நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொடூர கொலை - அகழ்வாராய்ச்சியில் அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Boldsky

ஒருசில வேலைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவற்றுள் ஒன்று தான் அகழ்வாராய்ச்சி. பொறுமையும், ஆர்வமும் அதிகம் வேண்டிய துறை அகழ்வாராய்ச்சி. சில நேரங்களில் பல வருட உழைப்பு வீணாய் போகலாம், சில சமயம் உங்களை வரலாற்றின் உச்சத்தில் கொண்டும் உட்கார செய்யலாம்.

இது போன்ற அகழ்வாராய்ச்சிகளில் மிக பயங்கரமான வகையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த சிலவன பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#20 குழந்தைகள் கல்லறை!

#20 குழந்தைகள் கல்லறை!

அகழ்வாராய்ச்சியாளுக்கு பயங்கரமான நிகழ்வாக அமைந்தது தெற்கு இஸ்ரேல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட (பண்டைய காலத்து பகுதியான அஷ்கெலான்) பெரும் குவியலான குழந்தைகளின் கல்லறைகள். ஏறத்தாழ நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எலும்பு கூடு குவியல் கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போயினர். இன்றளவும் இந்நிகழ்வு பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல், மர்மமாக நீடித்து வருகிறது.

Image Credit:commons.wikimedia

#19 ஹாபிட் மண்டையோடு!

#19 ஹாபிட் மண்டையோடு!

ஃப்ளோரஸ் எனும் இந்தோனேசிய தீவில் கடந்த 2003ல் ஒரு அச்சுறுத்தும் இடத்தை கண்டுபிடித்தனர். அந்த தோண்டி பார்த்த போது ஹாபிட் எனப்படும் பண்டைய காலத்து எலும்பு கூடுகள் கிடைத்தன. இவர்கள் குள்ள மனிதர்கள் என அறியப்படுகிறார்கள். முதலில் மனித எலும்பு கூடு என கருதிய ஆய்வாளர்களுக்கு, ஹாபிட் எலும்புகள் என அறிந்த பிறகு அதிர்ச்சியடைந்தனர்.

#18 தலையற்ற வைக்கிங்ஸ்!

#18 தலையற்ற வைக்கிங்ஸ்!

ஜூன் 2000ல் அகழ்வாராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் இருக்கும் வேமவுத் எனும் பகுதியில் 54 தலையற்ற எலும்பு கூடுகள் மற்றும் 51 தனி தலை பகுதிமண்டை ஓடுகளை கண்டறிந்தனர். இது ரோமார்கள் காலத்தில் நடந்த கொலை சம்பவமாக இருக்கலாம் என கருதுகிறார்கள்.

#17 ஜிக்சா எலும்புக்கூடுகள்

#17 ஜிக்சா எலும்புக்கூடுகள்

2001ல் ஸ்காட்லாந்தில் நான்கு ப்ரீ-ஹிஸ்டாரிகல் மம்மீக்கள் கண்டுபிடித்தனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால்... இந்த மம்மீக்களில் இருந்து உறுப்புகள், வெவேறு மனிதர்களுடையது என்பதுதான். வெவ்வேறு உடல் பாகங்களை எடுத்து, வேறு ஒரு புதிய மனிதன் போல உருவாக்கியிருந்தனர். இது எப்படி சாத்தியம் என ஆராய்ச்சியாளர்கள் குழம்பு போயினர்.

#16 மோவோ (Moa) பறவை கால்!

#16 மோவோ (Moa) பறவை கால்!

1987ல் நியூசிலாந்து நாட்டில் இருக்கும் ஓவன் எனும் மலை பகுதியில் ஒரு அச்சுறுத்தும் வகையிலான பொருள் கிடைத்தது. அது மிக பெரிய அளவில் இருந்தது. டைனோசரின் காலாக அது இருக்கலாம் என கருதினர். ஆனால், ஆராய்ச்சியாளர்கள், அது சமீபத்தில் அழிந்த பறவையின் கால் என அறிந்தனர். பிறகு பரிசோதனை செய்த போது, 3,300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பெரியவகை ப்ரீ-ஹிஸ்டாரிகல் பறவையான மோவோவுடையது என அறியவந்தது.

Image Credit:flickr

#15 நரமாமிச தாக்குதல்!

#15 நரமாமிச தாக்குதல்!

1994ல் வடமேற்கு ஸ்பெயின் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 12 ஆதி கால மனிதர்களின் எலும்பு கூடுகளை கண்டுபிடித்தனர். இவை 51, 000 ஆண்டுகள் பழமையானவை என அறியப்பட்டது. இந்த எலும்பு கூடுகளில் மூன்று குழந்தைகள், மூன்று பதின் வயது நபர்கள் மற்றும் ஆறு முதிர்ந்தவர்கள் என கணக்கிட்டனர். இவர்கள் அனைவரும் நரமாமிச வேட்டையில் இறந்தவர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

#14 மனித பாதங்கள்!

#14 மனித பாதங்கள்!

பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா வில், ஒரு பேரதிர்ச்சி நிகழ்வை ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்தனர். கிட்டத்தட்ட 16 மனித பாதங்கள் அந்த கடற்கரை ஓரத்தில் கண்டுப்பிடித்தனர். அனைத்து கால்களும் ஷூக்களுடன் இருந்தன. எப்படி ஷூவுடனான பாதங்கள் மட்டும் வெட்டப்பட்டன, அதுவும் ஒரே மாதிரியாக என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

#13 போர் வெற்றி!

#13 போர் வெற்றி!

2015ல் தெற்கு பிரான்ஸ் பகுதியில் நியோலிதிக் காலத்தில் (புதிய கற்காலம்) வாழ்ந்த 7 நபர்களின் எலும்பு கூடுகள் கிடைத்தன. அதில் இரண்டு ஆண்கள், ஒரு பெண், நான்கு குழந்தைகள் மிகவும் பயங்கரமாக கொலை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கை, கால்கள் வெட்டப்பட்டு, ஓர் வெற்றியின் சின்னம் போல அந்த எலும்பு கூடுகள் அமைக்கப்பட்டிருந்தன.

#12 பாம்பு குழி!

#12 பாம்பு குழி!

2009ல் இடாஹோ (Idaho) எனும் அமெரிக்க மாகாணத்தில் ஒரு வீடு கண்டுபிடிக்கப்பட்டது. அதை பரிசோதனை செய்து பார்த்ததில் ஆயிரக்கணக்கான பாம்புகள் இருந்ததை கண்டனர். ஏதோ, பேய் படத்தில் வரும் காட்சி போல இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

#11 சவப்பெட்டியில் சிசு!

#11 சவப்பெட்டியில் சிசு!

லுண்ட் எனும் ஸ்வீடன் பல்கலைகழகம் ஒரு பதப்படுத்தி வைத்திருந்த பிஷப்பின் உடலை சி.டி ஸ்கான் செய்தி பார்த்த போது, அந்த சவபெட்டியில் ஒரு குழந்தையை பிஷப்பின் காலடியில் வைத்திருந்த சம்பவம் பதற்றத்தை உண்டாக்கியது. இது ஏதேனும் சடங்காக இருந்திருக்குமா என சந்தேகித்தனர்.

#10 18 நூற்றாண்டு சுடுகாடு!

#10 18 நூற்றாண்டு சுடுகாடு!

2011ல் ஸ்விம்மிங் பூல் அமைக்க நிலத்தை தோண்டிய போது நியூ ஆர்லியன்ஸ், லூசியானா எனுமிடத்தில் 18 நூற்றாண்டை சேர்ந்த ஒரு சுடுகாடே சிக்கியது. தோண்டும் போதுமட்டும் 13 பிணங்களின் சவப்பெட்டிகள் கிடைத்தனவாம்.

#09 கிளாடியேட்டர்!

#09 கிளாடியேட்டர்!

2005ல் வடக்கு இங்கிலாந்தில் உள்ள யார்க் எனும் இடத்தில ஒரு மர்மமான எலும்பு கூடு கிடைத்து. இது ரோமாபுரி ராஜ்ஜியத்தின் போது வாழ்ந்த நபரின் எலும்பு கூடு என கண்டறிந்தனர். அந்த எலும்பு கூட்டிற்கு உரிய நபர் மிக இளம் வயதில் இறந்துள்ளார், அவர் மிகவும் உயரமாக இருந்துள்ளார். அவர் ஒரு கிளாடியேட்டராக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.

#08 ஐஸ் மேன்!

#08 ஐஸ் மேன்!

1991ல் உலக தலைப்பு செய்தியாக இந்த சம்பவம் இடம்பெற்றது. ஜெர்மனி சேர்ந்த ஹெல்முட் மற்றும் எரிகா சைமன் எனும் இரண்டு சுற்றுலா பயணிகள் 5,300 ஆண்டுகள் பழமையான ஐஸ் மேன் மற்றும் ஒட்ஸி எனும் பதப்படுத்தப்பட்ட உடல்களை கண்டுபிடித்தனர். இதை ஆஸ்திரியா மற்றும் இத்தாலி எல்லைகளில் இருக்கும் ஆல்ப்ஸ் மலையில் கண்டனர்.

#07 டெட் ஸ்கையர்!

#07 டெட் ஸ்கையர்!

2015ல் கனடாவை சேர்ந்த ஸ்கையர் இத்தாலியில் இருக்கும் ஆல்ப்ஸ் மலையில் ஒரு விசித்திரமான பொருளை கண்டார். ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்னர் பனி உருகி, அதில் சிக்கி அங்கேயே மீண்டும் பனியால் இறுகி இறந்த நிலையில் ஒருவர் இருந்தார். அவரது பாஸ்போர்ட் போன்றவற்றை வைத்து அவர் யார், எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது.

#06 இரத்தக்காட்டேரி கல்லறை!

#06 இரத்தக்காட்டேரி கல்லறை!

அகழ்வாராய்ச்சியாளர்கள், போலிஷ் நகரில் ஒரு சுடுகாட்டை கண்டுபிடித்தனர். அங்கே 14 இரத்தக்காட்டேரி கல்லறைகள் இருந்தன என அவர்கள் கருத்து வெளியிட்டனர். இதனால், மக்கள் இரத்தக்காட்டேரி என்பது நிஜமாகவே இருந்ததா என்ற அச்சத்திற்கு உள்ளாகினர்.

#05 தொழுநோய்!

#05 தொழுநோய்!

2009ல் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்பு கூடு ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எலும்பு கூட்டின் மூலம் தொழுநோய் என்பது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. மிகவும் அச்சுறுத்தலான நோயாக கருத்துப்படும் நோய் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருவதை கண்டு ஆய்வாளர்கள் அதிர்ந்தனர்.

#04 விலங்குகள் கல்லறை!

#04 விலங்குகள் கல்லறை!

1971ல் இடாஹோ எனும் இடத்தில் பெருமளவிலான விலங்குகளின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. 200 வித்தியாசமான விலங்குகளின் எலும்பு கூடுகள் அங்கே இருந்தன. இவர் எரிமலை வெடிப்புக்கு கீழ இருந்தது. இவை 12 மில்லியன் ஆண்டுகளுக்கும் பழமையானது என அறிய முடிந்தது. இந்த இடம் இப்போது Ashfall Fossil Beds State Historic Park என்ற பெயரில் இயங்கி வருகிறது.

#03 சூனியக்காரி சிறை!

#03 சூனியக்காரி சிறை!

சில வருடங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் இருக்கும் செயின்ட் மேரிஸ் சாப்பல் சர்ச்சில் ஒரு பெண்கள் வணங்கும் இடம் இருந்தது. அதை சீர்படுத்தி புதிதாகக வேலைகள் துவக்கிய போது, அங்கே சூனியக்காரிகளை அடைத்து வைக்க ஓர் பழம்பெரும் சிறை இருந்ததை கண்டு பிடித்தனர். இரும்பு வளையங்கள், சங்கிலிகள் என அது மிகவும் கோரமான இடமாக இருந்தது.

#02 மேன் ஆப் ஸ்லிகோ!

#02 மேன் ஆப் ஸ்லிகோ!

ஸ்லிகோ, அயர்லாந்தில் 215 வருடங்கள் பழமையான மரம் ஒன்று இருந்தது. இது ஒரு சூறாவளி காற்றால் விழுந்தது. அந்த மரத்தின் வேருக்கு கீழே ஓர் இளம் ஆணின் எலும்பு கூடு இருந்தது. அந்த ஆணை மேன் ஆப் ஸ்லிகோ என அழைக்கிறார்கள். அந்த ஆண் 1030 - 1200 கி.பியில் வாழ்ந்திருக்கலாம் என அறியப்படுகிறது. 17- 20 வயதிலேயே அந்த ஆண் இறந்திருக்க வேண்டும் என கருதுகிறார்கள். அதுவும், மிக கொடூரமாக கொல்லபப்ட்டுள்ளார். கை, கால்கள் எல்லாம் இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்டிருந்தார்.

#01 பேய் கார்!

#01 பேய் கார்!

இங்கிலாந்தின் A3 நெடுஞ்சாலையில் கார் விபத்து ஏற்படுவது மிகவும் இயல்பு. போலீஸ் வருவதும், உடைந்த கார்கள், மற்றும் இறந்த நபர்களை எடுத்து செல்வதும் அன்றாட வேலையாக இருந்தது. ஆனால், திடீரென ஒரு கால் வந்தது. நம்பர் ப்ளேட் இல்லாது ஒரு கார் மிக வேகமாக சென்றதாக யாரோ கூறினார்.

போலீஸ் விசாரணை நடத்தியதில் அப்படி ஒரு காரே பதிவாகவில்லை. ஆனால், வேகமாக கார் சென்றதாக கூறிய இடத்தில இருந்து அறுபது அடி தொலைவில் விபத்துக்குளாகி மண்ணில் புதைந்த கார் ஒன்றும், அதில் இறந்த ஒரு இளம் ஆணின் உடல் ஒன்றும் ஆய்வு செய்த போது கிடைத்தது.

ஏறத்தாழ ஐந்து மாதத்திற்கு முன்னர் நடந்த ஒரு விபத்து பற்றி யாரிடம் இருந்த கால் வந்தது என்றும் கண்டறிய முடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 20: Disturbing Discoveries Ever Made in History!

Top 20: Disturbing Discoveries Ever Made in History!
Subscribe Newsletter