காதலனை ஏமாற்ற விபரீத விளையாட்டில் குதித்த காதலி - வீடியோ!

Posted By: Staff
Subscribe to Boldsky

யூடியூப்பில் இல்லாதது ஏதும் இல்லை. நீங்கள் அங்கே கற்கவும் முடியும், கேளிக்கைகள் காணவும் முடியும். அதே போல வியப்பை அளிக்கும் வீடியோக்களும், ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அறிவியல் வீடியோக்களுல்ம் அங்கே இருக்கின்றன.

இதற்கு இணையாக ஏமாற்றுபவர்களின் வீடியோக்களும் யூடியூப்பில் அதிகம், சிலர் முகப்பு படம் ஒன்று வைத்து, உள்ளே வேறு வீடியோவை ஓட்டுவர், சிலர் பிரான்க் வீடியோக்கள் செய்து கலாய்ப்பர்.

இதோ! இங்கே டி.கே.4.எல் என்ற பெயரில் வீடியோக்கள் பதிவு செய்யும் பெண் ஒருவர் தன் சேனலை பரபரப்பாக்க தான் கொலை செய்யப்பட்டது போல நடித்து காதலனை ஏமாற்றி அதை பதிவு செய்துள்ளார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதலனின் ரியாக்ஷன்...

காதலனின் ரியாக்ஷன்...

DK4L என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள் இந்த ஜோடி. இந்த பெண் தனது காதலனை ஏமாற்ற தான் குளியலறையில் கொலை செய்யப்பட்டது போல பிரான்க் வீடியோ பதிவு செய்ய முடிவு செய்தார்.

இதே வேலை தான்..

இதே வேலை தான்..

இந்த காதல் ஜோடின் பிழைப்பே இது தான். ஒருவரை மற்றொருவர் ஏமாற்றி அதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து அவர்களது சேனலில் போட்டு பார்வையாளர்களை குஷிப்படுத்துவர்.

கொலை!

கொலை!

இம்முறை ஒரு படி மேலே சென்று, தன்னை யாரோ கொலை செய்து சென்றது போல செட்டப்பை போட்டார் அந்த பெண்மணி. இதற்காக போலி சதை, போலி இரத்தம் போன்றவற்றை ஏற்பாடு செய்தார்.

காதலன் வருகை...

காதலன் வருகை...

வெளியே சென்ற காதலன் வீடு திரும்பும் போது ஆங்காங்கே இரத்தம் சிந்தி இருந்தது. குளியலறையில் காதலி குத்தி கொலை செய்யப்பட்டது போல படுத்து கிடந்தார். அதை கண்ட அந்த காதலன் அதிர்ச்சி அடைந்து அழ துவங்கினார்.

பேபி!

பேபி!

பேபி, பேபி என கூறி அழுத அந்த காதலன், உடனே வெளியே சென்று போன் எடுத்து வந்தார். ஆனால், அவர் அவசர எண்ணுக்கோ, போலீசுக்கோ கால் செய்யவே இல்லை. காதலியின் உடலை உலுக்கியப்படியே அழுது கொண்டிருந்தார்.

ஆட்டத்தை முடித்த காதலி!

ஒரு கட்டத்தில் அவரது ரியாக்ஷன் கண்டு முடித்து பிறகு, சிரித்து ஆட்டத்தை முடித்து கொண்டார் அந்த காதலி. பன்னு வாங்கிய அந்த காதலன், இந்த பதிவில் நான் ஏதும் பேச மாட்டேன் என முகத்தை திருப்பி கொள்ள. மீண்டும் அடுத்த வீடியோவில் பார்க்கலாம் என காதலி நடையைகட்டிவிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vlogger Prank: Girlfriend Pretends She's Been Murdered!

Vlogger Prank: Girlfriend Pretends She's Been Murdered