Latest Updates
-
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்!
பதவி ஆசைக்காக இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொடூர தலைவர்கள்!
இரக்கமா? அது எத்தனை கிலோ என கேள்வி கேட்ட உலக மகா மனசாட்சி அற்ற அரசியல்வாதிகள்!
இலட்சக்கணக்கான மக்களை ஈவிரக்கமற்ற முறையில் தனது பதிவி ஆசைக்காக கொன்று குவித்து கொடூர மனம் படைத்த உலக தலைவர்கள் பலர் உள்ளனர்.
ஆதி காலம் முதல் அதிநவீன காலம் வரை என வேல்கம்பு, வில் அம்பு கொண்டு சண்டையிட்ட நாள் முதல் பீரங்கி முழங்க வெடித்து சிதறடித்த நாள் வரை இவர்கள் பல முகம் கொண்டிருந்தாலும் மனம் ஒன்றாக தான் கொண்டிருந்துள்ளனர்...

அடால்ப் ஹிட்லர்!
வாழ்ந்த காலம்: 1933-1945.
ஹிட்லர் பற்றி கூறாமல் இந்த கட்டுரைக்குள் எப்படி போக முடியும். உலகை ஆளவேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காக ஆயிரக்கணக்கான மக்களை தயவுதாட்சணம் பாராமல் கொன்று குவித்தவர்.

செங்கிஸ்கான்!
வாழ்ந்த காலம்: 1206-1227.
செங்கிஸ்கான் தனது இளம் பருவத்தில் அடிமையாக சில ஆண்டுகள் கழித்ததாகவும். பிறகு மங்கோலிய பழங்குடியினர் இணைத்து கொண்டு மத்திய ஆசியா மற்றும் சீன பகுதிகளை வென்றதாகவும் வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.
இவரது கதாபாத்திரம் மிக கொடூரமானதாக தான் உருவகுக்கப்பட்டுள்ளது. இவர் தான் வெல்லும் இடங்களில் வசிக்கும் மக்களை கொத்து கொத்தாக கொன்றுக்குவிக்கும் பழக்கம் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

திமுர்!
வாழ்ந்த காலம்: 1370-1405.
மேற்காசிய பகுதியில் பெரும் இராணுவப்படை கொண்டு தலைமை தாங்கி சென்றவர் திமுர். இன்றைய ஈரான், சிரியா ஆப்கான் போன்ற பகுதிகளை ஆண்டவர். இவர் மனிதர்களை உயிருடன் வைத்து புதைத்து கட்டிடங்கள் கட்டியதாகவும், கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்தவர், 70 ஆயிரம் பேரின் தலைகளை கொய்து தூபிகள் கட்டினார் என்றும் கூறப்படுகிறது.

குயின் மேரி!
வாழ்ந்த காலம்: 1553-1558
எட்டாம் ஹென்றியின் ஒரே பிள்ளை. முதலாம் மேரியான இவர் இங்கிலாந்தின் இராணியாக 1553ல் முடி சூடிக் கொண்டார். பதவிக்கு வந்த உடனே கத்தோலிஸம் மீண்டும் கொண்டு வந்தார்.
இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இரண்டாம் பிலிப்பை திருமணம் செய்து கொண்டார். இதை எதிர்த்து சீர்திருத்தம் கொண்டு வர முயன்ற நூற்றுக்கணக்கானவர்களை தீமூட்டி கொன்றார். இதற்கு பிறகே இவருக்கு Bloody Mary என்ற புனைப்பெயர் வந்தது.

விளாடிமிர் லெனின்!
வாழ்ந்த காலம்: 1917-1924.
அக்டோபர் புரட்சியை தலைமை தாங்கியவர் லெனின். இந்த புரட்சி, போர் மற்றும் பஞ்சத்தின் போது தனது நாட்டு மக்கள் அவமதிப்பு கண்டு தனது எதிரிகள் அனைவரையும் இரக்கமற்று நசுக்கினார்.

மாவோ சேதுங்!
வாழ்ந்த காலம்: 1949-1976.
கமியூனிஸ்ட் தலைவர் கீழ், தொழிற்சாலை, விவசாயம் சீன அரசு கட்டுப்பாட்டுக்கு சென்றது. இதை எதிர்க்கும் நபர்களை வேகமாக ஒடுக்கப்பட்டனர். மாவோ ஆதரவாளர்கள் இவர் சீனாவை மார்டனாக மாற்றினார் என கூறினார்.
ஆனால், மற்றவர்கள் இவரால் 40 மில்லியன் மக்கள் பசி, பட்டினி, கடுமையான வேலையால் இறந்தனர், கொல்லப்பட்டனர் என கூறினர்.

இடி அமீன்!
வாழ்ந்த காலம்: 1971-1979 .
உகாண்டாவின் அதிபராக இடி அமீன் தன்னை தானே அறிவித்து கொண்டார். எட்டு ஆண்டுகளில் இவர் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்தார்.

ஆகஸ்டோ பினோசே!
வாழ்ந்த காலம்: 1973-1990.
பினோசே சிலி அரசை அமெரிக்க உதவியுடன் 1973ல் தூக்கி வீசினார். இந்த காலத்தில் 35 ஆயிரம் மாயமானார்கள் என்றும்.
அவர்களை கடத்தி சித்திரவதைக்கு ஆளாக்கினர் என்றும் கூறப்படுகிறது. மனிதர்களை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு இருக்கும் போதே இவர் இறந்தும் போனார்.



Click it and Unblock the Notifications











