Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
டெங்கு கொசுவிடம் இருந்து தப்பிக்க தமிழக அமைச்சர்களின் ஐடியாக்கள் - ஒரு சிறிய கற்பனை!
டெங்கு கொசுவிடம் இருந்து தப்பிக்க தமிழக அமைச்சர்களின் ஐடியாக்கள் - ஒரு சிறிய கற்பனை!
நாளுக்கு நாள் டெங்கு காரணமாக உயிரிழப்பு தமிழகத்தில் அதிகரித்து கொண்டே போகிறது. சுகாதார அமைச்சகம் என்ன தான் செய்கிறது என கேள்விகள் மட்டுமே நாலாபுறமும் எழுகிறதே தவிர, அதற்கு பதிலாக அவர்கள் என்ன செய்துள்ளனர் என்பதை பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டும்.
சாணி தெளித்து வையுங்கள் என ஒருவர் கூறுகிறார், தமிழகத்தில் டெங்கு பரவ டெல்லி கொசு காரணமாம், சென்னையில் டெங்கு பரவ சேலம், மதுரை கொசு காரணமாம். காரணம் காட்டியே பழகிய இவர்களிடம் இதைவிட பெரிதாக வேறு எந்த காரணமும் நாம் எதிர்பார்த்துவிட முடியாது.

ஒருவேளை நமது சயின்டிஸ்ட் அமைச்சர்களை டெங்குவை ஒழிக்க ஒரு ஐடியா கேட்டால், அவர்கள் என்னென்ன சொல்வார்கள்... (ஏற்கனவே நிறையா சொல்லிட்டாங்க... நாம சும்மா கொளுத்திப் போடுவோம்...)

தர்மாகோல் அமைச்சர்!
ஒவ்வொரு ஊர் எல்லையிலும் பெரிய சைஸ் கொசுவர்த்தி பற்ற வைத்துவிடலாம். அல்லது பாதுகாப்பு வீரர்களை கையில் கொசு பேட் கொடுத்து, டெல்லி கொசுக்கள் தமிழகத்தில் நுழையாமல் அடித்து கொல்ல சொல்லாம்.

சோப்பு நுரை அமைச்சர்!
டெங்குவை பரப்பும் கொசுக்களில் உயிர் வாழும் ஆண் கொசுக்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்து விடலாம். இதனால் வரும் நாட்களில் அவற்றின் தொகையும் குறைந்துவிடும். டெங்கு பரவலாமல், அதிகரிக்காமல் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.

டெல்லி கொசு அமைச்சர்!
தமிழகத்திற்குள் நுழையும் முன்னர் அனைத்து Toll-Gateகளை கடந்து வரும் போக்குவரத்து வாகனங்களிலும் கொசு மருந்து அடித்துவிடலாம். கொசுக்கள் செத்துவிடும். கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் எனில், ஒவ்வொரு மாவட்ட Toll-Gateகளிலும் கூட இந்த முறையை செயற்படுத்தலாம்.

முண்டாசுப்பட்டி அமைச்சர்!
உங்கள் தெருக்களில் இருக்கும் எல்லா வீடுகளின் கதவுகளிலும் "திரும்ப போ" என எழுதி ஒரு ஸ்டிக்கர் ஒட்டிவிடுங்கள். அதை படித்து புரிந்துக் கொண்டு கொசுக்கள் வீட்டுக்குள் நுழைந்து கடிக்காமல் திரும்ப போய்விடும். பேய், பிசாசே திரும்ப போகும் போது, தம்மாந்தூண்டு கொசு போகாதா...

வடிவேலு அமைச்சர்!
இது போன்ற அசாத்திய முறைகளை கடந்தும் வீட்டுக்குள் கொசு வந்தால், ஒரு உரலை எடுத்துக் கொள்ளுங்கள், வீட்டுக்குள் நுழையும் கொசுக்களை பிடித்து அதில் போட்டு நன்கு, நன்கு என அடித்து கொல்லுங்கள். இல்லையேல் கத்தி எடுத்து அதன் வயிற்றில் குத்தி கொலையும் செய்யலாம். இந்த கொலைகளுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாது.

கொசு கோட்!
மழை பொழியும் போது நனையாமல் இருக்க ரெயின் கோட் மாட்டிக் கொள்கிறோமோ, அதே போல டெங்கு வராமல் தடுக்க கொசு கோட் மாட்டிக் கொள்ளவும். மிக குறைந்த விலையில் கொசு கோர்ட்டை அரசாங்கமே விற்க துவங்கும். மேலும், இது ஜி.எஸ்.டி 28% பிரிவில் அடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இது ஃபன்னா...
என்ன ஃபன்னா... அட என்னப்பா கற்பனை, கிற்பனைனுன்னுகிட்டு ஏற்கனவே அவிங்க இதவிட சூப்பரா ஃபன் பண்ணிக்கிட்டு இருக்காங்க இதுல நீங்க வேற நடுவுல... போங்கப்பா அங்கிட்டு என சிலர் மனதுக்குள்ளும், சிலர் வெளிப்படையாகவே கூறலாம்...
இப்போ எங்களோட மைன்ட் வாய்ஸ் என்னன்னா... சூரியின் "நீங்களே கலாய்சுட்டா அப்பறம் நான் எதுக்கு பங்க..."



Click it and Unblock the Notifications