காலணிகள் எப்படி ஒருவரது தொழிலையும், செல்வ நிலையையும் பாதிக்கும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஜோதிடத்தின் படி, மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒவ்வொன்றும், சில கோள்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அதில் அணியும் காலணியும் தான். அதில் ஒருவரது காலணி சனி கோளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

Vastu Shastra: Ways How Your SHOES Can Pull Down Your Career And Wealth!

சில நேரங்களில் நாம் வாழ்வில் சந்திக்கும் முடிவற்ற போராட்டங்களுக்கும், துரதிர்ஷ்டங்களுக்கும் காரணமாக நாம் அணியும் காலணிகள் நமக்கு தெரியாமலேயே காரணமாக இருக்கும் என்பது தெரியுமா? இங்கு ஒருவர் அணியும் காலணி எப்படி தொழில் மற்றும் செல்வ வளத்தை பாதிக்கிறது என்று ஜோதிடம் கூறுவன பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

காலணியை திருடியோ அல்லது பரிசாகவோ யார் கொடுத்தாலும், அதை அணியக் கூடாது. இந்த வடிவில் வரும் காலணி, ஒருவரது இலக்கை அடைய விடாமல் செய்வதுடன், துரதிர்ஷ்டத்தை வழங்கி, செய்யும் தொழிலையும் பாதிக்கும்.

#2

#2

இன்டர்வியூ செல்லும் போது, கிழிந்த நிலையில் இருக்கும் காலணியை அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனேனில் இது நமக்கு வரும் அதிர்ஷ்டத்தை துரதிர்ஷ்டமாக மாற்றிவிடும். மேலும் எப்போதுமே கிழிந்த காலணியை அணிவதைத் தவிர்க்க வேண்டும். கிடைக்கக்கூடிய வெற்றி நிறுத்தி வைக்கப்படும்.

#3

#3

வங்கி அல்லது கல்வி சம்பந்தமான பணியிடங்களுக்கு காபி அல்லது டார்க் ப்ரௌன் நிற காலணியை அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்நிற காலணிகள் வேலையை நெருக்கடிக்குள்ளாக்கும். மேலும் வருமானத்திற்கு கேடு விளைவிக்கும்.

#4

#4

மெடிக்கல் துறை அல்லது இரும்பு சம்பந்தப்பட்ட இடங்களில் வேலை செய்பவர்கள், வெள்ளை நிற காலணியை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெள்ளை நிற ஷூக்கள் துரதிரஷ்டத்தைக் கொடுப்பதோடு, செல்வ நிலையையும் பாதிக்கும்.

#5

#5

நீர் சம்பந்தமான அல்லது ஆயுர்வேத துறைகிளில் வேலை செய்பவர்கள் நீல நிற காலணி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

#6

#6

சாப்பிடும் போது காலணி அணியக்கூடாது. இது வாழ்வில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். எனவே எங்கு சாப்பிட்டாலும், காலணி அணிந்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

#7

#7

வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலணிகளை வடகிழக்கு பகுதியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் வட கிழக்கு பகுதியில் தான் சூரியக்கதிர்கள் வீட்டினுள் நுழையும். அப்படி நேர்மறை ஆற்றல் நுழையும் போது, அங்கு காலணி இருப்பது நல்லதல்ல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vastu Shastra: Ways How Your SHOES Can Pull Down Your Career And Wealth!

Here are some ways how your shoes can pull down your career and wealth. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter