செக்ஸிற்கு மட்டுமல்ல, இந்த விஷயங்களிலும் சிறக்க காமசூத்ரா உதவுமாம்!

By: Staff
Subscribe to Boldsky

காமசூத்ரா என்றாலே அனைவருக்கும் செக்ஸ், தாம்பத்தியம் சிறக்க உதவும் புத்தகம் என்ற எண்ணம் தான் வரும். ஆனால், காமசூத்ரா என்பது ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்வில் மேன்மை உண்டாகவும் பல குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. செக்ஸ் என்பது அதன் ஒரு பகுதி தான்.

ஆனால், செக்ஸ் என்பது மட்டும் மிகுதிப்படுத்தி அனைவரும் கூறி வருவதால் காமசூத்ரா ஒரு செக்ஸ் புத்தகம் என்ற பிம்பத்தினுள் சிக்கிக் கொண்டது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈர்ப்பு!

ஈர்ப்பு!

ஒரு நபர் உடலளவிலும், மனதளவிலும் எப்படி ஈர்ப்பு கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என காமசூத்ரா கற்பிக்கிறது. குளிப்பது முதல், சவரம் செய்வது முதல் பலவற்றை பற்றி இதில் கூறப்பட்டுள்ளதாம்.

தைரியம்!

தைரியம்!

காமசூத்ரா புத்தகத்தில் ஒருவர் எப்படி தைரியமாக இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்பதற்கும் குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இது ஒருவரது குணாதிசயங்களை வலிமையாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

மனநிலை!

மனநிலை!

ஒருவர் காதல் நிலை எப்படி எழுகிறது, அந்த நிலையில் அவர் எப்படி செயல்பட வேண்டும் என ஒரு நபர் குறித்த மனநிலை, மனநலம் குறித்தும் காமசூத்ரா பேசுகிறது.

எதிர்பாலினர் மீது எப்படி கவனம் செலுத்த வேண்டும், அவரது மனதை எப்படி புரிந்துக் கொள்வது என பலவன இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இச்சை எண்ணம்!

இச்சை எண்ணம்!

காமசூத்ரா செக்ஸ் குறித்த புத்தகம் என்ற பிம்பம் பலர் மத்தியில் இருக்கிறது. ஆனால், ஒரு நபர் செக்ஸ்-ல் அதிக ஈடுப்பாடு காட்டுதல் கூடாது என கூறப்பட்டுள்ளது.

வழி!

வழி!

இருவர் முழுமனதுடன் உறவில் இணையும் போது அது வாழ்க்கையில் முழுமை அடையவும். ஆன்மிகம் மற்றும் விடுதலைக்கான ஒரு சரியான வழியாக அமைகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

நான்கு நிலைகள்!

நான்கு நிலைகள்!

எப்படி உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. அதில் நான்கு நிலைகள் கடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தயாராகுதல், ஃபோர்ப்ளே, தாம்பத்தியம், எஃப்டர் ப்ளே.

மாறாது!

மாறாது!

காமசூத்ராவில், இவ்வுலகில் நேரமும், தொழில்நுட்பமும் மாறினாலும், ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் திருமண உறவும், தாம்பத்தியமும் மாறாது என கூறப்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கை!

ஓரினச் சேர்க்கை!

காமசூத்ராவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் ஒரே மதிப்பளித்துள்ளது. அனைவரும் காதலில் ஈடுபட உரிமை இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வு!

தேர்வு!

காமசூத்ராவில் ஒருவர் எப்படி தனது துணையை தெரிந்தெடுக்க வேண்டும் என்றும், எதிர்பாலின நபரை எப்படி ஈர்க்க வேண்டும் என்பது குறித்தும் பல குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kamasutra Is Not all About Lovemaking Only. It Helps to Boost Personality and More!

Kamasutra Is Not all About Lovemaking Only. It Helps to Boost Personality and More!
Subscribe Newsletter