கொடையில் சிறந்தவன் கர்ணனா? தர்மனா? கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு எடுத்த பாடம்!

Posted By:
Subscribe to Boldsky

அர்ஜுனன் மனதில் ஒரு கேள்வி பல நாளாக உறுத்திக் கொண்டே இருந்தது. தன் அண்ணன் தர்மனும் தான் வருவோர் எல்லாருக்கும் தானம், தர்மம் செய்கிறான். ஆனால், ஏன் மக்கள் அனைவரும் கர்ணனை சிறந்த வள்ளல் என கூறுகின்றனர்? என எண்ணி எண்ணி ஓய்ந்தே போனான் அர்ஜுனன்.

இந்த கேள்விக்கு விடை அறிந்தே ஆகவேண்டும் என பகவான் கிருஷ்ணரிடம் செல்கிறான் அர்ஜுனன். கிருஷ்ணரும் அனைவரையும் போல பொட்டில் அடித்தது போல, ஆம்! தர்மனை காட்டிலும் கொடையில் சிறந்தவன் கர்ணனே என கூற அதிர்ந்து போகிறான் அர்ஜுனன்.

பிறகு, எப்படி எதை வைத்து அப்படி நீங்களும் அப்படி கூறுகிறீர் என பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் வினவ..., அதை நிரூபிக்க ஒரு நாடகமும் போடுகிறார் கிருஷ்ணர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்தணர் வேடம்!

அந்தணர் வேடம்!

கிருஷ்ணர் அர்ஜுனனை அழைத்து, போய் அந்தணர் வேடமிட்டு வா, நான் உனக்கு கர்ணன் தான் சிறந்த கொடையாளன் என நிரூபிக்கிறேன் என கூறுகிறார்.

பிறகு பகவான் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் அந்தணர் வேடமிட்டு தர்மன் வீட்டிற்கு முதலில் செல்கின்றனர்.

ஓயாத மழை!

ஓயாத மழை!

பகவன் கிருஷ்ணர் வருணனை வேண்டி ஓயாத பெரும் மழை பெய்ய செய்கிறார். அந்த மழை நின்ற பிறகு, தர்மன் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே தர்மன் அந்தணர் வேடத்தில் இருந்த பகவான் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனை சகல மரியாதையுடன் அழைத்து உபசரிக்கிறார்.

வேண்டுகோள்!

வேண்டுகோள்!

ஐயா! எங்கள் வீட்டில் இருந்த விறகுகள் எல்லாம் மழையில் நனைந்துவிட்டன. வீட்டில் அடுப்பெரிக்க விறகுகள் ஏதும் இல்லை. நீங்கள் தான் கொடுத்துதவ வேண்டும் என வேண்டுகிறார்.

தர்மனின் பதில்...

தர்மனின் பதில்...

அதற்கு தர்மன்..,"எங்கள் அரண்மனையில் இருந்த விறகுகள் எல்லாம் பயன்படுத்தி ஆயிற்று. இனி வேண்டும் என்றால் மரத்தை தான் வெட்ட வேண்டும்.

மரங்களும் மழையில் நனைந்து ஈரமாக தான் இருக்கின்றன. வேண்டுமானால் நீங்கள் குடும்பத்துடன் வந்து அரண்மனையில் உணவருந்தி செல்லுங்களேன் என பதில் அளிக்கிறார்.

அந்தணர் வேடத்தில் இருந்த இருவரும் சரி என தலையாட்டி இடத்தை விட்டு நகர்கின்றனர்...

கர்ணன் அரண்மனையில்...

கர்ணன் அரண்மனையில்...

கர்ணன்னும் அந்தணர் வேடமிட்டு வந்த கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனை மரியாதை செய்து வரவேற்கிறார். அர்ஜுனனும், கிருஷ்ணரும் அதே உதவியை கர்ணனிடமும் வேண்டினர்.

கர்ணநும் அதே சூழலில் தான் இருந்தான். ஆனால், அவன் விறகுகள் இல்லை என பதில் அளிக்கவில்லை.

வில், அம்பை எடுத்த கர்ணன்!

வில், அம்பை எடுத்த கர்ணன்!

உடனே தனது வில்லை எடுத்து, அம்பை நானிலேற்றினான். பகவான் கிருஷ்ணனும், அர்ஜுனனும் கர்ணனின் செயலை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

மறுநொடியே அவர்கள் என்ன நடக்கும் என யோசிக்கும் முன்னர், அம்புகளை தொடர்ந்து தன் அரண்மனை ஜன்னல் மற்றும் கதவுகளில் எய்து உடைத்தெறிந்து. இதோ! நீங்கள் கேட்டவை. எடுத்து சென்று பயன்பெறுங்கள் என அனுப்பி வைத்தான்!

புரிந்துக் கொண்ட அர்ஜுனன்!

புரிந்துக் கொண்ட அர்ஜுனன்!

அந்த தருணத்தில் தான் அர்ஜுனனே.., தனது அண்ணன் தர்மனை காட்டிலும் கர்ணன் தான் சிறந்த கொடையாளன் என உணர்ந்து. பகவான் கிருஷ்ணருக்கு நன்று உரைத்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who is Best in Charity? Karnan or Dharman? A Untold Lesson by Lord Krishna!

Who is Best in Charity? Karnan or Dharman? A Untold Lesson by Lord Krishna!
Story first published: Thursday, June 29, 2017, 10:40 [IST]