சசிகலா நடராஜன் எப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக ஆனார் என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின், அதிமுக கட்சியின் பொது செயலாளராக சசிகலா நடராஜன் ஆனார். ஒவ்வொரு தலைவருக்கும் நம்பிக்கைக்குரிய நண்பராக மற்றும் ஆலோசகராக யாரேனும் ஒருவர் இருப்பர். அப்படி தான் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும், ஆலோசகராகவும் சசிகலா ஆனார்.

பலருக்கும் சசிகலா எப்படி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவரானார் மற்றும் எந்த ஒரு விஷயத்தையும் சசிகலாவுடன் ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கிறார் என்ற கேள்வி இருக்கும். இக்கட்டுரையில் சசிகலா எப்படி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியானார் என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெருங்கிய ஆலோசகர்

நெருங்கிய ஆலோசகர்

சசிகலா நடராஜன் அரசாங்கம் மற்றும் கட்சியில் எந்த ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும், அதிமுக கட்சியில் மிகப்பெரிய அதிகாரம் மற்றும் செல்வாக்குடன் இருந்தார். இப்படி சசிகலா அதிமுக கட்சியில் அதிகாரத்துடன் இருப்பதற்கு ஜெயலலிதாவின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக இருப்பதே முக்கிய காரணம்.

நட்பின் ஆரம்ப காலம்

நட்பின் ஆரம்ப காலம்

சசிகலா தென் ஆற்காட்டின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன் என்பவரை மணந்தார். திடீரென்று நடராஜன் வேலையை இழக்க, அந்த குடும்பம் மிகுந்த வறுமைக்குள்ளானது.

கலெக்டர் சந்திரலேகா

கலெக்டர் சந்திரலேகா

தென் ஆற்காட்டின் கலெக்டரான வி.எஸ். சந்திரலேகாவின் நம்பிக்கைக்கு உரியவர் தான் சசிகலாவின் கணவர். 1980 இல், குடும்ப சூழ்நிலை காரணமாக சசிகலாவின் கணவர் நடராஜன் சந்திரலேகாவின் உதவியை நாடினார். தன் மனைவியை ஜெயலலிதாவிற்கு அறிமுகப்படுத்தி, கட்சி நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்க அனுமதி கேட்டுத் தடுமாறு வேண்டிக் கொண்டார். ஜெயலலிதாவின் உற்றத் துணையாக இருந்த சந்திரலேகாவும் சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார்.

ஜெயலலிதாவிடம் அறிமுகம்

ஜெயலலிதாவிடம் அறிமுகம்

ஆரம்ப காலத்தில் சசிகலா வீடியோ கடையை நடந்தி வந்தார். விடுமுறை நாட்களில் சந்திரலேகாவும், ஜெயலலிதாவும், ஆங்கில படம் பார்ப்பது வழக்கம். சந்திரலேகா சசிகலாவின் வீடியோ கடையைப் பற்றி சொல்லி வாங்க, ஜெயலலிதாவும் அங்கேயே தனக்கு வேண்டிய படங்களை வாங்க ஆரம்பித்தார். மேலும் ஜெயலலிதா பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளையும் வீடியோ எடுக்கவும் செய்தார் சசிகலா. இப்படியே இவர்களது நட்பு வளர்ந்து, நாளடைவில் சசிகலாவும், ஜெயலலிதாவும் நெருக்கமானார்கள்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்...

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்...

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், அதிமுக தலைமையைக் கைப்பற்ற சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் மிகவும் உதவியாக இருந்தனர். 1988 ஆம் ஆண்டு சசிகலா ஜெயலலிதாவுடனேயே தங்க ஆரம்பித்துவிட்டார். அதன்பின் தன் கணவனைக் கூட சசிகலா பொது நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எங்கும் கண்டதில்லை. அந்த அளவில் ஜெயலலிதாவுடனேயே தங்கிவிட்டதோடு, ஜெயலலிதாவின் நம்பிக்கை உரியவராகவும், ஆலோசகராகவும் ஆகிவிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Sasikala Natarajan Became Jayalalithaa's Closest Confidante And Advisor

Do you know how sasikala natarajan became jayalalitha's closest confidante and advisor? Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter