கிருஷ்ணன் - நாரதர் புணர்தலும், தமிழ் புத்தாண்டு வருடங்களும் - விசித்திர கதை!

Posted By:
Subscribe to Boldsky

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? திருவள்ளுவர் ஆண்டா? அல்லது சித்திரையா என்ற குழப்பமும், விவாதமும் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உண்மையில் தை முதல் நாள் தான் தமிழர் கொண்டாடிய பெரும் பண்டிகை ஆகும். எனவே, அதை புத்தாண்டாக கொண்டாடுவதே தமிழருக்கு உன்னதமானது என பல அறிஞர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இப்போது நாம் கொண்டாடி வரும் தமிழ் புத்தாண்டான 60 வருடங்களும் அதன் பின்னணி கதையான கிருஷ்ணன் நாரதன் புணர்தல் உறவு பற்றியுமான கதையை பற்றி தான் நாம் இங்கு காண போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாரதர் வேண்டுதல்!

நாரதர் வேண்டுதல்!

ஒருமுறை கிருஷ்ணனை சென்று பார்த்த நாரதர், நீ மட்டுமே கோபியருடன் கொஞ்சி, குலாவிக் கொண்டிருக்கிறாய். இதனால் நான் காதலிக்க ஒரு பெண் இல்லையே என்பது போல வினவ, அதற்கு கிருஷ்ணர், எந்த கோபியர் வீட்டில் நான் இல்லையோ, அந்த பெண்ணையே நீ உன் துணையாய் தெரிந்தெடுத்துக் கொள் என்று கூறினாராம்.

தேடுதல் வேட்டை...

தேடுதல் வேட்டை...

இதற்கடுத்து, நாரதரும் கிருஷ்ணன் இல்லாத கோபியர் வீட்டை தேடி அலைந்துள்ளார். ஆனால், நாரதர் சென்ற அணைத்து வீட்டிலும் கிருஷ்ணன் இருந்துள்ளார். இதனால் கோபமும், துயரமும் கொண்ட நாரதர், கிருஷ்ணனை மீண்டும் பார்க்க சென்றார்.

தானே பெண்ணாக மாறுதல்!

தானே பெண்ணாக மாறுதல்!

எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கு கோபியருடன் நீ இருக்கிறாய், நான் எந்த பெண்ணை தேர்வு செய்ய. பேசாமல் நீயே என்னை பெண்ணாக மாற்றி, என்னுடன் உறவு கொள் என நாரதர் வேண்டினாராம். அதை ஏற்று கிருஷ்ணர், நாரதரை ஆற்றில் குளித்து எழு சொல்லி, பெண்ணாக மாற்றி உறவு கொள்ள துவங்கினாராம்.

அறுபது பிள்ளைகள்!

அறுபது பிள்ளைகள்!

அப்படி கிருஷ்ணரும், நாரதரும் கொண்ட உறவில் புணர்தலில் பிறந்த அறுபது குழந்தைகள் தான் நாம் இப்போது சித்திரை முதல் பங்குனி வரை கடைபிடிக்கும் தமிழ் வருடங்களில் இடம் பெற்றுள்ள பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது ஆண்டுகள் ஆகும்.

ஆரியர்!

ஆரியர்!

ஆரியர் வருகைக்கு பிறகு, நாம் இந்த சித்திரை முதல் பங்குனி வரையிலான இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், அதற்கு காரணமாக இந்த பின் கதை கூறப்படுகிறது. இந்த கதை அபிதான சிந்தாமணியிலும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Relationship Story of Lord Krishna and Naradhar Behind Tamil New year!

Weird Relationship Story of Lord Krishna and Naradhar Behind Tamil New year!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter