உலக அழகி போட்டி மேடையின் பின்புறம் நடக்கும் விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு!

Posted By:
Subscribe to Boldsky

பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் போன்றவர்கள் உலக, பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பிறகு, இப்படி பிரம்மாண்டமாய் ஒரு நிகழச்சி நடக்கிறது என்பது நம் நாட்டில் பலருக்கு தெரியும்.

பெரும்பாலும், இன்று வரையிலும் கூட, நாம் அந்த போட்டியை முழுமையாக கண்டிருக்க மாட்டோம். செய்திகளில், சமூக தளங்களில் இன்னார் வென்றார் என படங்களும், செய்திகளும் வந்தால் அதை லைக் செய்து பகிர்வோம் அவ்வளவு தான்.

இது போன்ற உலக / இந்திய அழகி போட்டி மேடைகளின் பின்புறம் எப்படி இருக்கும் என என்றாவது நீங்கள் யோசித்ததுண்டா?

All Image Credit: lynseyaddario

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செலினா ஜெட்லி

செலினா ஜெட்லி

கடந்த 2000ம் ஆண்டு மும்பையில் நடந்த மிஸ் இந்தியா அழகி போட்டியில் செலினா ஜெட்லி கலந்துக் கொண்ட போது. போட்டியின் நடுவே, மேடைக்கு பின்னால் அவசர அவசரமாக பதட்டத்துடன் யாருடனோ மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த போது எடுத்த படம்.

ஷோ!

ஷோ!

மிஸ் இந்தியா, மிஸ் வேர்ல்ட், மிஸ் யூனிவர்ஸ் போன்ற போட்டிகளில் பல சுற்றுகள் இருக்கும். அதில் ஒன்று பிகினி உடையில் தோன்றும் சுற்று. அந்த சுற்றுக்கு அழகிகள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்த போது எடுத்த படம்.

அலங்காரம்!

அலங்காரம்!

2000ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியின் போது மேடையின் பின்புறம் உடை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்துக் கொண்டிருக்கும் அழகிகள். அழகி போட்டியில்ஒரு பெண்ணின் முகம் மற்றும் உடல் தோற்றம் மட்டும் வைத்து தேர்வு செய்யும் முறை அல்ல. அவரது அறிவாற்றல் மற்றும் மனதளவில் அவர் எப்படி செயற்படுகிறார் என்றும் பரிசோதித்தே ஒருவரை அழகி போட்டியில் வெற்றியாளராக தேர்வு செய்கிறார்கள்.

பரபரப்பு...

பரபரப்பு...

மேடைக்கு பின்னால் தன்னை தானே அவசர கதியில் அழகுப் படுத்திக் கொண்டிருக்கும் போட்டியாளர்.

ஹோட்டல்!

ஹோட்டல்!

அழகு போட்டியில் பங்குபெற வரும் அழகிகளை இரண்டு வாரத்திற்கு முன்பே அழைத்து வந்து அவர்களுக்கான பிரத்தியேகமாக தயார்ப்படுத்தப்பட்ட ஹோட்டலில் தங்க வைத்து விடுவார்கள். அங்கிருந்து அவர்கள் தங்களை அழகி போட்டிக்கு தயார் செய்து கொள்கிறார்கள்.

படிப்பு!

படிப்பு!

அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ளும் பெண்கள், தங்களை அழகு ரீதியாக தயார்ப் படுத்தி கொள்வதை காட்டிலும், அறிவு ரீதியாக தான் அதிகமாக தயார் படுத்திக் கொள்கிறார்கள். ஏனெனில், அழகில் எளிதாக வென்றுவிடலாம் ஆனால், அறிவில் வெல்வது கடினம். ஒருவர் எடுத்துக்காட்டுக்காக கூறும் ஒரு வரி கூட அவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்க காரணியாக அமையலாம்.

பயிற்சி!

பயிற்சி!

போட்டிகளுக்கு மத்தியில் அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ள வந்த பெண்கள் ஓய்வெடுக்கவும் நேரம் மற்றும் இடம் அளிக்கப்படும். அந்த நேரத்தில் அவர்கள் மனதில் பதட்டம் எந்த அளவில் இருக்கும் என்றே கணக்கிட முடியாது. ரசிகர் யாரும் எதிர்பார்த்த போட்டியாளர் தகுதியிழக்கவும் நேரிடலாம்.

வேண்டுதல்!

வேண்டுதல்!

என்னதான் அறிவும், அழகும், திறமையும் இருந்தாலும், சிலர் லக் மற்றும் கடவுளின் அருளும் வேண்டும் என எண்ணுவது உண்டு. அப்படி தான் இந்த அழகியும் மேடைக்கு பின்னால் இருந்து, போட்டியில் கலந்துக் கொள்ளும் முன் வேண்டி கொண்டிருக்கிறார்.

உணவு!

உணவு!

சாதாரணமாக பள்ளிகளில் நடக்கும் ஓட்ட பந்தையத்தில் கலந்துக் கொள்ளும் சில நொடிகள் முன் தான் நமக்கு பசிக்கும், கண்ட தொல்லைகள் வரும். அழகு போட்டி நடந்துக் கொண்டிருக்கும் போது உணவை கொண்டு வந்து முன்னே நீட்டினால் எப்படி இருக்கும். மதில் பூனை போன்ற நிலை தான் ஏற்படும்.

பாராட்டுதல்!

பாராட்டுதல்!

என்னதான் தன்னை வென்று வேறு ஒரு பெண் முன்னேறினாலும், அவரை ஆரத்தழுவி பாராட்டும் குணம் நாம் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்த குணத்திற்கு நங்கூரமாக இருப்பது கடந்து இரண்டு வாரங்களில் அவர்கள் பழகிய பழக்கமாக தான் இருக்கும். பழக்கம் நன்றாக இருந்தால், மனதில் நஞ்சு கலக்காது.

சற்று முன்...

சற்று முன்...

நிகழ்ச்சி துவங்கும் சற்று நேரத்திற்கு முன் அழகி போட்டியில் கலந்துக்கொண்ட அழகிகள் மேடைக்கு செல்லும் காட்சி.

கடைசி நேரம்...

கடைசி நேரம்...

உடை அலங்காரத்தில் இருந்து, முக அலங்காரம் வரை அனைத்தும் முடித்து, மேடைக்கு செல்லும் அந்த கடைசி நேரம் அவரை எல்லாம் சரியாக இருக்கிறதா என சரி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு துளி தவறு ஏற்பட்டாலும் அத்தனை நாட்கள் கண்ட கனவு உடைந்துவிட கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Never Seen Before Photos: Miss India Backstage Moments!

Never Seen Before Photos: Miss India Backstage Moments!
Subscribe Newsletter