For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெரிந்த மருத்துவமும், தெரியாத உண்மைகளும் - மெர்சல் எஃபெக்ட்!

|

மெர்சல் - இந்திய மருத்துவ முறையில் இருக்கும் கருப்பு பக்கங்களை டார்ச் லைட் அடித்து காண்பித்துள்ள காரணத்திற்காக ஆளும் மத்திய கட்சியின் சில தலைவர்களால் எச்சரிக்கைக்கு ஆளாகி இருக்கும் திரைப்படம். உலகில் உள்ள எல்லா டாக்டர்களும் போலியானவர்கள் அல்ல.

ஆனால், ஐம்பது இலட்சம், ஒரு கோடி நன்கொடையாக கொடுத்து மருத்துவ பட்டம் பெற்ற சில அரைகுறை டாக்டர்கள், கார்பரேட் மருத்துவமனைகளில் மருத்துவத்தை பிராடக்ட்டுகளாகவும், நோயாளிகளை கஸ்டமர்களாகவும் பாவிக்கும் நிகழ்வுகளை நம்மில் பலரே கண்கூட பார்த்திருப்போம்.

மருத்துவ துறையில் நம் நாட்டில் மட்டும் தான் குற்றம் நடக்கிறதா என்றால் இல்லை. இது ஒரு இண்டர்நேஷனல் பிஸ்னஸ். இதன் பின்னணியில், இல்லாத நோய்களை, வைரஸ்களை உருவாக்கி, அதற்கு தீர்வாக ஒரு மருந்தை தயாரிக்கும் பெருச்சாளிகள் ஏராளம் இருக்கிறார்கள்.

அந்த பெருச்சாளிகள் உலகின் வளரும் நாடுகளையும், அந்நாட்டு மக்களையும் தான் தனது மூலதனமாக நம்பி மருத்துவத்தை பெரும் பொருளாதாரம் ஈட்டி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருந்துகள்!

மருந்துகள்!

வளர்ந்து வரும் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்கள் தங்கள் சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை மருந்துகளுக்காக மட்டுமே செலவு செய்கிறார்கள் என ஒரு அறிக்கை கூறுகிறது. வளரும் நாடுகளின் வளர்ச்சியை தடுக்கவே சில வளர்ந்த நாடுகள் சில வைரஸ்களை தெரிந்தே பரப்புகின்றன என்ற குற்றச்சாட்டும் நாம் செவிவழி செய்தியாக அறிந்து வருகிறோம்.

நான்கு லட்சம்!

நான்கு லட்சம்!

தவறான மருந்துகள் அல்லது மருத்துவத்தின் காரணமாக மட்டும் வருடத்திற்கு நான்கு இலட்சம் பேர் உயிரிழப்பதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. ஆம்! ஜெர்னல் ஆப் பேஷன்ட் சேஃப்டி என்ற ஆய்வறிக்கையில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரப்படும் தவறான சிகிச்சை மற்றும் மருந்துகள் காரணத்தால் மட்டும் இரண்டு இலட்சத்தில் இருந்து நான்கு இலட்சம் வரையில் உயிரிழப்பு ஏற்படுவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

மூன்றாவது....

மூன்றாவது....

உலகளவில் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் காரணத்திற்கு பிறகு அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் மூன்றாவது காரணம் இந்த தவறான மருத்துவ முறை சிகிச்சை சார்ந்த மரணங்கள் என்றும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும்...

அமெரிக்காவில் மட்டும்...

அமெரிக்காவில் மட்டுமே மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஏழாயிரத்து அறநூற்று ஐம்பது கோடி டாலர்கள் வீணடிக்கப்படுவதாக ஒரு அறிக்கை தகவல் கூறுகிறது. இதில் ஃபிராடு, பித்தலாட்டம், தேவையற்ற சிகிச்சை, ஒருவருக்கு இவ்வளவு சிகிச்சை அளித்தால் போதும் என்ற அளவு இருப்பினும், அளவுக்கு அதிகமாக சிகிச்சை அளிப்பது, தேவையற்ற நிலையில் அட்மிஷன் போட்டு காசை விரயம் செய்வது என அமெரிக்காவிலேயே இவ்வளவு தில்லாலங்கடி விஷயங்கள் நடக்கின்றன.

இந்த பித்தலாட்டம் வரும் ஆண்டுகளில் அமெரிக்காவில் 4.5 இலட்சம் கோடியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளினிக்

கிளினிக்

மருத்துவமனைகளை விட நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தானவை கிளினிக்குகள். 58% கிளினிக்குகள் மக்களுக்கு பாதுகாப்பானது அல்லது என கூறப்படுகிறது. மருத்துவமனையை காட்டிலும், கிளினிக்குகளில் மருத்துவர்கள் அந்தந்த நோய்க்கான மருந்துகளை தராது, தங்களிடம் இருக்கும் மருந்துகளை வைத்து தீர்வு காண்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

இது போக கமிஷனுக்காக தங்களிடம் மருந்து விற்க வரும் மெடிக்கல் கம்பெனிகள் தரும் மருந்துகளை தரம் குறைந்தது என்பதை தெரிந்தே நோயாளிகளுக்கு தருவதாகவும் கூறப்படுகிறது.

நாளுக்கு இரண்டு பேர்...

நாளுக்கு இரண்டு பேர்...

கிளினிக்குகளில் தரப்படும் தவறான மருத்துவம் காரணமாக குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு இரண்டு பேராவது பாதிக்கப்படுகிறார்கள். சில கிளினிக் மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு உடனே தீர்வளிக்க வேண்டும் என்ற கருத்தில், ஓவர் டோஸ் மருந்துகள் கொடுத்துவிடுகிறார்கள். இது பின்னாட்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.

ஓவர் டோஸ் மருந்துகள்!

ஓவர் டோஸ் மருந்துகள்!

ஓவர் டோஸ் மருந்துகள் அந்த நாளுக்கு உடனடி தீர்வு அளித்தாலும், காலப்போக்கில் நீங்கள் ஓவர் டோஸ் மருந்துகள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உங்கள் உடல் உறுப்புகளை பாதிக்க வைக்கும். முக்கியமாக சிறுநீரகத்தை வலுமையாக பாதிக்க செய்யும். இதன் மூலமாக உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு கூட உண்டாகலாம்.

ஆங்கில மருத்துவம்!

ஆங்கில மருத்துவம்!

அனைத்திற்கும் மேல் நீங்கள் ஆங்கில மருத்துவம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். எந்த ஒரு உடல்நல பாதிப்பிற்கும், எந்த ஒரு ஆங்கில மருந்தும் முழு தீர்வை அளிப்பதில்லை. ஆங்கில மருந்துகள் என்பது கட்டுப்படுத்துமே தவிர, குணப்படுத்தாது. பெரும்பாலான சிறுசிறு உடல்நல குறைபாடுகளை நமது உடலே சரிசெய்து கொள்ளும்.

கொகைன்!

கொகைன்!

கொகைன் என்பது நாம் அனைவரும் அறிந்த போதை மருந்து. உலகளவில் பெரிதாக செய்யப்படும் கடத்தல் பொருளும் இதுதான். பல கோடிகளில் இதன் பேரம் நடந்து வருகிறது. ஆனால், 1880களில் இந்த கொகைனை வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு, சளி, தலைவலி மற்றும் தூக்கமின்மைக்கு விற்றுவந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Known Medicine and Unknown Facts!

Known Medicine and Unknown Facts!
Story first published: Saturday, October 21, 2017, 14:34 [IST]
Desktop Bottom Promotion