச்சு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky
நாம இன்னிக்கி யூஸ் பண்ற பொருள் எல்லாம், ஆரம்பக் காலத்துல எப்படி இருந்துச்சு தெரியுமா?- வீடியோ

18:9 அங்குலத்தில் தொட்டாச்சு திரை கொண்ட மொபைல் போன்கள் தான் இன்றைய ட்ரெண்ட். ஐ போன் எக்ஸ் தொடங்கி, ரெட்மி மிக்ஸ், மோட்டோ, சாம்சங் என ஹை-டெக் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் லோ-குவாலிட்டி நிறுவனங்கள் வரை அனைவரும் இதை பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.

பத்து வருடங்களுக்கு முன்னர் நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு பிராண்ட்டின் தோற்றமும், இன்று நாம் பயன்படுத்தும் அதே பிராண்ட் பொருட்களின் தோற்றமும் வெகுவாக மாறியுள்ளது. இதற்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி தான்.

மாடர்ன் என்ற வார்த்தையே டெக்னாலஜியின் வளர்ச்சி தானே. இன்று, ஒரு பொருளின் தரத்தை காட்டிலும் கவர்ச்சியை தான் நாம் அதிகம் விரும்புகிறோம். நம் கையில் இருக்கும் மொபைலாகட்டும், நாம் உடுத்தும் உடையாகட்டும். ஏன் உள்ளாடையாகவே இருந்தாலும் கூட, இரண்டு இன்ச் ஜீன்ஸ் கீழே இறக்கி போடுவதன் காரணம் என்ன, தான் அணியும் பிராண்டை பகட்டாக காண்பித்துக் கொள்ளத்தானே.

இன்று ஆஹோ, ஓஹோ என நாம் வாய்பிளந்து காணும் உலகின் பல முன்னணி பிராண்டுகளின் பொருட்கள் ஆரம்பக் காலக்கட்டத்தில் முதன் முதலில் அவை சந்தைக்கு வந்த போது எந்த தோற்றத்தில் இருந்தன தெரியுமா?

இதோ! கோல்கேட் பற்பொடி டப்பா முதல், பார்பி டால், ஆணுறை, ஆப்பிள் கம்பியூட்டர், விண்டோஸ் சாப்ட்வேர் என பலவற்றின் ஆரம்பக் கால தோற்றம்... வாங்க பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்!

ஆப்பிள்!

இன்று ஐ-போனின் புதிய மாடல் வருகிறது எனில் அதை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மற்ற நாடுகளில் வர கொஞ்சம் தாமதமாகும் என்பதை கூட யாராலும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. வெளிநாட்டில் இருக்கும் அக்கா, அண்ணன்களிடம் கூறி உடனே வாங்கி அனுப்ப அடம்பிடிக்க ஒரு கூட்டம் இருக்கிறது.

ஏனெனில், ஐ-போன் வெறும் மொபைல் அல்ல, ஒருவரின் அந்தஸ்து. இதோ! மரத்தாலான ஆரம்பக் கால ஆப்பிள் கம்ப்யூட்டரின் கிளாஸிக் தோற்றம்.

Image Credit:techmaish

ஃபோர்டு!

ஃபோர்டு!

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு. இப்போது அந்தந்த நாடுகளின் வசதிக்கு ஏற்ப நிறைய கார்களை தயாரித்து வழங்கி வருகிறது. சந்தையில் ஃபோர்டு நிறுவன கற்களின் தோற்றம் தனக்கான தனிச்சிறப்பு கொண்டிருக்கின்றன. இதோ! ஆரம்ப கால ஃபோர்டு காரின் தோற்றம். இது ஒரிஜினல் ஃபோர்டு மாடல் எ காராகும்.

Image Credit:ritzsite

சாம்சங்!

சாம்சங்!

இப்போதைய தலைமுறையிடம் சாம்சங் என்று கூறினால் அவர்களுக்கு மொபைல் தான் முதலில் எண்ணத்தில் உதிக்கும். ஆனால், மொபைல் தயாரிக்கும் முன்னரே பல எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்துள்ளது சாம்சங். இதோ! P-3202 எனும் சாம்சங்கின் முதல் தொலைக்காட்சி பெட்டி.

