5 நிமிஷம் டைம் இருந்தா வாங்களேன்... கொஞ்ச நேரம் பயந்துட்டு போகலாம்...

Posted By:
Subscribe to Boldsky

இணையத்தில் ஆங்காங்கே... அவ்வப்போது ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக செயலிகளிலும் கூட நீங்கள் இது போன்ற படங்களை ஒரு கட்டுக்கதை அல்லது பேய் ஸ்டேட்ஸ் உடன் கண்டிருக்க நிறையவே வாய்ப்புகள் உண்டு.

சிலர், இதை ஷேர் செய்யவும், இல்லையேல் உங்கள் வீட்டில் அபசகுனமான, அபாயமான நிகழ்வுகள் நடக்கும் என்று கூறி உங்களுடன் பகிர்ந்து எரிச்சல் அடைய வைத்திருப்பார்கள்.

ஆனால், இந்த படங்களில் பெரும்பாலானவை உலகில் நடந்த சில நிகழ்வுகள், ஹாலோவீன் காஸ்ட்டியூம் படங்களாக, இரவில் ஃபிளாஷ் போட்டு எடுத்த படங்களாக தான் இருக்கின்றன. ஆனால், அதை அப்படியே பேய் படங்களாக மாற்றி பரப்பிவிட்டனர்.

என்ன தான் நம்ம சாதாரணமான படம் என கூறினாலும்.. சில படங்கள் கொஞ்சம் அச்சுறுத்தும் வகையில் தான் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாயு முகமூடி!

வாயு முகமூடி!

ஒரு பெரும் கூட்டத்தினர் அனைவரும் கேஸ் மாஸ்க் முடமூடி அணிந்து எடுத்துக் கொண்ட க்ரூப் போட்டோ இது.

இரண்டாம் உலகப் போரின் போது வெடிக் குண்டு தாக்குதல்கள் அதிகமாக இருந்தது. இதனால் விஷத்தன்மை கொண்டு வாயு சாதாரணமாகவே காற்றில் அதிகமாக கலந்தது. இதில் இருந்து காத்துக் கொள்ள கேஸ் மாஸ்க் அணிந்து மக்கள் கொஞ்ச காலம் வாழ்ந்து வந்தனர்.

Image Credit: Wikipedia Commons

அச்சுறுத்தும் சாண்டா!

அச்சுறுத்தும் சாண்டா!

சாண்டா என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நபர். இவர் கிறிஸ்துமஸ் நாட்களில் சிறுவர்களுக்கு பரிசுகள் கொடுத்து ஆச்சரியம் அளிப்பார். ஆனால், புகைப்படத்தில் பதிவாகியிருக்கும் சாண்டாவோ அச்சுறுத்தும் அவகையில் இருக்கிறார்.

Image Credit: flickr

யாரது?

யாரது?

ஏம்பா யாரா இருந்தாலும் முன்ன வந்து நிக்கலாம்ல, போட்டோ எடுக்கும் போது பொடனிக்கி பின்னாடி நின்னு என்ன பண்ற....

Image Credit: pinterest

ஒருவேளை...

ஒருவேளை...

இது போன்ற படங்களை புகைப்படத்தில் பதிவான பேய் என கூறி அவ்வப்போது சிலர் இணையத்தில் பரப்பிவிடுவார்கள். ஒருவேளை இது வெளிநாட்டு சிண்டு நண்டுகள் ஹாலோவீன் காஸ்டியூம் அணிந்து போட்டோஷாப் செய்து கூட பரப்பி இருக்கலாம் யாரு கண்டா?

Image Credit: pinterest

ரஷ்ய ஆய்வு!

ரஷ்ய ஆய்வு!

இந்த போட்டோவை ரஷ்யா நடத்திய கொடூரமான ஆய்வில் பங்கெடுத்த நபர்களின் கதி என கூறி பல தளங்களில் செய்திகள் அவ்வப்போது பதிவாகி வருகிறது. ஆனால், அந்த செய்தி முற்றிலும் பொய்யானது. இந்த படம் யார், எதற்கு, எப்போது எடுத்தார் என்பதற்கான தெளிவான தகவல் ஏதும் இல்லை.

Image Credit: awesomejelly

சூனியக்காரி!

சூனியக்காரி!

இந்த படத்தில் இருக்கும் பொம்மைய கண்டு பயப்படாத நபரே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமான பேய் பொம்மை இது. இந்த பொம்மையை சூனியக்காரி போன்ற வேடமணிந்து ஒருவர் படம் எடுத்து பரப்பியுள்ளார். இந்த நபரை சூனியக்காரி என கூறி பகிர்ந்து வருகிறார்கள்.

Image Credit: pinterest

ஹாலோவீன் காஸ்டியூம் தான...

ஹாலோவீன் காஸ்டியூம் தான...

ஃப்ரீக்கி வுல்ப், அசாதாரண நரி என்ற பெயரில் அதிகமாக நெட்டில் பரவுகிறது இந்த படம். ஆனால், இது உண்மையில் ஃபேன்சி டிரஸ் ஹாலோவீன் காஸ்டியூம் நிகழ்ச்சியை முடித்து வந்து வீட்டில் அலப்பறை செய்ததாக கூட இருக்கலாம்.

Image Credit: pinterest

அவள் ஜென்னி?!

அவள் ஜென்னி?!

அவள் படத்தில் வரும் ஜென்னியை விட அதிகமாக கழுத்தை திருப்பி தூக்கிக் கொண்டு இருப்பது ஏன் என தெரியவில்லை. இந்த படத்தையும் பேய் படம் என்று கூறி தான் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். இது ஏதோ கண்காணிப்பு கேமராவில் பதிவான படம் போல.

(ஒருவேளை இந்த பொண்ணு... விட்டத்துல இருக்க விளம்பரத்தை படிச்சுட்டு இருக்கோ... )

Image Credit: twitter

விசித்திர எலும்பு கூடு...

விசித்திர எலும்பு கூடு...

ஓநாய் எலும்பு கூடு போல இருக்கும் ஓர் ஸ்கல் மாஸ்க் அணிந்து ஒருவர் வேடிக்கை பார்க்கும் படம் இது. இதை பேயின் எலும்பு கூட என்ற பெயரில் இணையங்களில் அதிகமாக பகிர்ந்துள்ளனர்.

Image Credit: pinterest

கருப்பு அங்கி!

கருப்பு அங்கி!

கருப்பு அங்கி அணிந்து, கூம்பு போன்ற தலை கவசமணிந்து பெரும் கூட்டம் ஊர்வலம் செல்லும் புகைப்படம்.

Image Credit: pinterest

பன்றி

பன்றி

ஒருவேளை பன்றிகளுக்கு போஸ்ட் மார்டம் செய்யும் ஊழியராக இருப்பாரோ... போட்டோவிற்கு பன்றி முக மாஸ்க் அணிந்து போஸ் கொடுத்திருக்கும் நபர்...

Image Credit: pinterest

இரண்டாம் உலகப்போர்!

இரண்டாம் உலகப்போர்!

இரண்டாம் உலகப் போரின் போது விஷ வாயு தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள மனிதர்கள் இப்படி தான் வாழ்ந்துள்ளனர் என நாம் மேலேயே குறிப்பிட்டிருந்தோம். வெளியில் வரும் போது மட்டுமல்ல, இயல்பு வாழ்க்கை முழுவதும் இப்படி தான் இருந்துள்ளனர். ஃபேஷன் ஷோ, நீச்சல் குளம், வாக்கின், குதிரை ஏற்றம் என எந்த செயலாக இருந்தாலும் இந்த மாஸ்க் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்துள்ளது.

Image Credit: pinterest

அயர்ன் லங் (Iron Lung)

அயர்ன் லங் (Iron Lung)

Negative Pressure Ventilator என கூறப்படும் இந்த கருவியை அயர்ன் லங் என்றும் அழைத்துள்ளனர். மூச்சு திணறல். சுவாச கோளாறு இருக்கும் நபர்களை இதில் படுக்க வைத்து செயற்கை சுவாசம் அளித்துள்ளனர்.

Image Credit: Wikipedia Commons.com

சிலந்தி தான்...

சிலந்தி தான்...

பெரும்பாலும் பேய் பங்களாவில் தான் இப்படியான சிலந்திகள் அதிகமாக படங்களில் நாம் பார்த்திருப்போம். சிலந்திகளை ஓர் எதிர்மறை அறிகுறியாக காணும் பழக்கம் பல கலாச்சாரங்களில் இருக்கிறது.

Image Credit: twitter

அடேய்!

அடேய்!

இந்த படத்திற்கு பின்னணியில் ஒரு கதையும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்த படம் எடுக்கப்பட்டதாகவும், அப்போது பின்னாடி தொங்கி கொண்டிருந்த உடல் இல்லை எனவும். படத்தை பிரின்ட் போட்டு பார்த்த போது தான் யாரோ பின்னாடி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது எனவும் ஒரு கட்டுக்கதை பரவலாக இணையங்களில் பரவி வருகிறது.

Image Credit: pinterest

மான்கள்!

மான்கள்!

மான்களின் நடுவே ஒரு சிறுமி நின்றுக் கொண்டிருக்கும் புகைப்படம் இது. ஒருவேளை அவர்களது பண்ணை வீட்டில் வளர்த்த மான்களின் நடுவே அந்த சிறுமி இரவு வேளையில் நிற்கம் போது எடுக்கப்பட்டிருக்கலாம். ஃபிளாஷ் போட்டு படம் எடுத்ததால் பேய் எஃபெக்ட்டில் தெரிகிறது அம்புட்டுதான்.

Image Credit: pinterest

என்ன தெரிகிறது?

என்ன தெரிகிறது?

பார்வையாளர்களை அச்சுறுத்த மியூசியத்தில் வைத்திருக்கும் சிலையோ, பொம்மையோ... இதை எல்லாம் கூட ஷாக்கிங் போட்டோஸ், பேய் என கூறி சிலர் பகிர்வது தான் கொஞ்சம் காண்டாக்கும்.

Image Credit: imgur

அதே... அதே....

அதே... அதே....

ஹாலோவீன் காஸ்ட்டியூமே தான்... இந்த ஒரு நிகழ்வுல எடுக்குற போட்டோஸ் தான் அதிகமா பேய் படம்ன்னு சொல்லி ஏடாகூடமா இண்டர்நெட்டுல ஏத்திவிட்டுறாங்க...

Image Credit: imgur

அம்மா பிராமிஸ் போட்டோஷாப்!

அம்மா பிராமிஸ் போட்டோஷாப்!

பின்னணியில் தொங்கு பாலத்தில் ஆறு பேர் நடந்து செல்கிறார்கள். ஏதோ மலை பகுதி போல. முன்னே இரு பேய்கள் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள். அம்மா பிராமிஸ் போட்டோஷாப் வேலையா தான் இருக்கும். வேற என்னவா இருக்க போகுது.

Image Credit: imgur

நோட் பண்ணுங்க பேயாம்....

நோட் பண்ணுங்க பேயாம்....

ஏதோ தம்பதி ட்ரெக்கிங் போய் மலை மேல இருந்து போட்டோ எடுத்திருக்காங்க. ஒரே வேளை, கணவர் தனியா போட்டோ எடுக்க ஆசைப்பட்டிருப்பார் போல... மனைவி தெரியாம போட்டோ எடுக்கும் போது எட்டி பார்த்திருக்காங்க.. உடனே அம்பு குறி எல்லாம் போட்டு அதோ பேய் எட்டிப்பார்க்குதுன்னு சொல்றது எல்லாம் ஓவரா இல்ல...?

Image Credit: imgur

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 20: Creepy Photos That Captured in History

Top 20 Creepy Photos That Captured in History!