உலக அழகி பட்டம் வென்றால் இதெல்லாம் கிடைக்குமா? உலக அழகிப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

கடந்த சில நாட்களாக இணையத்தில் மிகப்பிரபலமாக இருப்பவர் மனுஷி சில்லர் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து இன்னொரு உலக அழகி. 2000மாவது ஆண்டில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்றார்.

அதன் பிறகு சுமார் பதினேழு ஆண்டுகளுக்கு பின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார். உலக அழகி பட்டம் வெல்லும் 6வது இந்திய பெண் மனுஷி சில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நேரத்தில் இந்தியாவின் உலக அழகிகள் குறித்தும், உலக அழகிப் போட்டியின் சுவாரஸ்யத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரம்பம் :

ஆரம்பம் :

உலக அழகிப் போட்டியின் துவக்கம் பற்றி தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். இது ஆரம்பத்தில் ஓர் ஆண்டு விழாவாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஃபெஸ்டிவ் பிகினி கண்டஸ்ட் என 1951 ஆம் ஆண்டு பிகினி உடை அணிந்து வருபவர்களாக்கான விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த மீடியா உலகம் அது உலக அழகிக்கான போட்டி என்று பிரகடனப்படுத்தியது. இதனை துவக்கிய எரிக் மோர்லே அடுத்தவருடம் அதாவது 1952லிருந்து உலக அழகிக்கான தேர்வு என்று நடத்த ஆரம்பித்தார்.

Image Courtesy

முதல் வெற்றியாளர் :

முதல் வெற்றியாளர் :

1951 ஆம் ஆண்டு இதனை ஆரம்பித்த போது முதல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஸ்வீடனைச் சேர்ந்த கெரஸ்டின் ஹகன்சன். எகிப்தைச் சேர்ந்த ஆண்டிகோன் கோஸ்டாண்டா என்பவர் தான் உலக அழகிப் பட்டம் வென்ற முதல் ஆப்ரிக்கப் பெண்மணி.

அதுவும் இஸ்லாமிய ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலிருந்து உலக அழகிப் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் அவர் தான். 1954 ஆம் ஆண்டு இப்பட்டது வென்றார்.

Image Courtesy

இந்தியா :

இந்தியா :

1966 ஆம் ஆண்டு நடைப்பெற்ற 16வது அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா ஃபேப்ரியா என்ற பெண்மணி உலக அழகிப் பட்டத்தை வென்றார். இவர் இன்னொரு பெருமையையும் பெற்றிருந்தார், அது என்ன தெரியுமா? உலக அழகி பட்டத்தை வெல்லும் முதல் ஆசியவைச் சேர்ந்த பெண்மணியும் இவர் தான்.

Image Courtesy

கால அளவு :

கால அளவு :

ஒவ்வொரு ஆண்டும் அழகிப் போட்டி வெவ்வேறு தினங்களில் நடத்தப்படுகிறது. ஒருவர் உலக அழகி பட்டத்தை தக்க வைத்திருக்கும் காலம் வேறுபடும். எல்லாருக்கும் சரியாக ஒரு வருடம் இருக்காது.

அதிக காலம் உலக அழகி என்ற பட்டத்தை தக்கவைத்திருந்தவர் உலகின் முதல் அழகியாக தேர்வு செய்யப்பட்ட கெரஸ்டீன் தான். ஜூலை 29 1951 அன்று உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.

அடுத்த உலகப்போட்டியில் இவரை வென்ற அழகிக்கு 1952 நவம்பர் 14 அன்று உலக அழகியாக முடிசூட்டப்பட்டது. கிட்டதட்ட ஒரு வருடம்,மூன்று மாதங்கள் மற்றும் பதினாறு நாட்கள் உலக அழகியாக இருந்திருக்கிறார்.

 குறைந்த காலம் :

குறைந்த காலம் :

இதிலேயே மிகக் குறைவான காலத்திற்கு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தவர் வெனின்சுலாவைச் சேர்ந்த அழகி இவியன் சர்கோஸ். இவர் 2011 ஆம் ஆண்டு நடைப்பெற்ற 61வது உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்றார்.

