இறந்ததாக கருதப்பட்ட நேதாஜி, துறவியாக வாழ்ந்து வந்தாரா? நீதிபதியின் பரபரப்பு தகவல்!

Posted By:
Subscribe to Boldsky

ஓய்வுப் பெற்ற நீதிபதியான விஷ்ணு சஹாய் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். அதில், கும்நாமி பாபா என அழைக்கப்படும் பைசாபாத் துறவி தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸா என்பது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதனை கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று உத்திர பிரதேச கவர்னர் ராம் நாயக்கிடம் அளித்துள்ளார்.

பலரும் இத்தகவலை ஆமோதித்துள்ளனர் என்பதால் சுபாஷ் சந்திர போஸ் குறித்த சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கும்நாமி பாபா :

கும்நாமி பாபா :

கும்நாமி பாபா தான் சுபாஷ் சந்திர போஸ் என்றும் இதனை விசாரிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இதனையடுத்து, அலஹாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், கடந்த வருடம் ஜூன் மாதம் சமாஜ்வாதி அரசால் நீதிபதி சஹாய் தலைமையிலான கமிஷன் நிறுவப்பட்டது.

Image Courtesy

நேதாஜி :

நேதாஜி :

சஹாய் கமிஷனுக்கு கிடைத்த சாட்சிகள் கொண்டும் அவர்கள் கூறிய வாக்குமூலங்களை வைத்துமே இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலானோர் கூறியது கும்நாமி பாபா தான் நேதாஜி என்று தான். சிலர் இவர் நேதாஜி அல்ல என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

விசாரணை கமிஷன் :

விசாரணை கமிஷன் :

அறிக்கையின் முடிவினை இன்னும் வெளிப்படுத்தாத நீதிபதி சஹாய் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில்,கும்நாமி பாபாவின் மரணத்திற்கும் விசாரணை கமிஷனின் சாட்சிக்கும் இடையே மிகப்பெரிய சவால் இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

Image Courtesy

சவால் :

சவால் :

கும்நாமி பாபா இறந்தது 1985 ஆம் ஆண்டு.ஆனால் இவ்வழக்கு தொடுக்கப்பட்டு நடைப்பெற்றது 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் இடைவேளி இருக்கிறது. காலப்போக்கில் சில நினைவுகளை மறந்திருப்பார்கள், அல்லது சில நிகழ்வுகளை இவர்களாகவே கற்பனை செய்வதும் நடக்கும்.

Image Courtesy

மதிப்பீடு :

மதிப்பீடு :

ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கும்நாமி பாபாவின் அடையாளத்தைப் பற்றி பலரும் கூறிய தகவல்களை மதிப்பீடு செய்திருக்கிறார் சஹாய்.

இந்த கமிஷன் நியமிக்கப்பட்ட நோக்கத்தின் படி ஆராய்ந்து பார்த்ததில், சாட்சிகளில் பெரும்பாலானோர் கும்நாமி பாபா தான் நேதாஜி என்று உறுதியாக கூறியிருக்கின்றனர்.மேலும், இந்த கமிஷன் தங்களின் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்றால் மட்டும் கும்நாமி பாபா என்பவர் யார் என்பது குறித்து அடையாளம் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்வார்களாம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Newly examined report about Nethaji Subash Chandra Bose

Newly examined report about Nethaji Subash Chandra Bose