2018- ஆம் ஆண்டில் இந்த கிழமையில் எதை செய்தாலும் வெற்றி தானாம்!

Written By:
Subscribe to Boldsky

அனைவருக்குமே 2018 ஆம் ஆண்டு நமது ராசியான நாள் எது என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும். கிரங்களின் பெயர்ச்சியால் அனைத்து ராசியினருக்குமே சில மாற்றங்கள் உருவாகி இருக்கும். இந்த மாற்றம் அதிகமாக அனைத்து ராசியினருக்குமே நேர்மறையாகவும், உங்களுக்கு சாதகமானதாகவும் தான் இருக்கும்.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாரத்தில் ஒவ்வொரு ராசி நாட்கள் இருக்கும். இந்த நாட்கள் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். இந்த நாட்களில் நீங்கள் உங்களது முக்கியமான காரியங்களை செய்தால் நீங்கள் செய்யும் காரியம் வெற்றியில் முடியும். இந்த பகுதியில் உங்களது ராசியான கிழமை என்னவென்று காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் 2018-ஆம் வருடத்தில் மிகச்சிறந்த நன்மைகள் நடக்க போகிறது. இவர்களது ராசியான கிழமைகள், திங்கள், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகும். இந்த நாட்களில் நீங்கள் நல்ல காரியங்கள், புதிய முயற்சிகள், முதலிடுகள் போன்றவை செய்தால் சிறப்பாக அமையும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இந்த வருடத்தில் வெற்றியடைய நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். உங்களது ராசியான நாட்கள், புதன் மற்றும் செவ்வாய்க் கிழமைகளாகும். ஏதேனும் முக்கிய காரியங்களை இந்த கிழமைகளில் செய்தால் மனநிறைவான வெற்றி கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் காதல் சிறப்பாக அமையும். இவர்கள் தங்களது காதலை திங்கள், புதன், சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிப்படுத்தலாம். இந்த நாட்கள் எல்லாம் உங்களுக்கு 2018- ஆம் வருடத்தில் மறக்க முடியாத நாட்களாக அமைய போகிறது.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வருடம் பல தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டியிருக்கும். இவர்கள் இந்த வருடம் அதிகமான கடின உழைப்பையும், வேலையிலும், படிப்பிலும் காட்ட வேண்டியிருக்கும். உங்களது ராசியான நாட்கள் செவ்வாய், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகும்.

சிம்மம்

சிம்மம்

வரும் 2018- ஆம் ஆண்டு உங்களது மதிப்பு, மரியாதை உயரப் போகிறது. உங்களது முதலீடுகள் அல்லது வியாபார ரீதியிலான செயல்பாடுகளை நீங்கள் உங்களது ராசி நாட்களில் திங்கள், புதன், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செய்தால் நன்மை பிறக்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு வரும் 2018 -ஆம் வருடம் நற்செய்திகளாக வந்து குவியப் போகிறது. நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி காண்பீர்கள். வருப்போகிற வருடம் உங்களது ராசி நாட்கள் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வரப்போகிற 2018-ஆம் வருடத்தில் நிறைய மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால் நீங்கள் கவலைப்பட தேவையே இல்லை நீங்கள் உங்களது முயற்சிகளை இந்த நாட்களில் செய்தால் உங்களுக்கு 100% வெற்றி நிச்சயம். இந்த வருடத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உங்களுக்கு ராசியான கிழமைகளாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பானதாக அமையும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். நீங்கள் வேலை சம்மந்தமாகவோ அல்லது வாழ்க்கை சம்மந்தமாகவோ ஏதேனும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால், திங்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யலாம்.

தனுசு

தனுசு

வருகின்ற 2018-ஆம் வருடமானது உங்களுக்கு அதிக முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தரக்கூடியதாக அமையும். நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது உங்களது ராசி நாட்களில் எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு ராசியான நாட்கள் வெள்ளி, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகும்.

மகரம்

மகரம்

நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் நிறைவேறும். பல வெற்றிகள் உங்களை தேடி வரும். உங்களது அதிஷ்டமான நாட்கள் திங்கள் மற்றும் ஞாயிறு ஆகும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2018- ஆம் வருடத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்க தான் செய்யும். ஆனால் உங்களது ராசியான நாட்களில் நீங்கள் முயற்சிக்கும் ஒவ்வொரு காரியமும் வெற்றியில் தான் முடியும். உங்களது ராசியான தினங்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமையாகும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த ஆண்டு பல புதுமைகளை செய்வார்கள். உங்களது முன்னேற்றத்தை யாராலும் தடுக்கவே முடியாது. நீங்கள் உங்களது ராசியான நாள் திங்கள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life astrology
English summary

What Are Lucky Days According To Your Zodiac Sign

What Are Lucky Days According To Your Zodiac Sign
Story first published: Thursday, December 21, 2017, 13:30 [IST]