Latest Updates
-
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
கட்டவிரல் வெச்சு, உங்க கட்டம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா? வாங்க பார்க்கலாம்!
கட்டவிரல் வெச்சு, உங்க கட்டம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா? வாங்க பார்க்கலாம்!

தம்ப்ஸ் அப் என்பது வெற்றி மற்றும் உத்வேகத்தை குறிக்கும் குறி. இதை வைத்து ஒருவரின் குணாதிசயங்களையும், அவர் எந்தெந்த சூழல்களை எப்படி கையாள்வார் என்பதையும் அறிந்துக் கொள்ள முடியுமாம்.
எப்படி கைரேகை வைத்து ஒருவரது மனோபாவம் எப்படி இருக்கும்.., அவர் எந்தெந்த காரியத்தில் எப்படி முடிவெடுப்பார் என அறிய முடிகிறதோ, அதே போல தான் இதுவும் என்கிறார்கள்.
ஆனால், அறிவியல் ரீதியாக காணும் போது இது வெறும் மனித உடல் அமைப்பு மட்டுமே என்று காணப்படுகிறது.
ஆனால், ஜோதிடத்தில் ஒருவரது கட்டை விரலின் இயல்பு அமைப்பு மற்றும் கைரேகை அடுக்கு பகுதிகள் கொண்டு ஒருவரது பொது குணாதிசயம் குறித்தும், அவரது செயற்பாடுகள் எப்படி இருக்கும் என்றும் கூறலாம் என்கிறார்கள்.
சரி! அப்படி என்ன தான் இவர்கள் சொல்கிறார்கள் என தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

நேராக
வெகு சிலருக்கு மட்டுமே அவர்களது கட்டை விரல் எந்தவிதமான வளைவுகளும் இன்றி நேராக இருக்கும். அதாவது, அவர்களது எலும்பு வளையாமல் இருக்கலாம். அல்லது அவர்களால் கட்டைவிரலை பின்னோக்கி மடக்க முடியாமல் இருக்கலாம்.

குணாதிசயங்கள்:
இப்படியான கட்டைவிரல் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் மிகவும் சீரியஸான நபர்களாக இருப்பார்களாம். இவர்களால் மற்றவர்கள் சந்தோஷம் சீர்குலையும் என்றும் கூறப்படுகிறது.

கோணலான
இந்த படத்தில் இருப்பது போல, பலரது கட்டைவிரல் இப்படி கோணலாக தான் இருக்கும். அதாவது கட்டைவிரல் சாதாரணமாகவே பின்னோக்கி வளைந்தது போலவே, சற்றே கோணலான நிலையில் இருக்கும். சிலருக்கு அதிகமாக வளைந்து காணப்படலாம், சிலருக்கு குறைவாக வளைந்து காணப்படலாம்.

குணாதிசயங்கள்:
இப்படி கோணலான கட்டைவிரல் வடிவம் கொண்டிருக்கும் நபர்கள் எதையும் வெளிப்படையாக செய்யும் நபர்களாக இருப்பார்கள். அது காதலாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி தங்கள் உணர்வை மறைத்து வைத்துக் கொள்ள மாட்டார்கள். தங்கள் கருத்துகளை முகத்திற்கு முன்னே கூறிவிடுவார்கள்.

மிகவும் வளைந்து
ஆள்காட்டி விரலை நீட்டினால் எப்படி நேராக இருக்கிறதோ, அந்த அளவிற்கு கட்டைவிரல் பின்னாடி நன்கு வளைந்து நேராக இருப்பது போல இருக்கும் வடிவம் இது. இப்படியான கட்டைவிரல் வடிவம் கொண்டிருக்கும் நபர்கள் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்களாம். இதை ஆங்கிலத்தில் Tender Thumb என்கிறார்கள். இவர்கள் எதையும் கட்சிதமாக செய்ய நினைப்பார்கள்.

குணாதிசயங்கள்:
இவர்கள் மிகவும் பொறுமையாக, அமைதியாக இருப்பார்கள். நல்ல கருத்துக்கள் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் கலை அல்லது கிரியேட்டிவ் துறையில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

முதல் பாதி பெரிதாக!
சிலரது கட்டை விரலில் முதல் பாதி விரல் பெரிதாகவும், இரண்டாது பாதி விரல் சிறிதாகவும் இருக்கும். அதாவது, நமது விரல்கள் எப்போதும் மூன்று பகுதிகளாக இருக்கும் (இரண்டு ரேகைகள் கொண்டு மூன்று பிரிவாக விரல் இருப்பது போன்ற இருக்கும்). இதில் முதலாவது பகுதி பெரிதாகவும், இரண்டாவது பகுதி சிறிதாகவும் இருப்பவர்களை இந்த வகை குறிக்கிறது.

குணாதிசயங்கள்:
இவர்கள் யாருடைய அறிவுரைக்கும் காத்திருக்க மாட்டார்கள். தாங்களே தங்களை உத்வேகப் படுத்திக் கொள்வார்கள். எந்த செயலிலும் சிறந்து செயற்பட முயல்வார்கள்.

இரண்டாம் பாதி பெரிதாக!
சக்தி இருந்தால் தான் செய்ய முடியும் என்பதை தாண்டி. இவர்கள் எதிலும் லாஜிக் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் என்ன கூறினாலும் காதுக் கொடுத்துக் கேட்பார்கள். ஆனால், அனைத்தையும் கேட்டறிந்த பிறகு, இதில் என்னென்ன லாஜிக் இருக்கிறது, இல்லை என விவரித்து ஒரு முடிவுக்கு வருவார்கள்.

குணாதிசயங்கள்:
தங்களைத் தானே ஒரு எல்லை வகுத்து அதற்குள் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். இது காதலாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி. இவர்கள் அனைத்திலும் இப்படி தான். இதனால், பல பொன்னான வாய்ப்புகளை இழந்துவிடுவார்கள்.



Click it and Unblock the Notifications
