நெல்சன் மண்டேலா பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

குத்துச்சண்டை வீரராக அறியப் பெற்ற நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆவார். மேலும் தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் இவர். உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான தலைவர்களுள் முக்கியமானவர்.

Surprising Facts About Nelson Mandela

இவரைப் பற்றி உலக மக்களுக்குத் தெரியாத பல உண்மைகள் உள்ளன. இக்கட்டுரையில் நெல்சன் மண்டேலா அவர்களைப் பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

இவரது உண்மையான பெயர் நெல்சன் மண்டேலா இல்லை. இவரது இயற்பெயர் ரோபிசலா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன், இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரால் சூட்டப்பட்டதாம்.

உண்மை #2

உண்மை #2

மண்டேலா சிறையில் சுமார் 27 ஆண்டுகள் இருந்தார். உலக வரலாற்றிலேயே சிறையில் நீண்ட காலம் கழித்த தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் இவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு வந்தார்.

உண்மை #3

உண்மை #3

1994 ஆம் ஆண்டு மண்டேலா தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியானதன் முக்கிய நோக்கம், தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் மற்றும் கருப்பினர்கள் இடையே ஒரு நல்ல உறவை உண்டாக்கி, நிற வேறுபாட்டை நீக்கி, உலகில் தென்னாப்பிரிக்காவை சிறப்பான ஓர் நாடாக வெளிக்காட்டத் தான்.

உண்மை #4

உண்மை #4

1990 ஆம் ஆண்டு இந்தியாவின் பாரத ரத்னா விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. உலகிலேயே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்றால், அது நெல்சன் மண்டேலாவுக்கு மட்டுமே.

உண்மை #5

உண்மை #5

1993 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலாவுக்கு, அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதும் வழங்கப்பட்டது.

உண்மை #6

உண்மை #6

தென்னாப்பிரிக்கத் தலைவரான நெல்சன் மண்டேலா பிறந்த நாளான ஜூலை 18 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்தது.

உண்மை #7

உண்மை #7

நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த நெல்சன் மண்டேலா, உலக நாடுகளால் பல விருதுகளைக் கொடுத்து கௌரவித்தது. இதுவரை நெல்சன் மண்டேலா 250-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #8

உண்மை #8

மண்டேலாவின் கைவிரல் ரேகை ஆப்பிரிக்க கண்டத்தைப் போன்ற வடிவத்தைக் கொண்டது என்பது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Facts About Nelson Mandela

These are some of the most interesting and surprising facts about Nelson Mandela that you need to know. Check them out.
Story first published: Thursday, March 30, 2017, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter