புலிகளைப் பற்றி இதுவரை அறிந்திடாத 13 உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியா மற்றும் வங்க தேசத்தின் தேசிய விலங்காக இருக்கும் புலி 97 சதவீதம் அழிந்து விட்டது. புலிகள் அழிவு என்பது இன்றளவும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

உலகளவில் 9-க்கும் மேற்பட்ட புலி இனங்கள் இருந்தன இவற்றில் பல இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டது. ஒரிசில இனங்கள் அழிவின் விளிம்பில் நிற்கிறது.

சர்வதேச புலிகள் தினமான இன்று புலிகளைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உறுமல் :

உறுமல் :

புலியின் உறுமல் 3கிமீ தொலைவிலிருந்தும் கேட்கும்.

உரிமை :

உரிமை :

உலகளவில் இருக்கும் புலிகளை விட அமெரிக்க குடிமக்களிடம் இருக்கும் புலிகளின் அளவு அதிகம்.

பயங்கரம் :

பயங்கரம் :

19 ஆம் நூற்றாண்டில் ஓரே ஒரு புலி நேபால் மற்றும் இந்திய மக்கள் 430 பேரை கொன்றது.

கோடுகள் :

கோடுகள் :

புலியின் உடலில் இருக்கும் கோடுகள் மேல் புறத்தில் உள்ள முடிகளில் மட்டுமல்ல அதன் தோலிலும் இப்படியான வரிக்கோடுகள் இருக்கும்.

பூனை :

பூனை :

பூனையின் 95க்கும் அதிகமான டி.என்.ஏ புலிகளிடம் இருக்கிறது.

ரேகை :

ரேகை :

மனிதர்களுக்கு இருக்கும் கை ரேகை போன்று தான் புலிகளின் உடலில் இருக்கும் கோடுகள். ஒவ்வொரு புலிக்கும் இது வேறுபடும்.

கண்கள் :

கண்கள் :

பெரும்பாலும் புலிகளுக்கு மஞ்சள் நிறத்தில் தான் கண்கள் இருக்கும் வெள்ளைப்புளிகளுக்கு நீல நிறத்தில் கண்கள் இருக்கும் சில வெள்ளைப்புளிகளுக்கு மாறுகண் இருக்கும். மனிதர்களுக்கு தெரிவது போன்றே புலிகளுக்கு வண்ணங்கள் தெரியும்.

அழிவு :

அழிவு :

2016 ஆம் ஆண்டு புலிகள் முற்றிலும் அழிந்து விட்டதாக கம்போடியா அறிவித்தது.

இரவு :

இரவு :

புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் வேட்டையாடுவதையே விரும்பும். ஏனென்ன்றால் புலிகளுக்கு இரவு நேரத்தில் மனிதர்களை விட 6 மடங்கு பார்வை கூர்மையாய் இருக்கும்.

Image Courtesy

உணவு :

உணவு :

புலிகள் ஒரு நாளில் 27 கிலோ கறியை உணவாக உட்கொள்ளும். பத்தில் ஒரு புலியின் வேட்டை தான் வெற்றியடையும். இதனால் புலிகளால் நீண்ட நாட்கள் உணவு உண்ணாமல் இருக்க முடியும். புலிகளுக்கு ஜீரண சக்தியும் குறைவு என்பதால் ஒரு நாள் எடுத்துக் கொள்ளும் கிலோ கணக்கிலான உணவினை செரிக்க தாமதமாகும்.

எல்லை :

எல்லை :

புலிகள் தான் வாழுமிடத்தைச் சுற்றி ஓர் எல்லையை வகுத்துக் கொள்ளும் இந்த எல்லைக்குள் பிற விலங்குகள் வராமல் பாதுகாக்கும்.

இந்த எல்லையை தன்னுடைய சிறுநீரால் வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புலியின் சிறுநீர் வாசத்தைக் கொண்டே எல்லைக்குள் இருப்பது ஆணா, பெண்ணா? அதன் வயது போன்றவற்றை பிற புலிகள் கண்டுபிடித்துவிடும்.

ராஜா :

ராஜா :

புலியின் நெற்றியில் இருக்கும் வடிவத்திற்கு சீன மொழியில் ராஜா என்று அர்த்தமாம்!!!

மருந்து :

மருந்து :

புலிகளின் எச்சிலே அதற்கு ஆண்ட்டிசெப்டிக் மருந்தாக செயல்படும். காயம்பட்ட இடத்தில் அதனுடைய எச்சிலை வைத்தால் தொற்று ஏற்படாமல் காத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life
English summary

Unknown Facts of tiger

Unknown Facts of tiger
Subscribe Newsletter