எதையோ எடுக்க போய், எதுவோ கேப்ட்சரான டாப் 10 ஃபெயிலியர் செல்ஃபீக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நாசாவின் கண்டுப்பிடிப்புகளில் ஒன்று தான் இந்த கேமரா. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் பெரிய அளவு கேமராக்களை எடுத்துகொண்டு படம் எடுப்பது கடினம் என்பதற்காக, இந்த சிறிய வடிவ கேமராவை கண்டுபிடித்து நாசா.

பின்னாளில் இது போன்களில் கேமராவாக இணைக்கப்பட்டது. பிறகு முன்னாடியும் இணைக்கப்பட்டு, அதன் மூலம் எடுக்கும் படங்களுக்கு செல்ஃபீ படம் என பெயரும் கொடுக்கப்பட்டது. இப்போதெல்லாம் செல்ஃபீ எடுக்காத நாளே இல்லை என பந்தாவாக கூறிக் கொள்ளும் அளவிற்கு செல்ஃபீக்களை எடுத்து குவிக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செல்ஃபீ #1

செல்ஃபீ #1

இதுக்கு தான் எதையும் பிளான் பண்ணி பண்ணனும்னு சொல்றது. சும்மா அதுங்க கிட்ட போய் மண்டைய கொடுத்து செல்ஃபீ எடுக்குறேன்னு நீட்டுன்னா இப்படி தான் கடிக்கும். இது பரவாயில்ல, பாம்பி, ஷார்க் கிட்ட தலைய கொடுத்து செத்துப் போன கேசுங்க எல்லாம் இருக்கு பாஸு!

செல்ஃபீ #2

செல்ஃபீ #2

மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துட்டேனே மொம்னட். ஏம்மா, ப்ளேக் கிளாஸ்ல நீ நல்ல தெரிவன்னு படம் எடுக்குறியே, அந்தாப்புல இருக்குறவங்களுக்கும் நீ நல்லா தெரிவன்னு தெரிய வேண்டாமா? என்ன பொண்ணுமா நீ...

செல்ஃபீ #3

செல்ஃபீ #3

இது ஒரு புரியாத புதிர்! ஆமாங்க, பெரும்பாலும் பொண்ணுகளும் அப்பறம் இந்த ஐ-போன் யூஸ் பண்ற சிலரும் இந்த பாத்ரூம் செல்ஃபீ-ன்னு எடுக்குறாங்க, கேட்டா மிரர் செல்ஃபீன்னு சொல்வாங்க. அந்த ஐ-போன் யூஸ் பண்ற கேர்ள்ஸ் நீங்க இதுக்கு மட்டும் தான் அத யூஸ் பண்றீங்களா...? அங்கேயாவது கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்ல

செல்ஃபீ #4

செல்ஃபீ #4

செல்ஃபீ எடுக்க வேண்டாம்ன்னு சொல்லல, அதுக்குன்னு, இப்படி வகுப்பறையில பாடத்த கவனிக்காம, ஏதோ லேப்டாப் நோண்டுற மாதிரி எல்லாம் செல்ஃபீ எடுக்க வேண்டாம்னு தான் சொல்றோம். எங்களுக்கும் செல்ஃபீ எடுக்க தெரியும், நாங்களும் ஃபிரன்ட் கேமரா போன் வெச்சிருக்கோம்...

செல்ஃபீ #5

செல்ஃபீ #5

செல்ஃபீ எடுக்கும் போது கொஞ்சம் சிரிச்ச மாதிரி எடுங்க, இல்ல செல்ஃபீ மொக்கையா வந்தா, அத நீங்க மட்டும் வெச்சுக்குங்க, இல்லாங்காட்டி டெலீட் பண்ணிடுங்க. இல்லாட்டி இப்படி தான் ஹேப்பி பர்த்டே கேக்குல கூட ஏடாகூடமா வேணும்னே பிரின்ட் பண்ணி நோக்கடிப்பாங்க அந்த பிரண்ட்ஷிப் குரூப்.

செல்ஃபீ #6

செல்ஃபீ #6

இந்த பொண்ணு செல்ஃபீ போட்டோ எடுக்கும் போது சிரிச்சுச்சா... இல்ல இந்த போட்டோவா வேணும்னே எடுத்து அத பாத்து சிரிச்சுச்சான்னு தெரியல... ஆனா, தெரியக் கூடாதத, எடுத்துட்டு சிரிக்கிதுன்னு மட்டும் நல்ல தெரியுது...

செல்ஃபீ #7

செல்ஃபீ #7

இதுவரைக்கும் ரெஸ்ட்ரூம் கண்ணாடி முன்னாடி நின்னு தான் செல்ஃபீ எடுத்துட்டு இருந்தாங்க.. இப்போ உள்ள போயும் கூட செல்ஃபீ எடுக்க ஆரம்புச்சுட்டாங்க... படம் நல்ல வரும், வர வேண்டியது நல்லா வராதே.... என்னமோ போங்கமா...

செல்ஃபீ #8

செல்ஃபீ #8

அட! இந்த கருமத்த எடுக்க தான் என்ன தூக்கி புடிச்சுட்டு இருக்கியா நான் மானஸ்தன்டா... கீழ இறக்கிவிடுடா அயோக்கிய பயலே...

செல்ஃபீ #9

செல்ஃபீ #9

சும்மா செல்ஃபீ படம் எடுத்தா மட்டும் போதாது... இந்த மாதிரி டீசண்டா, அமர்களமா போட்டோஷாப் பண்ணவும் தெரிஞ்சிருக்கணும்... EC போட்டுருந்தா... இந்நேரம் அந்த போட்டோஷாப் மன்னர் ஓஹோன்னு பெரியாளு ஆயிருப்பாரு. இனிமே PC-யோட சேர்த்து, EC-யும் போடுங்கப்பா.

செல்ஃபீ #10

செல்ஃபீ #10

ஆகமொத்தம் செல்ஃபீ எடுக்குற நீயும் நிம்மதியா இல்ல, நிம்மதியா தூங்குற அந்த மனுஷனையும், தூங்கவிடல... இப்ப பாரு நீ இன்டர்நெட்டுல சிரிச்ச முகமா தெரியிற... எந்த பாவமும் பண்ணாத அந்த ஜீவன் எப்படி உலாவிட்டு இருக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10 Selfies That Went Wrong!

Top 10 Selfies That Went Wrong!
Subscribe Newsletter