ஆணின் காதில் உயிருடன் வாழ்ந்து வந்த பல்லி - வீடியோ!

Posted By:
Subscribe to Boldsky

நமது வீட்டில் கழிவறை, சமையலறையில் என ஆங்காங்கே பூச்சிகள் இருப்பதை பார்த்திருப்போம். சில சமயங்களில் எதிர்பாராத இடங்களில் எலி குட்டியிட்டு வைத்திருப்பது கூட கண்டு நாம் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.

ஆனால், ஒரு நபரின் காதுக்குள் பல்லி ஒன்று உயிருடன் இருந்த சம்பவம் சீனாவில் வைரல் செய்தியாக பரவி வருகிறது. காதுக்குள் ஓரிரு நாட்கள் குடித்தனம் நடத்தி அந்த நபரை படாதப்பாடுப்படுத்தியுள்ளது அந்த பல்லி.

இதனால் நாள் முழுக்க தலைவலி, காது வலியுடன் அவதிப்பட்டுள்ளார் அந்த சீன ஆண்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீனா!

சீனா!

இந்த விசித்திர சம்பவம் சீனாவில் நடந்ததுள்ளது. ஒருநாள் தூங்கி எழுந்ததில் இருந்து அந்த நபர் காதில் ஏதோ அசௌகரியமாக உணர்ந்துள்ளார். அது, மெல்ல மெல்ல கூர்மையான வலியை ஏற்படுத்தியுள்ளது. தாங்க முடியாத அளவிற்கு வலி அதிகரிக்க, என்ன காரணம் என கண்டறிய முடியாமல் திணறி இருக்கிறார் அவர்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

பரிசோதனை செய்ய மருத்துவரிடம் சென்றுள்ளார் அந்த நபர். அப்போது தான் அவரது காதினுள் பல்லி ஒன்று உயிருடன் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. காதினுள் அந்த பல்லி திரும்பிக் கொண்டே இருந்த காரணத்தால் தான் தலைவலியும், காது வலியும் அந்த நபருக்கு ஏற்பட்டுள்ளது என மருத்துவர் அறிந்தார்.

மயக்கம்!

மயக்கம்!

அந்த பல்லியை காதில் இருந்து அகற்றும் முன் மயக்க மருந்து கொடுத்து, பல்லியை வெளியே எடுத்துள்ளார் மருத்துவர். அந்த பல்லியை வெளியே எடுக்க ஐந்து நிமிடங்கள் ஆகியுள்ளது. அகற்றும் போது சில சிரமங்கள் உண்டானது என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

வால் எங்கே?

வால் எங்கே?

காதில் இருந்து பல்லி அகற்றப்பட்டுவிட்டது என்ற போதிலும், அதன் வால் எங்கே என்று கண்டறிய முடியாமல் போனது. காதுக்குள் செல்லும் போதே பல்லி வாலின்றி சென்றதா? இல்லை காதல் வால் சிக்கிக் கொண்டதா? என தெரியவில்லை.

வீடியோ!

சீன நபரின் காதில் இருந்து உயிருடன் வெளியே எடுக்கப்பட்ட பல்லி - காணொளிப்பதிவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Disturbing Fact: Lizard Found In Man's Ear & Its Tail Is Missing!

Disturbing Fact: Lizard Found In Man's Ear & Its Tail Is Missing!
Subscribe Newsletter