ஒரே நிமிடத்தில் உயிரை பறிக்கக் கூடிய உலகின் கொடிய விஷங்கள் - டாப் 20!

Posted By:
Subscribe to Boldsky

விஷம் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது பாம்புகள் தான். அதில் நாகப்பாம்பு, ராஜ நாகம் போன்றவை நமது மனதில் வந்து உதிக்கும் முதன்மை பெயர்கள். பாம்பு, தேள் போன்றவற்றில் விஷம் இருக்கிறது, இவை கடித்தாலோ, கொத்தினாலோ இறந்துவிடுவோம் என்ற அச்சம் நம் மத்தியில் இருக்கிறது.

ஆனால், உலகில் இவற்றை விட மிகவும் கொடிய, அபாயகரமான விஷத்தன்மை கொண்ட இயற்கையான தாவரங்கள், உயிரினங்கள், இரசாயனங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இவற்றில் பெரும்பாலானை நுகர்ந்து பார்த்தாலோ, சருமத்தில் ஊடுருவினாலோ கூட மரணத்தை விளைவிக்கும் தன்மை கொண்டுள்ளன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#20 சயனைடு!

#20 சயனைடு!

சயனைடு என்பது ஒரு வர்ணமற்ற கேஸ் அல்லது கிறிஸ்டல் ஆகும். இந்த இரண்டில் எந்த வகையில் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சயனைடு மிகவும் கொடிய விஷமாகவே காணப்படுகிறது. இது கசப்பான பாதாமை போன்ற வாசம் கொண்டதாகும். சயனைடு வாசத்தை நீங்கள் நுகர்ந்தால் தலை வலி வரும், குமட்டல் வரும், இதய துடிப்பு குறையும், மூச்சு திணறல் ஏற்படும். இது அனைத்தும் ஓரிரு நிமிடத்தில் ஏற்படும். இது உடலில் இருக்கும் ஆக்சிஜன் செல்களை இழக்க செய்து மரணத்தை உண்டாக்கும்.

pixbay

#19 ஹைட்ரோஃப்ளூரிக் அமிலம்

#19 ஹைட்ரோஃப்ளூரிக் அமிலம்

டெஃப்ளான் உற்பத்தியில் விஷமாக கருதப்படும் ஹைட்ரோஃப்ளூரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இது நீர்மமாக இருக்கும் போது எளிதாக சருமத்தின் வழியாக இரத்த நாளங்களை அடைந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. இது கால்சியமுடன் ரியாக்ட் ஆகி, எலும்புகளையும் அழிக்கலாம். இதில் பயங்கரமான விஷயம் என்னவெனில், இது முதலில் உடலோடு தொடர்பு ஏற்படுத்தும் போது பெரிதாக வலியை ஏற்படுத்தாது. சேதம் ஏற்படுத்த கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளும்.

Image Credit: Dr. Watchorn

#18 ஆர்செனிக்

#18 ஆர்செனிக்

ஆர்செனிக் 19ம் நூற்றாண்டில் ஆயுதங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட விஷம் ஆகும். சில மணி நேரங்களில் இறப்பை ஏற்படுத்திவிடும் அளவிற்கு விஷத்தன்மை கொண்டது ஆர்செனிக். இது உங்கள் உடலில் ஊடுருவிய உடன் வாந்தி, பேதி எல்லாம் உண்டாகும். காலராவுக்கும், இதன் தாகக்திற்கும் மத்தியில் இருக்கும் வேற்றுமையை கண்டறிவது 120 வருடங்களுக்கு முன்னர் மிகவும் கடினமாக இருந்தது.

Image Credit: max pixel

#17 பெல்லடோனா (Belladonna)

#17 பெல்லடோனா (Belladonna)

பெல்லடோனா என்பது மிகவும் விஷத்தன்மை கொண்ட மூலிகை / மலராகும். இதில் இருக்கும் அட்ரோபைன் எனும் பகுதியில் இருந்து தான் விஷத்தன்மை உருவாகிறது. இதன் அனைத்து பாகங்களும் விஷத்தன்மை கொடுள்ளதாகும். முக்கியமாக இதன் வேர் மிகவும் விஷத்தன்மை கொண்டுள்ளது. வெறும் இரண்டு பெல்லடோனா மலரை உட்கொண்டால் போதும் அவர்கள் மரணித்து விடுவார்கள்.

Image Credit: H. Zell

#16 கார்பன் மோனாக்சைடு

#16 கார்பன் மோனாக்சைடு

வாசமற்ற, சுவையற்ற, நிறமற்ற கொஞ்சம் அடர்த்தி குறைவான காற்று இந்த கார்பன் மோனாக்சைடு. இதன் விஷத்தன்மை உயிரை கொள்ளும் வீரியம் கொண்டுள்ளது. இதை கண்டறிவது கொஞ்சம் கடினம். எனவே, தான் இதற்கு சைலன்ட் கில்லர் என்ற பெயரும் இருக்கிறது. இது ஒருவர் உடலில் ஊடுருவிவிட்டால், காய்ச்சல், தலைவலி, வலுவின்மை, உறக்கமின்மை, குமட்டல், தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். கடைகளில் கார்பன் மோனாக்சைடு டிடக்டர்கள் விற்கப்படுகின்றன.

Image Credit: wikimedia commons

#15 பீச் ஆப்பிள் மரம்

#15 பீச் ஆப்பிள் மரம்

மன்சினில் (manchineel) அல்லது கிரீன் ஆப்பிள் மரம் என அழைக்கப்படுகிறது இது. மிகவும் அபாயகரமான தன்மை கொண்ட இந்த மரம் வட அமெரிக்காவில் ப்ளோரிடாவில் அதிகமாக காணப்படுகிறது. இந்த மரத்தில் பச்சை நிறத்தில் பழங்கள் கிடைக்கின்றன. இனிப்பானவையாக இருப்பினும் இதை சாப்பிடக் கூடாது என கூறுகிறார்கள்.

இந்த மரத்தை தொட கூடாது, இதன் அருகே உட்கார கூடாது என பல எச்சரிக்கைகள் கூறப்படுகிறது.

Image Credit: nps.gov

#14 சோடியம் ஃபுளோரோசேட்டேட்

#14 சோடியம் ஃபுளோரோசேட்டேட்

Compound 1080 என்றும் அழைக்கப்படுகிறது சோடியம் ஃபுளோரோசேட்டேட். இது ஒரு பூச்சிக்கொல்லி. இது ஆப்ரிக்கா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் வளரும் சில இயற்கை தாவரங்களிலும் காணப்படுகிறது.. இதன் வாசமற்ற தன்மை மற்றும் சுவையற்ற தன்மையால், இதை கண்டறிவது கடினம். இது மெல்ல, மெல்ல உடலில் கலந்தாலும் ஸ்லோ பாய்சனாக மரணத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.

Image Credit: Greg O'Beirne

#13 டையாக்சின்

#13 டையாக்சின்

வெறும் ஐம்பது மைக்ரோ கிராம் அளவு இருந்தால் போதும், இது மனிதரிடையே மரணத்தை ஏற்படுத்திவிடும். அறிவியலில் இது மூன்றாம் மிகக்கொடிய விஷமாக காணப்படுகிறது. இது சயனைடு விட அறுபது மடங்கு அதிக விஷத்தன்மை கொண்டதாகும்.

Image Credit: wikimedia commons

#12 நரம்பு நச்சு (Neurotoxin or Dimethylmercury)

#12 நரம்பு நச்சு (Neurotoxin or Dimethylmercury)

ரப்பர் கைவுறை அணியாமல் இதை கைகளில் கூட தொட கூடாது. காரேன் எனும் பெண் ஆராய்ச்சியாளர் கையில் இது வெறும் ஒரு துளி தான் விழுந்தது. இதன் அறிகுறிகள் நான்கு மாதங்கள் கழித்து தான் காரேனிடம் வெளிப்பட துவங்கியது. ஆறு மதத்தில் இவர் இறந்து போனார்.

Image Credit:wikipedia

#11 அகோனைட் (Aconite -நச்சு செடிவகை)

#11 அகோனைட் (Aconite -நச்சு செடிவகை)

இதற்கு விஷங்களின் ராணி என்ற பெயரும் இருக்கிறது. இதன் வீரியம் அதிகம். இது நீளம் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது ஒரு தாவரமாகும். ஒருசில தசாப்தங்களுக்கு முன்னர் வரை இதை ஒரு ஆட்கொல்லி ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

Image Credit: max pixel

#10 அமடாக்ஸின் (Amatoxin)

#10 அமடாக்ஸின் (Amatoxin)

சில கொடிய வகை காளானில் இது காணப்படுகிறது. இது கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் பாகங்களின் செல்களில் தாக்கத்தை உண்டாக்க கூடியது. கடைசியாக இது நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை உண்டாக்கும். இதன் விஷத்தன்மையை முறிக்க சில சிகிச்சைகள் இருக்கிறது, ஆனால் அவை முற்றிலும் பயனளிக்கும் என உறுதியளிக்க முடியாது.

Image Credit: maxpixel

#09 ஆந்த்ராக்ஸ்

#09 ஆந்த்ராக்ஸ்

ஆந்த்ராக்ஸ் என்பது உண்மையில் Bacillus anthracis எனப்படும் ஒரு பாக்டீரியா. இது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்க செய்யும். Bacillus anthracis சருமம் வழியாக அல்லது உடலுக்குள் உட்செலுத்துதல், சுவாசித்தல் மூலமாக உடலுக்குள் ஊடுருவினால், சிகிச்சை மேற்கொண்டாலும் கூட 75% மரணம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

Image Credit: Carlix3625

#08 எம்லாக்

#08 எம்லாக்

எம்லாக் என்பது பண்டையக் காலத்து விஷம் ஆகும். இதை கிளாசிக் பாய்சன் என பண்டையக் காலத்து கிரீஸில் கூறியுள்ளனர். இதை சாப்பிட்டால் மரணித்துவிடுவார்கள். இது தலைசுற்றல், தசை பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

Image Credit: flickr

#07 மெர்குரி

#07 மெர்குரி

காய்ச்சல் என டாக்டரை பார்க்க சென்றால் தெர்மாமீட்டரை எடுத்து வாயில் வைப்பார். பெரும்பாலும், இதில் மட்டமே நாம் மெர்குரியை நமது வாழ்நாளில் கண்டிருப்போம். இதை உட்கொண்டாலோ, சுவாசித்தாலோ விஷத்தன்மையாக மாறிவிடும். இது நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி மரணிக்க செய்கிறது. இது சிறுநீரக செயலிழப்பு, மெமரி லாஸ், மூளையை சேதப்படுத்துதல், பார்வை இழத்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உண்டு.

Image Credit:flickr

#06 தற்கொலை மரம் (The Suicide Tree or Cerbera odollam)

#06 தற்கொலை மரம் (The Suicide Tree or Cerbera odollam)

Cerbera odollam என கூறப்படும் இந்த தற்கொலை மரம் விஷத்தன்மை கொண்டது. இது Oleander எனும் குடும்பத்தை சேர்ந்த மரம் வகை ஆகும். இது மடகாஸ்கர் தீவில் அதிகமாக காணப்படுகிறது. இந்த மரத்தின் விஷத்தன்மையால் வருடத்திற்கு 3000 பேர் இறக்கிறார்கள்.

Image Credit: Haplochromis

#05 பஃபர் மீன் (Puffer Fish)

#05 பஃபர் மீன் (Puffer Fish)

சில நாடுகளில் இதை ஃபுகு (Fugu) என்றும் அழைக்கிறார்கள். மீன் என்றால் சாப்பிட தானே, இதில் எப்படி விஷம் என்ற கேள்வி சிலர் மத்தியில் எழலாம். இதன் உடல் பாகங்களில் Tetrodotoxin இருக்கிறது. இந்த மீன் காரணத்தால் மட்டும் வருடத்திற்கு ஜப்பானில் ஐந்து பேர் உயிரிழக்கிறார்கள்.

Image Credit:flickr/commons.wikimedia

#04 சரின் வாயு (Sarin Gas)

#04 சரின் வாயு (Sarin Gas)

வாழ்க்கையில் யாரும் கற்பனையும் செய்து பார்த்திட கூடாத ஒன்று. இது இதயத்தை இறுக்கமாக்கி, மிகவும் இறுக்கி கடைசியில் அந்நபர் இறந்த பிறகு இலகுவாக்கும். 1995ல் இதை தீவிரவாதிகள் இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளும் போது பயன்படுத்தி வந்தனர்.

Image Credit:flickr

#03 தவளை (The Golden Poison Dart Frog)

#03 தவளை (The Golden Poison Dart Frog)

தி கோல்டன் பாய்சன் டார்ட் ஃப்ராக் என இது அழைக்கப்படுகிறது. இது கொஞ்சம் மோசமான தவளை. கட்டைவிரல் சைஸ் தான் இருக்கும். ஆனால், இதன் விஷம் பத்து மனிதர்களை கொல்லும் அளவிற்கு வீரியம் கொண்டது. இது அமேசான் பழங்குடி மக்கள் மூலம் அறியப்படுகிறது. சில நிமிடங்களில் மரணத்தை ஏற்படுத்தும் தன்மை இதற்கு இருக்கிறது. இந்த தவளை மஞ்சள், நீளம், பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

Image Credit:maxpixel

#02 ரிசின் (Ricin)

#02 ரிசின் (Ricin)

கிட்டத்தட்ட ஆந்த்ராக்ஸ் போல தான் இதுவும். ஆனால், அதைவிட விரைவாக மரணத்தை ஏற்படுத்த கூடியது. இதை நுகர்ந்து பார்த்தாலே மரணித்துவிடுவார்கள். மிகவும் அபாயமானது.

Image Credit: Ricinus communis

#01 பர்பிள் பாசம் (Purple Possum)

#01 பர்பிள் பாசம் (Purple Possum)

இது ஒரு வாயு பூமியின் நர்வ் கேஸ் என கூறப்படுகிறது. இதை ஐரோப்பியா 1993'லேயே தடை செய்துவிட்டது. இது முற்றிலும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட விஷமாகும். இதன் அபாயத்தை உணர்ந்து உலகின் பல நாடுகள் இதை தடை செய்து வருகிறது. அமெரிக்க இதன் உற்பத்தியை நிறுத்தி, தயாரித்ததை குடோனில் அடைத்து வைத்துள்ளது.

Image Credit: wikimedia commons

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 20: Deadliest Poisons Things!

Top 20: Deadliest Poisons Things!
Subscribe Newsletter