Image Credit:blognews

பாஸ்ச் (Bosch)

பாஸ்ச் (Bosch)

இன்று சிங்கிள் டோர், டபிள் டோர், தொடுதிரை சென்சார் வசதி கொண்ட ஃப்ரிட்ஜ் என பல வகைகள் வந்துவிட்டன. ஆனால், இன்று உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் பாஸ்ச்-ன் முதல் குளிர்சாதான பெட்டி இப்படி தான் இருந்தது.

Image Credit:twimg

விண்டோஸ்!

விண்டோஸ்!

நம்மில் பலர் விண்டோஸ் 98 முதல் தான் கண்டிருப்போம், பயன்படுத்தியிருப்போம். இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதை கூட பார்த்திருப்பார்களா என்பது கொஞ்சம் சந்தேகத்திற்குரிய விஷயம் தான். இவர்கள் விண்டோஸ் எக்ஸ்-பியை கண்டிருக்கவே வாய்ப்புகள் குறைவு தான். இதோ! நீங்கள் படத்தில் பார்த்துக் கொண்டிருப்பது தான் ஆரம்பக் காலத்தில் விண்டோஸ் வெளியிட்ட முதல் பிரதியின் தோற்றம்.

Image Credit:ibnlive

சீமன்ஸ்!

சீமன்ஸ்!

இன்று வீட்டில் அனைவரிடமும் ஒரு செல்போன் இருக்கிறது. ஆனால், 20 வருடங்களுக்கு முன்னர் வீடுகளில் டெலிபோன் இருந்தால் தான், ஒரு அந்தஸ்தாக இருந்தது. டெலிபோன் தயாரிப்புகளில் சீமன்ஸ் சிறந்து விளங்கிய நிறுவனமாகும். இவர்கள் முதன் முதலில் தயாரித்து வெளியிட்ட Mobiltelefon C1 என பெயரிடப்பட்ட மொபைல் டெலிபோன் இப்படி தான் இருந்தது.

Image Credit: pinimg

கேனான் கேமிரா!

கேனான் கேமிரா!

டி.எஸ்.எல்.ஆர் கேரமாராக்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருவது கேனான் மற்றும் நிக்கான் நிறுவனம் தான். நிக்கானை அதிகம் புகைப்படக் கலைஞர்களும், கேனானை அதிகம் பொதுமக்களும் விரும்பி வாங்குவது வழக்கம். காரணம், கேனான் கேமாராக்கள் யூசர் ஃபிரண்ட்லி. இதோ! முதன் முதலில் வெளியான கேனான் கேமராவின் தோற்றம். இந்த மாடலின் பெயர் Kwanon.

Image Credit:flickr

ஹார்லி!

ஹார்லி!

ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் என்றால் விரும்பாத ஆண்களே இருக்க மாட்டார்கள். அதன் வடிவமைப்பு, பில்ட் குவாலிட்டி, சிறப்பம்சங்கள், அதை ஓட்டும் போது நாம் பெறும் சௌகரியம், அதன் சப்தம் என அனைத்தும் தனி சிறப்பு கொண்டுள்ளவை. மாஸ் + கிளாஸ் என செம்ம ஸ்டைலிஷ் பைக்குகளுக்கு பெயர்பெற்ற ஹார்லியின் முதல் பைக்கின் தோற்றம் இதுதான்.

Image Credit:allesovermisdaad

எச்.பி!

எச்.பி!

லேப்டாப் உலகில் லெனோவா மற்றும் எச்.பி-க்கு எப்போதுமே அதிக மவுசு உண்டு. அதிலும், சிறந்த திறன்பாடு என்று வகைபிரிக்கும் போது எச்.பியை பலரும் தேர்வு செய்வதுண்டு. எச்.பி 110 எனும் எச்.பி லேப்டாப்பின் ஆரம்பக் கால மாடலின் தோற்றம் இப்படி தான் இருந்துள்ளது.

Image Credit: www8-hp

நிவ்யா க்ரீம்!

நிவ்யா க்ரீம்!

இன்று காஸ்மெடிக் பொருட்கள் தயாரிப்பில் உலக சந்தையில் முதன்மை இடத்தில் திகழ்ந்து வரும் நிவ்யாக்ரீம் டப்பாவின் தோற்றம் ஆரம்பக் களத்தில் இப்படி தான் இருந்துள்ளது.

Image Credit:dewebsite

ஃபர்ஸ்ட் சேனல்!

ஃபர்ஸ்ட் சேனல்!

ஃபர்ஸ்ட் சேனல் என்பது பெண்களுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம். இவர்கள் முதன்முதலில் லான்ச் செய்த பெண்களுக்கான ஃப்ராஜ்னன்ஸ். இதற்கு சேனல் நம்பர் 5 என பெயரிட்டிருந்தனர்.

Image Credit:scentandvision

சோனி!

சோனி!

டிஜிட்டல் வீடியோ கேமாரா உலகில் தனக்கான இடத்தை மிக வலுவாக பிடித்துள்ளது சோனி நிறுவனம். லேப்டாப், மொபைல், கேமரா என எதுவாக இருந்தாலும் சோனி என்றால் அதன் ஸ்லீக் லுக் தான் முதலில் மனதில் பதியும். எலக்ட்ரானிக் பொருட்களின் தோற்றத்தில் கவர்ச்சியை புகுத்திய நிறுவனம் என்றும் சோனியை கூறலாம். இதோ! சோனி நிறுவனம் தயாரித்த முதல் வீடியோ கேமராவின் தோற்றம். இந்த மாடலின் பெயர் HVC - F1 ஆகும்.

Image Credit:pinimg

வோக் (Vogue)

வோக் (Vogue)

வோக் ஃபேஷன் உலகின் கண்ணாடி என கூறலாம். ஆரம்பக் காலம் முதல் இன்று வரையும் உலகின் சிறந்த ஃபேஷன் இதழாக வெளியாகி வருகிறது. தகவலில் மட்டுமல்ல, தங்க புத்தகங்களின் அச்சிலும் சிறந்த தரத்தை கடைப்பிடிக்கும் வோக் இதழின் முதல் மேகஸின் கவர் இப்படி தான் இருந்தது.

Image Credit:pinimg

ஆணுறை!

ஆணுறை!

குவாலிட்டியை தாண்டி இன்று பல ஃபிளேவர்களில் ஆணுறைகளை விற்று வருகின்றனர் பல தயாரிப்பு நிறுவனங்கள். இதோ! 1640ல் முதன் முதலில் வெளியான செம்மறியாட்டு தோலில் தயாரிக்கப்பட்ட முதல் ஆணுறை.

Image Credit:imgur

பார்பி டால்!

பார்பி டால்!

பார்பி டால் என்றால் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பிடிக்கும். பொம்மைகளில் அழகை தாண்டி கவர்ச்சியை கொண்டு வந்த பொம்மை பார்பி டால். பார்பி டாலின் புகழ் வெறும் பொம்மையுடன் நிற்காமல் கார்டூன், அனிமேஷன் படங்கள் என வெகு பிரபலம் அடைந்தது. இதோ! ஆரம்ப காலத்தில் வெளியான முதல் பார்பி பொம்மைகள் இப்படி தான் தோற்றமளித்தன.

Image Credit:yaplakal

ஐ-போன்!

ஐ-போன்!

இந்த தலைமுறையில் பிறந்திருந்தாலும், குறைந்த காலக்கட்டத்தில் பெரும் வளர்ச்சி கண்ட பொருள் ஐ-போன். பல புதிய டெக்னாலஜிகளை மொபைலில் கொண்டுவந்த பெருமையும் ஐ-போனுக்கு உண்டு. ஆரம்பக் காலத்தில் வெளியான முதல் ஐ-போனின் தோற்றம் இது.

Image Credit:appadvice

கோல்கேட்!

கோல்கேட்!

கரி தேய்த்து பல் துலக்கி வந்தவர்களை வெள்ளை சூழ்ச்சியில் பற்பொடிக்கு மாற்றிய பெருமை கோல்கேட்டுக்கும் உண்டு. இன்று சென்ஸிடிவ் பற்கள், குழந்தைகளுக்கு, வாய் துர்நாற்றத்திற்கு என பல்வேறு வகைகளில் கிடைக்கும் கோல்கேட் நிறுவனத்தின் ஆரம்பக் கால பற்பொடி டப்பாவின் தோற்றம்.

Image Credit:imgur

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: pulse, insync
English summary

World Famous Products and How They Looked at the Time of Their Invention!

World Famous Products and How They Looked at the Time of Their Invention!
Subscribe Newsletter