செத்துப் போன கணவர் கன்றுக்குட்டியா மீண்டும் பிறந்து வந்த அதிசயம்!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

மழை வேண்டி, ஊர் செழிக்க வேண்டும் என்றெண்ணி விலங்குகளுக்கு திருமணம் செய்துவைக்கும் சடங்குகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள்.

காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னது சரியாகத்தான் இருக்கிறது. சாதி மாறி திருமணம் செய்வது எல்லாம் பழசு இப்ப புது ட்ரெண்ட் என்ன தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணவரும் கன்றும் :

கணவரும் கன்றும் :

கம்போடியாவின், கிராடி மாகாணத்தைச் சேர்ந்த மூதாட்டி, கிம் ஹாங், அவரின் கணவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். அதே நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்த பசு, ஒரு ஆண் கன்றை ஈன்றது. அந்த கன்றின் செயல்பாடுகள் அனைத்தும், தன் கணவரின் செயல்பாடுகளை ஒத்திருப்பதாக, கிம் ஹாங் கருதினார்.

Image Courtesy

கன்றுடன் காதல் :

கன்றுடன் காதல் :

கிம்முக்கும் அந்த கன்றுக்குட்டிக்கும் ‘காதல்'. இறந்து போன தன் கணவரே கன்றுக்குட்டியாக வந்திருக்கிறார் என்று நம்பத்துவங்கிவிட்டார். கிம்மிடம் மிகுந்த பாசத்துடன் பழகும் அந்த கன்று, மகன்களிடமும் பாசமும் கண்டிப்புமாய் நடந்து கொள்கிறதாம்! (அப்பாவாம்)

Image Courtesy

திருமணம் :

திருமணம் :

பின்னர் ஒரு சுபமுகர்த்த நன்னாளில் ஊரார் எல்லாரையும் அழைத்து, அந்த கன்றையே திருமணம் செய்திருக்கிறார் கிம். அந்த கன்றை தினமும் குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது என மிகவும் சிரத்தையுடன் பணிவிடைகளை செய்து கொண்டிருக்கிறார். கன்றுக்குட்டிக்கென்று தன் கணவர் பயன்படுத்திய அறை, கட்டில் என சகல ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார் கிம்.

Image Courtesy

சாசனம் :

சாசனம் :

தான் உயிரோடு இருக்கும் வரை, அந்த கன்றுக்குட்டியை பராமரிக்கப் போவதாக தெரிவித்துள்ள கிம், தனக்குப் பின்னும் தன்னுடைய கணவரை(கன்றுக்குட்டியை) மரியாதையாக பராமரிக்க வேண்டும், அதனை விற்றுவிடக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார்.

Image Courtesy

செத்தாலும் விடமாட்டோம் :

செத்தாலும் விடமாட்டோம் :

கன்று இயற்கையாக இறக்கும் வரை பராமரித்து, அது இறந்தவுடன் ஈமச்சடங்குகளையும் தவறாமல் செய்ய வேண்டுமாம்....

எங்க வீட்டு பப்பி காலச் சுத்தி சுத்தி வருதே!!!!!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: marriage women facts
English summary

A Woman Married Calf.

cambodian woman married a calf,because she belives that her husband reiencarnated as this calf
Story first published: Saturday, July 22, 2017, 12:15 [IST]