தாஜ் மஹால் - தேஜோ மஹாலயாவாம், கிறிஸ்டியானிட்டி கிருஷ்ணா நீதியாம் - இந்தியாவின் முதல் சீரியஸ் பக்தர்!

Posted By:
Subscribe to Boldsky

மீம்ஸ்களில் ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது, பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா என்ற வடிவேலுவின் டெம்ப்ளேட் ஆல் டைம் க்ளாசிக்கல் டெம்ப்ளேட். அந்த டெம்ப்ளேட்-க்கு நூறு சதவீதம் பொருந்தும் ஒரு நபர் பற்றி தான் நாம் இங்கே காணவுள்ளோம். அதாவது, கிருஷ்ண நீதி தான் பின்னாட்களில் கிறிஸ்டியானிட்டியாக மாறியதாம்... தேஜோ மஹால் என்பது தான் பின்னாட்களில் தாஜ் மஹால் என மாறியதாம்.

கொஞ்சம் கடுப்பா இருந்தா உங்களுக்கு எதோ பிரச்சனை என்று அர்த்தம். ஆமா, பின்ன இத படிச்ச பின்ன கடுப்புகள் ஏகபோகமாக வரவேண்டாமா பாஸ். இப்படி எல்லாம் கூறிய இவரை தான் இணையத்தளத்தில் பக்தாளின் ஆதி தலைவர் என புகழ்ந்து தள்ளி வருகிறாகள். சரி,வாங்க அந்த மகான் யார் எவர் என்று கொஞ்சம் அறிந்துக் கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏற்கனவே ஆப்பு...

ஏற்கனவே ஆப்பு...

உ.பி-யில் ஏற்கனவே யோகியின் ஆட்சியில், தாஜ் மஹாலை மாநில சுற்றுலா தள பட்டியலில் இருந்து நீக்கிவிட்டார்கள். இந்த நேரத்தில் பா.ஜ.க-வின் வினய் கதியார் என்பவர் தாஜ் மஹாலை தேஜோ மஹாலயம் என கூறியிருப்பது இந்திய மக்களின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

Image Credit: PN Oak

மராத்திய புத்தகம்!

மராத்திய புத்தகம்!

ஆம்! பி.எம். ஒக் என்றவர் 1960-70களில் எழுதி வெளியான மாராத்திய புத்தகத்தில் தாஜ் மஹால், தேஜோ மஹாலயம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது சிவனுடைய இடம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பழைய சிவன் கோவிலே தாஜ் மஹாலாக மாறியது என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: PN Oak

ஃப்ளாப் புக்!

ஃப்ளாப் புக்!

ஆனால், இந்த புத்தகத்தை அந்த நாளில் இருந்து, இந்த நாள் வரை யாரும் பெரிதாக வாங்கி படிக்கவில்லை. ஆனால், விற்ற ஓரிரு பிரதிகளை படித்த பக்தர்கள் சிலர் தாஜ் மஹால் சிவனின் கோவிலென அடிக்கடி ஃபேஸ்புக், வாட்ஸ்=அப்பில் பதிவிடுவதை நீங்களே கண்கூட கண்டிருக்கலாம்.

தியரிகள்!

தியரிகள்!

ஒக் ஒரு சயின்டிஸ்ட். இவர் சில தியரிகளும் கூறியுள்ளார். ஒக் தாஜ் மஹாலை மட்டும் குறிவைக்கவில்லை. இவர் சவுதியில் இருக்கும் இஸ்லாமிய அடையாளமான Kaaba-வையும் கூட ஒரு இந்து கோவில் என கூறியுள்ளார். மேலும், ஆக்ரா கோட்டையும் இந்துக்கள் கட்டிடம் என கூறியுள்ளார். (எதுக்குன்னே பிட்டு, பிட்டா சொல்லிக்கிட்டு, ஒட்டுமொத்த பால் மண்டலமும், சிவனுக்கு பால் அபிஷேகம் பண்ணதுல இருந்து கொட்டுனதுன்னு சொல்லிட்டு போங்க...)

Image Credit: PN Oak

கிருஷ்ண நீதி!

கிருஷ்ண நீதி!

ஒக் சொல்லியதில் தூக்கிவாரிப்போட்டது இந்த தியரி தான். அதாவது, கிறிஸ்டியானிட்டி எனது கிருஷ்ண நீதி என்பதில் இருந்து மருவியது என கூறியுள்ளார் ஒக். கிருஷ்ணரை பின்பற்றி வந்தவர்கள் தான் கிறிஸ்டியானிட்டியில் இருக்கிறார்கள் என்றும் இவர் கூறியுள்ளார்.

Image Credit: PN Oak

வாட்டிகன் சிட்டி!

வாட்டிகன் சிட்டி!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பார்களே, அதுதான் இது. வாட்டிகன் என்பது வேதிக் என்பதே ஆகும். இதுவே காலப்போக்கில் மாறியது என்றும் ஒரு தியரியை கூறியுள்ளார். ஒக் எனும் இந்த ஆதி பக்தர் ஆங்கிலத்தில் ஒன்பது புத்தகங்கள், மராத்தியில் 13 புத்தகங்கள் மற்றும் இந்தியில் எட்டு புத்தகங்களும் எழுதியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Know About the Person Who Said, Taj Mahal as Tejo Mahalaya!

Know About the Person Who Said, Taj Mahal as Tejo Mahalaya!
Subscribe Newsletter