இந்த 7 விஷயம் உங்களுக்கு ஜப்பான்ல மட்டும் தான் கிடைக்கும்!

Posted By:
Subscribe to Boldsky

ஜப்பானியர்கள் கடின உழைப்பிற்கு பெயர் போனவர்கள், மிகவும் புத்திசாலிகள். நிலத்தில் விவசாயம் பார்க்க முடியாத சூழல் உண்டான போது கப்பலில் விவசாயம் செய்து காட்டி அசத்தியவர்கள்.

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, சில அளவுக்கு மீறிய சிந்தனைகளால் ஜப்பானில் சில கண்டுபிடிப்புகள் வேடிக்கையாகவும் உருவாகியுள்ளன.

சுப்பர் கழிவறை, செயற்கை காதலன், நின்றுக் கொண்டே உறங்க ஒரு கருவி, உள்ளாடை அளிக்கும் வெண்டிங் மெஷின் என சில கண்டுபிடிப்புகள், ஏம்பா இப்படி எல்லாமா யோசிப்பீங்க என விழிகளுக்கு மேல் ஆச்சரியக்குறியை உண்டாக்குகிறது...

சரி! வாங்க... அப்படி என்னென்ன இவங்க கண்டுப்பிடிச்சிருககாங்கன்னு பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூப்பர் கழிவறை!

சூப்பர் கழிவறை!

Japan Super Toilet தான் இதன் பெயர். அப்படி என்ன இதுல சூப்பர்-ன்னு கேட்கிறீங்களா? இந்த டாய்லெட் அந்தரங்க பகுதிகளை கழுவியும் விடுமாம். அது தான் இதன் சிறப்பு!

Image Credit: Google

குடை!

குடை!

இது ஜப்பானியர்கள் கண்டுபிடித்த சூப்பர் குடை.ஒருவேளை காற்று வலிமையாக அடித்தால், சாதாரண குடைகள் பயனற்று போகும். இந்த சூப்பர் குடைகள் மேலிருந்து மட்டுமின்றி, எந்த திசையில் இருந்து மழை அடித்தாலும், உடல் முழுதும் நனைந்துவிடாமல் இருக்க உதவும்.

Image Credit: Google

நின்றுக்கொண்டே உறங்க!

நின்றுக்கொண்டே உறங்க!

இன்று உலகில் பலர் ஓய்வெடுக்க கூட நேரமின்றி வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையேயான பயணத்தில் பம்பரமாய் சுழன்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கடின உழைப்பாளிகள் பயணத்தின் போது நின்றுக் கொண்டே உறங்க இந்த கருவி உதவும்.

Image Credit: Google

வெண்டிங் இயந்திரம்!

வெண்டிங் இயந்திரம்!

நாம் அறிந்த வெண்டிங் இயந்திரங்கள் சிப்ஸ் பாக்கெட், குளிர்பான டின்கள் மட்டும் தான் கொடுக்கும். ஆனால், ஜப்பானில் உள்ள இந்த வெண்டிங் மெஷின், முட்டை, பான் கேக், குடை, உள்ளாடை என எதை வேண்டுமானாலும் கொடுக்கும்.

Image Credit: Google

உலகின் சிறிய எஸ்குலேடர்!

உலகின் சிறிய எஸ்குலேடர்!

எஸ்குலேடர் என்பது நகரும் படிகள் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், உலகில் இவ்வளவு சிறிய நகரும் படிகள் நீங்கள் வேறு எங்கேயும் காண முடியாது. ஜப்பானின் சில மால்களில் நீங்கள் இந்த ஐந்து படிகள் மட்டுமே கொண்ட எஸ்குலேடர்களை காணலாம்.

Image Credit: Google

காதலி மடி!

காதலி மடி!

காதலி இல்லாத, திருமணம் ஆகாத சிங்கிள் சிங்கங்களுக்கு என கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சுப்பர் தலையணை இது. ஒரு பெண் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் நிலையில் இந்த தலையணை இருக்கும், நீங்கள் காதலியின் மடியில் படுத்து உறங்குவது போல சுகமாக உணரலாம்.

Image Credit: Google

பெண்களுக்கும் உண்டு...

பெண்களுக்கும் உண்டு...

ஏன் சிங்கிள் என்றால் ஆண்கள் மட்டும் தானா, பெண்கள் இருக்க கூடாதா? காதலன் இல்லாத, திருமணம் ஆகாத சிங்கிள் பெண்களுக்கு இந்த செயற்கை பாய் பிரெண்ட் குஷன்.

Image Credit: Google

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These 7 Things You Can Get in Japan only!

These 7 Things You Can Get in Japan only!
Subscribe Newsletter