இந்தியாவிற்கு பெருமை சேர்த்த உலக அழகி மனுஷி சில்லரின் அரிய புகைப்படங்கள்!

Written By:
Subscribe to Boldsky

இந்தியாவில் இருந்து 17 வருடங்களுக்கு பிறகு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஹரியானாவை சேர்ந்த மனுஷி சில்லர். இத்தனை வருடங்களுக்கு பிறகு உலகி அழகியாகி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். அதற்கு இந்த ஆண்டு சீனாவின் சான்யாவில் 108 நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 118 பெண்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லரும் கலந்து கொண்டு வெற்றி கீரிடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும், உலக அழகி பட்டமானது, வெறும் அழகுக்காக அளிக்கப்படுவது அல்ல. அந்த நபரின் புத்தி சாதுர்யம், முடிவு எடுக்கும் திறன், அனைவரையும் கவரும் பதில் ஆகியவற்றை கொண்டே வழங்கப்படுகிறது. கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் இந்த பட்டம் வழங்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேள்வி

கேள்வி

உலகி அழகிக்கான பட்டம் தருவதற்கு முன்னர் அதில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களிடமும், ஒவ்வொரு கேள்வி கேட்கப்படுவது வழக்கம். அதற்கு அவர்கள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதை பொருத்து தான் அவர்களுக்கு இந்த உலக அழகிப்பட்டம் கொடுப்படுகிறது.

தாயிற் சிறந்தது யார்?

தாயிற் சிறந்தது யார்?

உலகில் அதிக சம்பளம் பெறும் தகுதி எந்த தொழிலுக்காக வழங்கப்படுகிறது, ஏன் என்பது கேள்வியாகும். அதற்கு மானுஷியின் பதில், நான் எனது தாயுடன் மிகவும் பிணைப்பாக இருப்பதால் உலகிலேயே அதிக மதிப்புக்குரியவர் தாய்தான்.

அன்பு, மரியாதை

அன்பு, மரியாதை

ஊதியம் என்று பார்த்தோமேயானால் அது பணமாக இருக்காது, நாம் அவரிடம் செலுத்தும் அன்பும் மரியாதையும்தான் என கருதுகிறேன். எனது வாழ்வில் என் தாய்தான் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தார். எல்லா தாய்களும் தங்கள் குழந்தைகளுக்காக நிறைய தியாகங்களை செய்கின்றனர்.

உலக அழகி

உலக அழகி

ஆகவே தாய்க்கு அதிக ஊதியமும், அன்பும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று கருதுகிறேன் என்று மானுஷி தெரிவித்தார். அப்போது அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. இதையடுத்து உலக அழகி யார் என்ற அறிவிப்பின்போதே அரங்கத்தில் இருந்தோர் இந்தியா இந்தியா என்று கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மானுஷி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

டாக்டர்

டாக்டர்

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் பள்ளியில் இருந்தே மிகவும் திறமையான நபராக திகழ்ந்து வந்துள்ளார். மிகவும் நன்றாக படிக்கும் இவர் தற்போது மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இவர் குடும்பம் மொத்தமே மருத்துவ குடும்பம் தான். இவர் தந்தை 'டிஆர்டிஓ' நிறுவனத்தில் வேலை பார்க்கும் டாக்டர் பட்டம் பெற்ற நபர் ஆவார். இவர் தாயும் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானி ஆவார்.

நடனமும் தெரியும்

நடனமும் தெரியும்

இவர் படிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் செம்ம கில்லாடி தான். இவருக்கு குச்சிப்புடி நடனம் நன்றாக தெரியுமாம். இதற்காக பல பரிசுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

விளையாட்டிலும் சுட்டிப்பிள்ளை

விளையாட்டிலும் சுட்டிப்பிள்ளை

இவர் விளையாட்டு துறையையும் விட்டு வைத்ததாக தெரியவில்லை.. கயிறு கட்டி குதிக்கும் 'பங்கி ஜம்பிங்' விளையாட்டில் மிகவும் ஆர்வம் உடையவர். அதேபோல் பாராசூட்டில் பறக்கும் 'பாரா கிளைடிங்' விளையாட்டிலும் திறமைசாலி. கடலுக்கு உள்ளே ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று சாகசம் செய்யும் 'ஸ்னுர் கெலிங்' விளையாட்டிலும் திறமையானவர்.

நடிப்பு

நடிப்பு

இவருக்கு நடிக்கவும் நன்றாக வருமாம். இவர் 8 வருடங்களுக்கு மேலாக டெல்லியில் இருக்கும் நாடக கம்பெனிகளில் நடித்து வருகிறார். இவரை விரைவில் திரையிலும் பார்க்க ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில திறமைகள்

மேலும் சில திறமைகள்

இவர் கவிதை எழுதுதல், பாட்டு பாடுதல், சமூக சேவைகளை செய்தல் போன்றவற்றிலும் கூட சிறந்து விளங்குகிறார். ஆகவே இவரை உலக அழகியாக தேர்ந்தெடுத்தது சரியான ஒரு முடிவு தான் என்று கூறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

manushi chchillar stunning photo gallery

manushi chchillar stunning photo gallery
Story first published: Monday, November 20, 2017, 13:11 [IST]