இவருக்கு அடுத்தப்படியாக 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி 62வது அழகிப் போட்டிகான உலக அழகி தேர்வு செய்யப்பட்டார். இவர் சுமார் ஒன்பது மாதங்கள் பன்னிரெண்டு நாட்கள் வரை மட்டுமே உலக அழகியாக இருந்திருக்கிறார்.

Image Courtesy

நீண்ட இடைவேளி :

நீண்ட இடைவேளி :

நம் இந்தியாவின் மனுஷி சில்லர் பதினேழு ஆண்டுகள் கழித்து உலக அழகிப்பட்டம் வென்றார் என்று சொல்கிறோம் அல்லவா? அதைப் போலவே நீண்ட இடைவெளியில் உலக அழகிப் பட்டம் வென்ற நாடு பெரு.

சுமார் 37 வருடங்கள் இடைவேளியில் உலக அழகிப் பட்டத்தை வென்றிருக்கிறார்கள்.

1967 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பதினேழாவது அழகிப் போட்டியில் பெரு நாட்டைச் சேர்ந்த மேட்லைன் ஹார்டாக் பெல் என்பவர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பின்னர் சுமார் முப்பத்தியேழு வருடங்கள் கழித்து 2004 ஆம் ஆண்டு நடைப்பெற்ற 54 வது உலக அழகிப் போட்டியில் மரிய ஜூலியா மண்டிலா என்ற அழகி பட்டம் வென்றார்.

Image Courtesy

இந்திய அழகிகள் :

இந்திய அழகிகள் :

இந்தியாவிலிருந்து அதிகப்படியாக ஆறு உலக அழகிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். 1966 ஆம் ஆண்டு ரீடா ஃபாரியா, 1994 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், 1997 ஆம் ஆண்டு டயானா ஹைடன், 1999 ஆம் ஆண்டு யுக்தா முகி, 2000 ஆம் ஆண்டு ப்ரியங்கா சோப்ரா தற்போது 2017 ஆம் ஆண்டு மனுஷி சில்லர்.

மனுஷியைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

மனுஷி :

மனுஷி :

20 வயதான மனுஷி, பிறந்து வளர்ந்தது ஹரியானா மாநிலத்தில். மருத்துவம் பயிலும் மனுஷியின் பெற்றோரும் மருத்துவர்கள். கல்விக்கு முக்கியத்துவம் தரும் குடும்பத்தின் முதல் ஃபேஷன் ப்ரியர் இந்த சில்லர்.

2017-ம் ஆண்டின் `மிஸ் இந்தியா' போட்டியின் வெற்றியாளரான இவருக்கு, சமூகசேவையில் அதிக ஆர்வம். அவரின் வாழ்நாள் லட்சியம், மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புஉணர்வை இந்தியா முழுவதும் பரப்புவதே. இதற்காக`புராஜெக்ட் ஷக்தி' எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.

அழகிப் போட்டிக்காக தன் ஒரு வருடக் கல்விக்கு ஓய்வுவிடுத்த மனுஷிக்கு, மீண்டும் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து இதய அறுவைசிகிச்சை மருத்துவராகி, சிறு கிராமங்களில் லாபமற்ற மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது ஆசை.

என்ன கிடைக்கும் ? :

என்ன கிடைக்கும் ? :

உலக அழகி என்ற பட்டம் கிடைப்பதுடன் அவர்களுக்கு பரிசாக என்னென்ன கிடைக்கும் தெரியுமா? உலகிலேயே மிகப் பிரபலமான காஸ்மெட்டிக் பிராண்ட் உலக அழகி பட்டம் வென்றவருக்கு ஸ்பான்சர் செய்திடும்.

உலகம் முழுவதும் பயணம் சென்று வர போக்குவரத்துச் செலவு ஏற்றுக் கொள்ளப்படும்.உலகம் முழுவதும் மனிதநேய அடிப்படையிலான உதவியை மேற்கொள்ளலாம். தொண்டு நிறுவனங்கள் ஆரம்பிக்கலாம். இவை எல்லாவற்றையும் விட ஒரு லட்சம் பவுண்ட் பணம் வழங்கப்படும்.

அலங்கரித்துக் கொள்ள வாட்ரோப்,ஹூ உட்பட பல்வேறு சாமான்கள் வழங்கப்படும். பொதுவாக மிஸ் வோர்ல்ட் போட்டு நடத்துபவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். பேஷன் மற்றும் சினிமா உலகின் இவர்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு.

கேள்விகள் :

கேள்விகள் :

பல சுற்றுகளாக நடத்தப்படும் இந்த உலக அழகிப் போட்டியில் பங்கேற்கவே ஏராளமான விதிமுறைகள் உண்டு. அவற்றையெல்லாம் கடந்து முன்னேறிச் செல்வது மட்டுமே வெற்றி வாகையை கொடுத்து விடாது.

உங்கள் புத்திக் கூர்மையை பரிசோதிக்கும் விதத்தில் சில கேள்விகள் கேட்கப்படும். இறுதி மேடையில் கேட்கப்படும் அந்தக் கேள்விக்கு நீங்கள் சொல்லப்போகும் பதில் மட்டுமே உங்களுடைய வெற்றியை தீர்மானிக்கும் கடைசி அஸ்திரமாக இருக்கும்.

2017 ஆம் ஆண்டில் முதல் ஐந்து இடங்கள் பிடித்திருக்கும் அழகிகளிடம் என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

Image Courtesy

ஸ்டீஃபைன் ஹில் :

ஸ்டீஃபைன் ஹில் :

உலகத்தலைவர்கள் நிரம்பியிருக்கும் கூட்டத்தில் நீ பேச வேண்டும் என்றால் எதைப் பற்றி பேசுவாய்?

எனக்கு அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தால், உலக மக்களின் ஆரோக்கியம் குறித்து பேசுவேன். எல்லா தரப்பு மக்களுக்கும் போதிய தடுப்பூசி மற்றும் மருந்துகள் கிடைக்க வேண்டும். அவை கிடைக்க வழி வகை செய்யும் விதத்தில் பேசுவேன்.

Image Courtesy

அவ்ரோரி கிச்சினின் :

அவ்ரோரி கிச்சினின் :

இந்த உலகிலேயே மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது? ஏன்?

இந்த உலகிலேயே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு போக்குவரத்து தான். எல்லா நாடுகளுடன் நம்மால் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது.

Image Courtesy

மனுஷி சில்லர் :

மனுஷி சில்லர் :

உயர்ந்த ஊதியம் கொடுக்கத் தகுதியான தொழில் எது... அதற்கான காரணம் என்ன?

நான் என் அம்மாவுக்கு மிகவும் நெருக்கமானவள் என்பதால், உயர்ந்த ஊதியம் கொடுக்கவேண்டிய தகுதியான தொழில் `தாய்மை'தான். பணம், அவளின் வருமானமல்ல. உண்மையான அன்பும் மரியாதையுமே அவளுக்கான சம்பளம். தன் குழந்தைகளுக்காக அனைத்துத் தாய்களும் ஈடில்லா தியாகங்களைச் செய்கிறார்கள். எனவே, உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தொழில் `தாய்மை'

Image Courtesy

மேக்லைன் ஜெருடோ :

மேக்லைன் ஜெருடோ :

சைபர் புல்லிங் தான் உலகிலேயே மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. அதனை எப்படி தீர்ப்பீர்கள்?

சைபர் பில்லிங் உலகில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து அச்சுறுத்தி வருகிறது. அது விரைவில் சரியாகும்.

Image Courtesy

ஆண்ட்ரியா மெஸ்ஸா :

ஆண்ட்ரியா மெஸ்ஸா :

உலக அழகிக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

அது அன்பு. தன்னை அன்பு செய்யவேண்டும். இந்த உலகத்தையே அவள் நேசிக்க வேண்டும். உலக அழகி எல்லாருடனும் சகஜமாக சந்தித்து உரையாடக்கூடியவளாக இருக்க வேண்டும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Unknown facts about Miss world

Unknown facts about Miss world
Story first published: Tuesday, November 21, 2017, 17:20 [IST]