Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
இங்கிலாந்து அரச குடும்பத்தின் 58 வருட பாரம்பரியம் முடிவுக்கு வந்தது!
தனக்கு மூன்றாவது குழந்தை பிறக்கப்போகிறது என்று அறிவித்ததன் மூலமாக அரச குடும்பத்தின் 58 வருட பாரம்பரியம் முடிவு வந்துள்ளது
இங்கிலாந்து அரச குடும்பத்து தம்பதிகளான கேட் மிடில்டன் மற்றும் வில்லியம் அரச குடும்பத்தின் 58 வருட பாரம்பரியத்தை முறியடித்திருக்கிறார்கள். ஏற்கனவே ஜார்ஜ் மற்றும் சார்லெட் என்று இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக கர்ப்பமானார் கேட். அரச குடும்பத்தில் இதற்கு முன்னதாக 58 வருடங்களுக்கு முன்னர் தான் மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறதாம்.

ராணி எலிசபத் :
ராணி எலிசபத்துக்கு நான்கு குழந்தைகள், இளவரசர் சார்லஸ், இளவரசி ஆனி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட். 1959 ஆம் ஆண்டு இளவரசர் ஆண்ட்ரூ வயிற்றில் இருந்த போது தான் மூன்றாவது குழந்தை கர்ப்பமாக இருப்பதாக ராணி எலிசபத் அறிவித்தார்.
சுமார் 58 வருடங்களுக்கு முன்னர். அதன் பின்னர் 1964 ஆம் ஆண்டு நான்காவதாக இளவரசர் எட்வர்ட் பிறந்தார்.

இளவரசர்கள் :
இளவரசர் சார்லஸுக்கு வில்லியம் மற்றும் ஹேரி என இரண்டு குழந்தைகள், இளவரசி ஆனிக்கு பீட்டர் ப்லிப்ஸ் மற்றும் ஜாரா டிண்டால் என்று இரண்டு குழந்தைகள்.

பேரக்குழந்தைகள் :
இளவரசர் ஆண்ட்ரூவுக்கு பீட்ரைஸ் மற்றும் யூஜினி என இரண்டு மகள்கள், இளவரசர் எட்வேர்டுக்கு ஜேம்ஸ் என்ற மகனும் லூசி என்ற மகளும் இருக்கிறார்கள்.

வில்லியம்-கேட் :
இவர்களைப் போலவே இளவரசர் சார்லஸின் மகனான வில்லியம் கேட் மிடில்டன் தம்பதி இதே பாணியை பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் இவர்களுக்குப் பிறந்த இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லெட் ஆகியோரை வரவேற்றார்கள்.

அரச குடும்பம் :
தான் மூன்றாவது குழந்தை கர்ப்பமாக இருக்கிறேன் என்று கேட் அறிவிப்பு வெளியிட்டதன் மூலமாக அரச குடும்பத்தின் 58 வருட பாரம்பரியம் முடிவுக்கு வந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications