For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நவராத்திரி பூஜை முடிக்கும் முறை தெரியுமா?

  |

  அம்மனை வழிபடக்கூடிய நவராத்திரி பூஜை இன்று துவங்குகிறது. புரட்டாசி மாசம் மகாளய அமாவாசையன்று கொலு அலங்காரம் துவங்கும். அப்போது மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் கொலுப்படிகள் வைக்கப்பட வேண்டும்.

  படிகளின் மேல் தூய துணி விரிக்கப்பட்டு, அம்பிகையின் கலசமும் விநாயகர் சிலையும் முதலில் வைக்க வேண்டும். பின்னர் மற்ற தெய்வங்களின் பொம்மைகள் அழகாக வரிசையாக வைக்கப்படுகின்றன. பழங்கால பாரம்பரிய பொம்மையாகிய மரப்பாச்சிகளும் இதில் இடம் பெறும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கொலுப்படிகள் :

  கொலுப்படிகள் :

  இந்த உலகம் நீரினால் தான் சூழப்பட்டிருந்தது என்பதைக் குறிக்கும் விதமாகவும், நீர்வாழ் ஐந்துக்கள் தான் முதன் முதல் தோன்றியவை என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவும் தான், நாம் கொலுவின் போது தரையில் குளம் கட்டி அதில் நீர்வாழ் ஜந்துக்களான மீன், ஆமை போன்ற பொம்மைகளை மிதக்க விடுகிறோம்.

  இறைவனின் முதல் அவதாரமும் `மச்சம்' என்று சொல்லப்படும் மீன்.இவற்றோடு வனவாசம் செய்த ராமபிரானை நினைவூட்டும்படி செடி, கொடிகள், மரங்கள், மலைகள் போன்றவைகளையும் அமைக்கலாம்.

  Image Courtesy

  மேல் படிகள் :

  மேல் படிகள் :

  பிறகு கீழிருந்து மேலாக, முதல் இரண்டு மூன்று படிகளில் மற்ற உயிரினங்களான பறவைகள், ஊர்வன, மிருகங்கள் போன்றவைகளையும், அதற்குமேல் ஆதி மனிதர்களைப் போன்ற குறவன், குறத்தி, வேடுவன், வேடுவப் பெண்மணி, பாம்பாட்டி போன்றவர்களும் வைக்கப்படுவார்கள்.

  அதற்கு மேல்படியில் மனிதப் பிறவிகளான மகான்கள், அதற்கும் மேல்படிகளில் தெய்வத்தின் அவதாரங்கள் மற்றும் திருவிளையாடல்களைக் குறிக்கும் பொம்மைகளும் வைக்க வேண்டும்.

  எல்லாவற்றுக்கும் மேலாக முதல் படியில் அம்பிகையின் கலசமும், அம்பிகை, மகாலட்சுமி, விசாலாட்சி, புவனேஸ்வரி முதலான அன்னைகளின் சிலைகளும் வைக்கப்பட வேண்டும்.

  Image Courtesy

  ஐதீகம் :

  ஐதீகம் :

  முதல் நாள் பூஜிக்கப்பட்ட கலசமும் பொம்மைகளும் படிகளில் வைக்கப்பட்டுவிட்ட பின்னர், எல்லா பொம்மைகளிலும் தேவியின் சக்தி மையம் கொண்டு விடுவதாக ஐதீகம். இப்படி அமாவாசையன்று பொம்மைகளை அலங்கரித்துவிட்டாலும் அடுத்த நாள் தான் பண்டிகை தொடங்கும்.

  Image Courtesy

  நைவேத்தியம் :

  நைவேத்தியம் :

  தினமும் காலையில் குளித்து தூய்மையுடன் கொலுவின் முன்னால் சுத்தப்படுத்தி, கோலம் இட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அன்னம், பருப்பு, நெய் இவற்றுடன் ஏதாவது நைவேத்தியம் செய்து, வெற்றிலை, பாக்கு பழத்துடன் படைப்பது விசேஷம்.

  இந்த ஒன்பது நாட்களும் மாலைவேளைகளில் குறித்து விளக்கேற்றி, நவதான்யங்களைக் கொண்டு தினமொரு சுண்டல் செய்து, பழம் தேங்காய் இவற்றை நைவேத்யம் செய்து தேவி மகாத்மியம், துர்கா ஸ்பதசதீ, லலிதா சஹஸரநாமம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகங்களை முடிந்தவரை பாராயணம் செய்யலாம்.

  கன்னிப்பூஜை :

  கன்னிப்பூஜை :

  சங்கடங்கள் மறைத்து சவுபாக்கியம் பெருகும். கொலு வைக்கும் இல்லத்தரசிகள் தினந்தோறும் இளம் பெண்கள், கன்னிப்பெண்களைப் பூஜைக்கு அழைத்து,

  பூஜை முடிந்தவுடன் தன் கையாலேயே ஐவ்வாது, கஸ்தூரி, சந்தனம், குங்குமம், சாந்து, ஸ்ரீசூர்ணம், மை ஆகியவற்றை இட்டு அவர்களையும் தேவியாகவே பாவித்து வணங்க வேண்டும்.

  அவர்களை வழியனுப்பும் போது வெற்றிலை பாக்கு, மஞ்சள் இயன்ற தட்சணை ரவிக்கைத்துண்டு ஆகியவற்றைக் கொடுத்தனுப்புவது விசேஷம்.

  ஒவ்வொரு நாளும் இரவில் கொலுவுக்கு ஆரத்தி எடுத்து, அன்றைய பண்டிகையை முடிக்க வேண்டும். கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை, விஜயதசமி என்று விசேஷ தினங்களாக கொண்டாடப்படுகின்றன.

  Image Courtesy

  நவராத்திரி பண்டிகை முடிக்கும் முறை :

  நவராத்திரி பண்டிகை முடிக்கும் முறை :

  விஜயதசமி பண்டிகையின் கடைசி தினமாதலால், அன்று மாலை தெய்வ சக்தியுள்ள பதுமைகளையும் கலசத்தையும் கொலுவினின்றும் அகற்றுவதற்கான விசேஷ பிரார்த்தனை செய்ய வேண்டும்.

  கலசம் வைத்து பூஜை செய்தவர்கள் தேவியை எழச்செய்து, அவளுக்குரிய இடத்துக்கு விடை கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.

  அன்றிரவு கொலுவில் வைக்கப்பட்ட ஏதாவது இரு பதுமைகளை, கிழக்கு மேற்காக படுக்கவைத்து, பத்து நாட்கள் தெய்வமாக நின்று அருள் புரிந்த நீங்கள் இனி ஓய்வெடுக்கலாம் எனக்கூறி நவராத்திரி பூஜையை ஆரத்தி எடுத்து முடித்து வைத்து, மறுநாள் பொம்மைகளை அகற்றலாம்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Important things to follow in Navratri pooja

  Important things to follow in Navratri pooja
  Story first published: Wednesday, September 20, 2017, 15:24 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more