20 வருடமாக பல் துலக்காமல் இருந்த ஆண் - ட்ரைனேஜ் ஆகிப் போன வாய்!

Posted By:
Subscribe to Boldsky

ஓரிரு நாட்கள் பல் துலக்காமல் இருந்தால், கைப்பிடி சோறு வாயில் இறங்காது. ஆனால், இங்கே ஒரு நபர் அவரது குழந்தை பருவம் முதல் ஏறத்தாழ 20 ஆண்டுகள் பல் துலக்காமல் இருந்திருக்கிறார். இதனால் அவரது வாய் ட்ரைனேஜ்விட மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளது.

20 வருடமாக பல் துலக்காமல் இருக்கும் ஜே எனும் இந்த நபரின் வயதே 21 தான் என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜே!

ஜே!

ஜே இவரது வயது 21. ஆனால், இவர் பல் துலக்காமல் இருந்த ஆண்டுகள் 20. அதாவது பிறந்த முதல் வயதில் இருந்து இவர் பல் துலக்கியது இல்லை.

முதல் ஒரு வயது வரை பல்லே முளைத்திருக்காது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. ஆகமொத்தம் ஜே தான் பிறந்ததில் இருந்து பல்லே துலக்கியது இல்லை என்பது தான் உண்மை.

பல் மருத்துவர்!

பல் மருத்துவர்!

கடைசியாக பற்கள் எல்லாம் நாசமாகி போன பிறகு ஜேவிற்கு ஞானோதயம் பிறக்கவே பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றார். அப்போது தான் ஜேவின் பற்கள் ட்ரைனேஜ்விட மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது. இவரது வாயில் பல பற்கள் சொத்தையாகவும், வாயில் பல தொற்றுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தவறான உணவுகள்!

தவறான உணவுகள்!

பல வருடங்களாக தவறான உணவுகள் உண்டதாலும், நிறைய சோடா பானங்கள் குடித்தாலும் இந்த நிலை ஏற்பட்டது என கூறும் இவர், வாழ்நாளில் பிரஷ், பேஸ்ட், மவுத் ஃபிரஷ்னர் வாங்க நயா டாலர் செலவு செய்தது இல்லை. முக்கியமாக பற்களை எந்த விதத்திலும் இவர் சுத்தமே செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

All Image Courtesy

டாக்டர். ஜேம்ஸ்!

டாக்டர். ஜேம்ஸ்!

கடைசியாக இவர் சென்று பார்த்த டாக்டர் ஜேம்ஸ் தான் இவரது தர்மசங்கடமான நிலைக்கு தீர்வு கண்டவர். நுட்பமான கருவிகள் கொண்டு பரிசோதனை செய்ததில் இவரது பல பற்கள் பிடுங்க வேண்டிய நிலையில் இருந்தன. ஏறத்தாழ 11 பற்கள் பிடுங்கி, போலி பற்கள் வைக்கப்பட்டன. மேலும், 21 பற்களை பாலிஷ் செய்து ஜேவின் வாயை புதிப்பித்துள்ளார்.

All Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Man Who Did Not Brush For 20 Years.

The Man Who Did Not Brush For 20 Years.
Subscribe Newsletter