For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபலங்களின் செக்ஸ் டேப்பிற்கு பின்னால் நடக்கும் தில்லு முல்லு வேலைகள்!

லீக்டு வீடியோ என்று நீங்கள் நம்பி பார்க்கும் செலிப்ரிட்டியின் அந்தரங்க வீடியோக்கள் போலியனவை என்று தெரியுமா?

|

'லீக்டு வீடியோ' என்று சொன்னதுமே இருக்கிற வேலையை எல்லாம் விட்டுவிட்டு பார்க்கும் ஆர்வக் கோளாறா நீங்கள்?அதுவும் நீங்கள் திரையில் ரசத்த மிகப்பிரபலமான நட்சத்திரங்களின் படுக்கையறைக்காட்சி, குளியளாய்க் காட்சி என்று வரும் வீடியோ எதுவும் அவர்களுக்குத் தெரியாமல் மறைத்து எடுக்கப்பட்டதோ அல்லது வேண்டுமென்றே ஷூட் செய்யப்பட்டதோ அல்ல. அவை ஆர்டிஃபிசியல் இண்டலிஜன்ஸ் மூலமாக தயாரிக்கப்பட்ட போலி! உண்மையைப் போன்றே செயற்கையான அறிவுத்திறன் உதவியுடன் இந்த செயலை எளிதாக செய்ய முடியும்.

நவ நாகரிகம் கலந்து கட்டி இன்றைய டெக்னாலஜி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஆர்டிஃபிசியல் இண்ட்டலிஜன்ஸ் என்றால் என்ன என்று தெரிந்திருக்கும். அல்லது ஓரளவுக்கு அதனைப் பற்றிய அறிமுகம் இருக்கும். அதெல்லாம் மிகப்பெரிய தொழில்நுட்பம் அதெல்லாம் இந்தியாவில் நுழைய வெகு காலம் பிடிக்கும் என்று கடந்து செல்லும் விஞ்ஞானிகளே...

How People Make Fake Celebrity SexTape?

அது எப்பவோ இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டது என்ற கசப்பான தகவலை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயற்கை அறிவுத் திறன் என்றால் என்ன?

செயற்கை அறிவுத் திறன் என்றால் என்ன?

எவ்வளவு தான் தொழில் நுட்பம் முன்னேறினாலும் அதன் சிந்தனைகளுடன், யோசனைகளுடன் போட்டிப் போடுவதில் கணினிக்கு சிரமம் இருந்தது.

அதனை ஈடுகட்ட, இன்னும் சொல்லப்போனால் மனித மூளையை விட அதி வேகமாக சிந்திக்க வைத்திடும் ஓர் தொழில் நுட்பத்தின் பெயர் தான் செயற்கை அறிவுத்திறன்.

நம் மொபைல் போனில்... :

நம் மொபைல் போனில்... :

இன்றைக்கு செல்போன் பயன்படுத்துவோர்களின் பெரும்பாலானோர் கேமரா வசதியும் இன்னபிற ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் இருக்கிற மொபைல் போன்களையே வைத்திருக்கிறார்கள்.

எங்கு வேண்டுமானாலும் படம் க்ளிக் செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவிக் கொண்டிருந்த காலம் போய் அது எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் இப்போது தொற்றிக் கொண்டிருக்கிறது.

MOST READ: இந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால், உங்கள் உடலில் விஷத்தன்மை அதிகரிக்கும்!

வீரியம் தெரிய ஆரம்பித்தது :

வீரியம் தெரிய ஆரம்பித்தது :

ஆர்டிஃபிசியல் இண்டலிஜன்ஸ் என்ற விஷயம் உலகையே அச்சுறுத்தப்போகிறது என்பதை எப்போது முதலில் கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பியல் பேராசிரியர் கெல்லி பர்ன்ஸ் என்பவர், திறன்பேசிகளைக் கொண்டு ஃபேஸ்புக் நம்மை ஒட்டுக்கேட்கிறது என்று அதிர வைத்தார்.

ஒட்டுக்கேட்க முடியுமா? :

ஒட்டுக்கேட்க முடியுமா? :

நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எல்லா மொபைல் போன் ஆப்ஸ்களிலும் இந்த விஷயம் நுழைந்திருக்கிறது.இதன் முக்கிய அம்சமே, அது தொடர்ந்து கற்றுக்கொள்ளும்.

இவை எல்லாம் செயற்கை அறிவுத்திறனால் தான் நடக்கிறது. குறிப்பிட்ட சூழல்கள் மாறும்போது அவற்றுக்கு ஏற்ப மாறக் கூடியவை.

இணையத்தில் தேடல் இயந்திரத்தின் கட்டத்தில் நீங்கள் சொற்களை டைப் செய்ய ஆரம்பித்தவுடன் அந்தச் வார்த்தையை நிறைவு செய்வதற்கு முன்னாலேயே அந்த எழுத்தில் துவங்கும் வார்த்தைகள் சிலவற்றை கீழே வரிசையாகக் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இது மட்டுமல்ல :

இது மட்டுமல்ல :

உங்கள் தேடல் தொடர்பாகப் பொருத்தமான எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவந்து உங்கள் முன் கொட்டலாம் என்பதை மட்டும் செயலிவிதிகள் கற்றுக்கொள்வதில்லை.

மிக முக்கியமாக, உங்களுக்கு எந்த மாதிரியான விளம்பரங்களைக் காட்டலாம் என்பதற்காக உங்களின் பொதுவான தேடல் பாணி களையும் அவை தெரிந்துகொள்கின்றன.

பேஸ்புக் :

பேஸ்புக் :

இதுபோலத் தான் ஃபேஸ்புக்கும் உங்கள் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, எந்தெந்த விஷயத்தை உங்களுக்குக் காட்டலாம் என்பதை முடிவுசெய்கிறது.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்ன எழுதுகிறீர்கள், குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி இணையத்தில் எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள், எவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்கிறீர்கள், எவற்றுக்கெல்லாம் ‘லைக்' போடுகிறீர்கள் என்றெல்லாம் அது தெரிந்துகொண்டு, பொருத்தமான விளம்பரங்களை உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் உங்களுக்குக் காட்டுகிறது.

ஜிமெயிலிலும் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. அது மட்டுமல்ல, மின்னஞ்சலுடன் நீங்கள் அனுப்பும் இணைப்புகளையும் (attachment) ஜிமெயில் படித்துக்கொண்டிருக்கிறது.

ஐ போன் :

ஐ போன் :

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினால் செயற்கை அறிவுத்திறனிலும் தொடர்ந்து பல முன்னேற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் ஆப்பிள் போன் அறிமுகப்படுத்தியிருக்கும் facial recognition .

போன் எதிர்க்க உங்கள் முகத்தை காட்டினால் தான் போன் லாக் ஓப்பன் ஆகும் என்று சொல்வது சாதரணமானது அல்ல. உங்களின் முகத்தை அப்படியே உள்வாங்குகிறது குறிப்பிட்ட செயலி.

மேலே நம்முடைய தகவல்களை திரட்டும் பணியைப் பற்றி பார்த்தோமே அதே போல இது நம்மை, நம் அடையாளத்தை எல்லாம் சேகரிக்கிறது.

MOST READ: பொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்ங்க..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க..

போர்ன் வீடியோ :

போர்ன் வீடியோ :

போர்ன் வீடியோக்களில் முக்கியமாக இரண்டு பேர் தேவை, அதனை எல்லாரையும் பார்க்க வைக்க, வேகமாக பரவ வேண்டும் பகிர வேண்டும் என்றால் அந்த இருவரோ அல்லது அதில் பங்கேற்கும் ஒருவரோ மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்க வேண்டும்.

என்ன வேண்டுமானாலும் செய்திடலாம் :

என்ன வேண்டுமானாலும் செய்திடலாம் :

இந்த செயற்கை அறிவுத்திறன் மூலமாக இணையத்தில் சேகரிக்கப்படும் முகங்களில் எந்த முகத்தை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள், எதை அதிகம் சேமிக்கிறார்கள் எந்த முகத்திற்கு அதிமான விமர்சனங்கள் வருகிறது போன்றவற்றையெல்லாம் தொடர்ந்து சேகரித்துக் கொண்டேயிருக்கும்.

இவற்றில் குறிப்பிட்ட முகம் டாப் லிஸ்டில் இருக்குமே அதனைக் கொண்டு சில அல்காரிதம் மாற்றி எழுதி மிகவும் எளிதாக போலியான போர்ன் வீடியோ தயாரிக்க முடியும்.

ஆழமான போலி :

ஆழமான போலி :

இதன் மூலம் அந்த பிரபலம் போர்ன் வீடியோவில் பங்கேற்றது போலவும் அவர் செய்யாதது செய்தது போலவும், சொல்லாதது சொன்னது போலவும் மாற்றியமைக்க முடியும்.இதனை ஆழமான போலி என்று வர்ணிக்கிறார்கள்.

இதனை சாதரணமாக பார்க்கும் நாம் யாராலும் எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

பிரபல மாடல் அழகி :

பிரபல மாடல் அழகி :

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி கேல் காடோட்(Gal Gadot) என்பவர் தன்னுடைய சகோதரனுடன் உறவு கொள்வதாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலானது.

இது உண்மையில் நடந்து கேமராவில் பதிவு செய்யப்பட்டதல்ல... மேலே சொன்னது போல ஆர்டிஃபிசியல் இண்டலிஜன்ஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எப்படிச் செய்தார்கள்? :

எப்படிச் செய்தார்கள்? :

மெஷின் லேர்னிங் அல்காரிதம் குறித்த ஆழ்ந்த அறிவு உள்ளவர்கள் இதனை எளிதாக மேற்கொள்ள முடியும்.

ஏற்கனவே பிரபலங்களின் படம் கூகுள் இமேஜ் சேர்ச்,ஸ்டாக் போட்டோஸ்,யூடியூப் வீடியோஸ் போன்றவற்றில் இருக்கும் என்பதால் அவர்கள் குறித்தான போர்ன் வீடியோ தயாரிப்பது பெரிய விஷயமாக இருக்காது.

MOST READ: உங்கள் பிறந்த மாதத்தின் மலர் உங்களை பற்றி கூறுவதென்ன தெரியுமா?

Image Courtesy

தொழில் நுட்பம்:

தொழில் நுட்பம்:

இதன் ஆரம்பம் face-swap என்கிற அடிப்படை தான். எதோ ஒரு போர்ன் வீடியோவில் யாருடைய முகத்திற்கு பதிலாக நாம் தேந்தெடுக்கும் முகத்தை கச்சிதமாக பொருத்த முடியும்.

இது சாத்தியமா என்பதை சோதித்துப் பார்க்கத்தான் அந்த இஸ்ரேல் மாடல் அழகியின் முகம் சோதிக்கப்பட்டு இவை சாத்தியம் என்பது நிரூபணமானது.

Image Courtesy

திரைப்படங்கள் :

திரைப்படங்கள் :

பெரும்பாலும் திரைப்படங்களில் கூட நாம் பார்க்கிற செக்ஸ் காட்சிகள் அப்படியே படமாக்கப்படுவதில்லை. அவையும் தொழில் நுட்பம் உதவியுடன் 3டி மாடல் செய்யப்பட்டு காட்சிகள் படமாக்கப்படுகிறது.

இதன் பிறகு, வேறு எங்கும் பயன்படுத்தமாட்டாது என்ற உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

பேராபத்து :

பேராபத்து :

இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் குறித்த பார்வை இன்னும் அடிமைத்தனத்தோடு தான் இருக்கிறது.இந்நிலையில் இது பலரது வாழ்கையையே முடித்துவிடும் அபாயமும் இருக்கிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக,அல்லது அவரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் ஓர் விஷயம் உயிரையே பழி வாங்கிடும் என்பதற்கு சாட்சி சேலம் வினுப்பிரியா.

பால் வாக்கர் :

பால் வாக்கர் :

இதனை தவறான செயல்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்பதல்ல விஷயம். தொழில்நுட்பத்தை தவறான வழிகளிலும் பயன்படுத்தலாம் என்பதை மனிதனின் மூளை தான் கண்டுபிடிக்கிறது.

Furious 7 திரைப்படத்தில் பால் வாக்கர் தோன்றினாரே.... அதுவும் இதே தொழில்நுட்பத்தில் தான். நம்மை விட்டு மறைந்த ஓர் பிரபலத்தை காட்சிகளில் மீட்டுக் கொண்டு வரவும் முடியும்.

MOST READ: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சில அற்புதமான உணவுகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

How People Make Fake Celebrity SexTape?

How People Make Fake Celebrity SexTape?
Desktop Bottom Promotion