For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீதை, திரௌபதி..இவங்கெல்லாம் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுத்தால் என்னாவது?

ராமயணம் மற்றும் மகாபாரதக் காலங்களிலேயே பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது தொடர்கிறது, அப்போதிருக்கும் பெண்கள் இன்றைக்கு புகார் கொடுத்தால் எப்படியிருக்கும்.

|

சமீபத்திய ட்ரெண்ட்டாக மீ டூ இருக்கிறது. இதில் பலப் பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியாலன அத்து மீறல்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்கள்.

நாளுக்கு நாள் இத்தனைப் பெண்கள் பாதிக்கப்படுவதுடன் அவற்றை வெளியில் சொல்லவே பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இந்த விஷயத்தில் மட்டும் தான் தவறு செய்கிறவர்கள் தைரியமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூனிக்குறுகியும் நிற்கிறார்கள்.

Women in epics are filed complaint against women harassment

எங்கே தான் பாதிக்கப்பட்டது தெரிந்தால் அவமானமாகிடுமோ என்று பயந்தே பெண்கள் பலர் வாயைத் திறக்காமல் இருக்கிறார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆண் மக்கள் வயது வித்யாசங்களின்றி பெண்கள் என்றாலே அவர்களை பாலியல் ரீதியாக சீண்டலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரம்பப்புள்ளி :

ஆரம்பப்புள்ளி :

இதனுடைய துவக்கம் ஆண் பெண் பாரபட்சத்தை காட்டும் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அதற்கும் முன்னதாக சென்று பார்க்க வேண்டும்.

நம்முடைய கலாச்சாரம்,புராணங்கள் என்று காலங்காலமாக கற்பிக்கப்பட்டு வந்த விஷயத்தை கொஞ்சம் கூட ஆராயமல் மறு கேள்விகேட்காமல் அப்படியே நம்பினோம். அந்த நம்பிக்கையில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் துளிர்விட்டிருக்கிறது.

இதிகாசங்கள் :

இதிகாசங்கள் :

மனிதர்களால் நடத்தப்பட்ட காப்பியங்கள், புறநானுறு, அகநானுறு, மன்னர்கள் போன்றவற்றை கூட விட்டுவிடலாம். ஏனென்றால் இவர்களுக்கும் முன்னோடியாய் கடவுளே மனித உருவில் வந்து நடத்திய நாடகம். மனிதர்களுக்கு நற்கருத்துக்களை போதிப்பதற்காக

கடவுள்கள் பூலோம் வந்து நடத்திய இதிகாசங்களை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியாவைப் பொருத்தவரை ராமயணமும் மகாபாரதமும் இதிகாசங்களாக பார்க்கப்படுகின்றன.

Image Courtesy

மகாபாரதம் :

மகாபாரதம் :

பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடக்கிற விஷயங்கள் தான் மகாபாரதம். இதிலேயே அவர்களின் பிறப்பு, வளர்ப்பு, குணநலன்கள் எல்லாமே விவாதிக்கப்படுகிறது. எது தர்மம்,எவையெல்லாம் அதர்மம், எது பாவம்,முன்வினையால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் போன்று விவரமாக சொல்லப்பட்டிருக்கும்.

கிருஷ்ணரின் லீலைகள் என்று தனிக்கதை வேறு இடையில் புகுந்து ஓடும். அதோடு இதேப் போன்று ஏராளமான கிளைக்கதைகளும் உண்டு.

ராமாயணம் :

ராமாயணம் :

தசரத அரசரரும் அவரது மூன்று மனைவிகள் மற்றும் நான்கு மகன்களைப்பற்றிய கதை இது. போட்டியில் வென்று சீதாவை திருமணம் செய்து கொள்வது,தந்தையின் ஆணைப்படி மனைவி மற்றும் தம்பியுடன் 14 வருடங்கள் காட்டிற்கு செல்வார் ராமர். பின்னர் அங்கே காட்டில் சீதையை ராவணன் கடத்திச் செல்ல ஹனுமன் உதவியுடன் மீட்டு வருவார்.

பல இன்னல்களைக் கடந்து மீண்டும் ஆட்சியில் ராமர் அமரும் வகையில் ராமாயணம் முற்றுப்பெறும்.

பெண்கள் :

பெண்கள் :

இவ்விரண்டு இதிகாசங்களிலும் ஏராளமான பெண் கதாப்பாத்திரங்கள் வருகின்றன. அவற்றில் முதன்மையான சில கதாப்பாத்திரங்கள் பற்றிய கதை தான் இப்போது நீங்கள் படிக்கப் போகிறீர்கள்.

அப்போது பெண்கள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள், அதனை எப்படி நியாயப்படுத்தியிருக்கிறார்கள் அதனை இன்றளவும் போற்றி கடைப்பிடிக்கிற வழக்கமாய் எப்படி உருமாற்றியிருக்கிறார்கள் என்பதற்கான ஆரம்பக்கதையை தான் இப்போது நீங்கள் தொடரப்போகிறீர்கள்.

இன்றைய நிலை :

இன்றைய நிலை :

ராமரின் மனைவியான சீதை, ராவணனின் மனைவியான மண்டோதரி, பஞ்ச பாண்டவர்களின் மனைவியா திரௌபதி,ராமரால் சாபவிமோஷனம் பெற்ற கௌதம மகரிஷியின் மனைவியான அகலிகை.

இதிகாச காலத்து நாயகிகளான இவர்கள் எல்லாம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளுக்கு எதிராக புகார் கொடுத்தால் என்னென்ன புகார்களை எல்லாம் கொடுத்திருப்பார்கள் என்ற சிறிய கற்பனை.

இது வெறும் பாலியல் ரீதியிலான வன்கொடுமை மட்டுமே. பெண்களை பாலியல் ரீதியாக கூட தாக்கலாம் என்று கடவுள்களே பிரச்சாரம் செய்த உண்மை தான் இது.

அந்த உரிமை ஆண்களுக்கு இருக்கிறது என்று சொன்னதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அதோடு இதிகாச காலத்து ரோமியோவான கிருஷ்ணருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குறித்த புகார்களை எல்லாம் தொகுத்து தனிப்புத்தகமே வெளியிடலாம்.

சீதை :

சீதை :

கணவர் ராமரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவரின் மாற்றாந்தாய் சொன்னதைக் கேட்டு கணவர் மற்றும் அவருடைய தம்பியான லக்ஷ்மணனுடன் 14 வருடங்கள் காட்டில் வாழ்ந்தேன்.

அப்போது என்னை ராவணன் கடத்திச் சென்றான்.அப்போதும் கணவர் மீதிருந்த தீராக்கதாலால் ராமன் வந்து என்னை மீட்டுச் செல்வார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஒருவழியாக நண்பர் ஹனுமன் உதவியுடன் என்னை மீட்டு வந்தார்.

ராவணன் என்னைக் கடத்திச் சென்று சில காலம் இருந்ததால் என் மீது சந்தேகப்பட்டு உண்மைப் பத்தினியாக இருந்தால் நெருப்பில் விழச் சொன்னான்.அதோடு வேறு ஆண்மகனுடன் சில காலம் இருந்ததால் அரசியாகும் தகுதி எனக்கில்லை என்று ஊரார் சொல்கேட்டு,

கர்ப்பவதியான என்னை காட்டில் இருந்த வால்மீகி அவர்களின் இல்லத்தில் விட்டார்.அங்கே எனக்கு லவன் குஷன் என்று இரண்டு மகன்கள் பிறந்தனர்.

இப்படி என் மீது தீராச் சந்தேகம் கொண்டிருக்கும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திரௌபதி :

திரௌபதி :

என் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் சந்தோசமாக பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனை திருமணம் செய்து கொண்டேன்.

ஆனால் அவரின் தாயார் குந்தி அர்ஜுனனிடம் நீ கொண்டு வந்ததை உன் நான்கு சகோதரர்களிடம் பகிர்ந்து கொள் என்று சொல்ல,மறுப்பேதும் சொல்லாமல் நீ என் சகோதரர்களுக்கும் மனைவியாக இருக்க வேண்டும் என்றார் என் காதல் கணவர். வேறு வழியின்றி அதற்கு சம்மதித்தேன்.

இதைவிடக் மிகக் கொடுமையாக அர்ஜுனனின் மூத்த சகோதரரான தருமர் தன் பெரியப்பா மகன்களான கௌரவர்களுடன் சூதாடினார். அதில் என்னையும் வைத்து விளையாடித் தோற்றார். ஆயிரக்கணக்கான சபையோர் கூடியிருக்க கௌரவர்கள் என் சேலையை அவிழ்க்க முயன்றனர்.

தங்களின் மனைவியை சபையோர் முன்னிலையில் மானபங்கம் செய்யப்படுகிறார் என்று தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என் ஐந்து கணவன்மார்களும் அமைதியாக வேடிக்கைப் பார்த்தனர்.

என்னை மானபங்கம் செய்த கௌரவர்கள் மீதும், அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த கணவர்க்ள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டோதரி :

மண்டோதரி :

ஐபிசி 354ன் படி பெண்ணுக்கு எதிராக நடத்தப்பட்ட க்ரிமினல் குற்றத்திற்காகவும், செக்சன் 354 ஏ பிரிவின் படி பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் அங்கதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாயனனின் மகளான நான் இராவணனை திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகு தான் அவன் ஒரு பெண் பித்தன் என்று தெரிந்தது. எனினும் அவரை எப்படியாவது திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்,ராமரின் மனைவியான சீதையை கடத்திய போது அந்த நம்பிக்கை முற்றிலுமாக வீணானது.

சீதையை மீட்க வந்த ராமர் மற்றும் ஹனுமன் ஆகியோரால் ராவணன் ஆண்டு வந்த இலங்கையே துவம்சமானது. எங்களின் மகன்கள் அத்தனைப் பேரையும் போரில் இழந்தோம்.

மேலும் இதில் எப்படியாவது தான் வென்றே ஆகவேண்டும் என்று என் கணவர் ராவணன் அக்னி யாகத்தை நடத்தினார்.

அக்னி யாகம் :

அக்னி யாகம் :

அதனை கலைக்க நினைத்த ராமர் அனுமனையும், வானர இளவரசரான அங்கதனையும் கொண்ட வானர வீரர்களின் படைகளை அனுப்பி இடைஞ்சலை ஏற்படுத்தினான். பெரும் சேதங்கள் நிகழ்ந்தாலும் ராவணன் தன்னுடைய யாகத்தை தொடர்ந்து கொண்டேயிருந்தார்.

இதனால் வெறுத்துப் போன அங்கதன் என் தலைமுடியைப் பற்றி இராவணன் முன் இழுத்து வந்தார்.

வலி பொறுக்கமுடியாமல் என்னைக் காப்பாற்றும் படி இராவணனிடம் கெஞ்சினேன். இதே போலத்தான் ராமனின் மனைவியான சீதையும் உன்னிடம் கொடுமைகளை அனுபவிக்கிறாள் என்று சொன்னதும் கோபமுற்ற ராவணன் அடிக்கப் பாய்ந்தார்.

யாகத்தில் இருந்து திசை திருப்பி ராவணனை எழச் செய்துவிட்டப் படியால் அங்கதன் என்னை விடுவித்தான்.

தங்களின் சுயலாபத்திற்காக என்னைத் தாக்கிய அங்கதன் மீதும்,என்னைத் திருமணம் செய்து கொண்டு இன்னொருவரின் மனைவியை திருமணம் செய்து கொள்ள நினைத்த கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Image Courtesy

அகலிகை :

அகலிகை :

என்னை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த இந்திரன் மீது ஐபிசி 375 ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரம்மனின் மகளான என்னை போட்டியில் வென்று திருமணம் செய்து கொண்டார் கௌதம மகரிஷி. நானும் மிகவும் சந்தோசத்துடனும் முழு விருப்பத்துடனே திருமணம் செய்து கொண்டேன்.

இந்நிலையில் என் அழகில் மயங்கிய இந்திரன் என்னோடு உறவு கொள்ள வேண்டும் என்றான்.அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்து என் கணவரைத் தவிர வேறு எந்த ஆண்மகனுடனும் நான் உறவு கொள்ளமாட்டேன் என்று உறுதியாக தெரிவித்தேன்.

இதனை உணர்ந்த இந்திரன் என் கணவர் வீட்டில் இல்லாத சமயமாக பார்த்து, என் கணவரின் உருவில் மாறி வந்தார். நானும் என் கணவர் என்றே நினைத்து வீட்டிற்குள் அனுமதித்தேன். பிறகு என்னுடன் உறவு கொண்டார். பின்னர் தான் எனக்கு உண்மை விளங்கியது.

இந்நிலையில் வேறு ஆண்மகனுடன் உறவு கொண்டதை அறிந்த என் கணவர் என்னை கல்லாக மாறும்படி சாபமிட்டார்.

இரண்டு ஆண்களால் என் வாழ்க்கையே வீணானது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women in epics are filed complaint against women harassment

Women in epics are filed complaint against women harassment
Desktop Bottom Promotion