For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாப் 10 : உலகின் அசாதாரண புகைப்படங்களின் தொகுப்பு!

|

புகைப்படம் எடுப்பது ஒரு அழகான கலை. இது ஒளியோடு கலைஞர்கள் விளையாடும் ஒரு அற்புதமான விளையாட்டு என்றும் கூறலாம். கொஞ்சம் ஒளி கூடினாலும், குறைந்தாலும் அந்த படத்தின் அழகு சீர்குலைந்துவிடும்.

கிட்டத்தட்ட பெண்கள் தங்களுக்கு இட்டுக்கொள்ளும் மேக்கப் போல தான். ஒளி கனகச்சிதமாக இருந்தால் தான் அழகாக இருக்கும். இல்லையேல் "ப்ப்பபபா...." ரியாக்ஷன் தான்.

புகைப்படம் என்பது வெறும் நினைவுகளை சேமிக்கும் கருவியாக மட்டும் காண இயலாது. அது தன்னுள் பல அதிசயங்கல்ம், மர்மங்கள், இரகசியங்கள், உணர்வுகள் என எதை வேண்டுமானாலும் உள்ளடக்கி வைத்திருக்கும் ஓர் ஆதாரமாகவும் இருக்கலாம்.

சில புகைப்பட கருவில் பதிவான சில அசாதாரண படங்களாக கருதப்படும் படங்களின் தொகுப்பு தான் இது...

All Image Source: Wonderlist

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சித்திரவதைக்குள்ளான பெண்!

சித்திரவதைக்குள்ளான பெண்!

சாண்டியாகோ, சிலியில், ஒரு நாடக குழு நடத்திய தெரு நாடகம் இது. இதில் ஒரு பெண் சித்திரவதைக்குள்ளவதை பற்றி இவர்கள் நாடகம் நிகழ்த்தினர்.

இது சிலியின் அதிபர் ஆகஸ்டோ பினோசே பற்றிய டாக்குமென்ட்ரி வெளியீட்டின் போது எதிர்ப்பு கூறி நடத்தப்பட்ட நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் வேடத்தில் போராளி!

பெண் வேடத்தில் போராளி!

ஆப்கானில் பாதுகாப்பு படை வீரர்கள் தலிபான் அமைப்பை சேர்ந்த போராளியை ஆப்கான் பெண்கள் உடை அணிந்து மாறுவேடத்தில் இருந்த போது கைது செய்தனர். இதை ஊடகங்கள் படம்பிடித்து வெளியிட்டன.

இஸ்ரேல் பெண் இராணுவ வீரர்!

இஸ்ரேல் பெண் இராணுவ வீரர்!

இஸ்ரேலின் டேல் அவிவ் எனும் கடற்கரையில் இஸ்ரேல் இராணுவ படையை சேர்ந்த மூன்று பெண் வீராங்கனையினர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது எடுத்த படம். இதில் இருவர் இராணுவ உடையிலும், ஒருவர் மற்றும் பிகினியில் இருக்கும் படம் சர்ச்சைகளுக்கு உள்ளானது.

குள்ளமான மனிதர்!

குள்ளமான மனிதர்!

சந்திர பகதூர் டாங்கி எனும் இவர் உலகின் குள்ளமான மனிதராக கருதப்படுபவர். இவரது உயரம் 22 அங்குலம் மட்டுமே. அதாவது இரண்டடிக்கும் குறைவு. இவர் நேபாளத்தை சேர்ந்தவர். நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் அமைத்திருக்கும் ரீம்கொலி கிராமத்தில் இவர் வாழ்ந்து வந்தார். இது காத்மண்டுவில் இருந்து தென்மேற்கில் 540 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

மிருதன்!

மிருதன்!

ஸ்பெயினின் மாட்ரிட் எனும் இடத்தில் ஒரு வினோத ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் ஓட்டப்பந்தைய வீரர்கள் ஓடும் பாதையில் 5000க்கும் மேற்ப்பட்ட மிருதன் (Zombie) போன்ற வேடமிட்ட நபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களின் தடையை தாண்டி வீரர்கள் ஓடி வெல்ல வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது.

ஹோம்லஸ்!

ஹோம்லஸ்!

தங்குவதற்கு வீடு இல்லாமல் நடைப்பாதையில் வாழும் மக்கள் நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறார்கள் என யாரும் கருதிட வேண்டாம். அமெரிக்கா, யூ.கே. என உலகின் வளர்ந்த நாடுகளிலும் கூட இப்படியான மக்கள் ஏழ்மையில் இருக்க தான் செய்கிறார்கள். அப்படி ஒரு ஆண் மரத்தடியில் அசந்து உறங்கி கொண்டிருக்கும் போது அவரை எழுப்பு உதவ சென்று சிறு பெண் குழந்தை.

ரொமான்ஸ்!

ரொமான்ஸ்!

ஜஸ்மின் லோபஸ் மற்றும் மிகுவல் ஒசோரியோ ஜோடி. இவர்கள் கான்கனில் நடந்த உலகின் முதல் வீல்சேர் நடன போட்டியில் கலந்து கொண்டு அசத்தியவர்கள். கலைக்கும், திறமைக்கும் உடல் உறுப்பு குறைபாடு பெரிய தடை இல்லை என்பதை நிரூபித்து காட்டிய திறமைசாலிகள்.

தீயணைப்பு விமானங்கள்!

தீயணைப்பு விமானங்கள்!

ஸ்பெயின் அளிகன்டே அருகில் இருக்கும் சீயர் மெரிலோலா எனும் காட்டு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. அந்த தீயை பரவவிடாமல் அணைக்க, அருகில் இருந்த தடாகம் பகுதியில் இருந்து நீரை ஏற்றி செல்ல தயாராகும் தீயணைப்பு விமானங்கள்.

கழுதை பயணம்!

கழுதை பயணம்!

வடக்கு இஸ்ரேல் பகுதியில் இருக்கும் கலிலேயா என்ற இடத்தின் அருகே இருக்கும் ஹோஷாயா எனும் கிரமாத்தில் அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி எல்லா (Ella) என்பவர் WiFi பொருத்தப்பட்ட கழுதையின் மீது அமர்ந்து iPad உபயோகித்துக் கொண்டிருக்கும் காட்சி. எல்லாவை அவரது சகோதரர் ஆரான் அழைத்து செல்வதை இப்படத்தில் காண முடியும்.

பிளாஸ்டிக் மழை!

பிளாஸ்டிக் மழை!

2012 லண்டன் ஃபேஷன் வீக்கில் இலையுதிர் மற்றும் குளிர் காலத்திற்கான ஃபேஷன் நிகழ்ச்சி நடந்தது. கேட்வாக் மாடல்கள் நடந்து வரும் போது அந்த காலத்திற்கு ஏற்ப பனிபொழியும் நிகழ்வை உள்ளரங்கில் உணர வைக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பிளாஸ்டிக் பனிபொழிவு மழை ஏற்படுத்தி அசத்தினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10: Astonishing and Unusual Photographs!

Top 10: Astonishing and Unusual Photographs!
Story first published: Wednesday, November 8, 2017, 10:35 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more