2017 வருடத்தின் முடிவு எப்படி இருக்கும்? கடந்த கால நினைவலைகள்...

Posted By:
Subscribe to Boldsky

2017 கிட்டத்தட்ட முடிகிற தருவாயில் இருக்கிறது. இந்த தருணத்தில் நாம் இந்த வருடம் கடந்து வந்த பாதயை பார்க்கலாமா? ஜனவரி மாதம் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் துவங்கி இதோ குஜராத்தில் வெற்றிப் பெற்ற ஜிக்னேஷ் மேவானியின் கொண்டாட்டத்துடன் இந்த வருடம் முடியப்போகிறது.

இன்னனும் ஆர்.கே.நகர் தேர்தல், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு... என இந்த டிசம்பர் மாதத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். வாருங்கள் '2017'ஆம் ஆண்டு தமிழகம் கடந்து வந்த பாதை குறிப்பாக நம் கவனத்தை திசை திருப்பிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜனவரி மாதம் :

ஜனவரி மாதம் :

தமிழ் நாட்டோட பாரம்பரியம் ஜல்லிக்கட்டு அத வெளிநாட்டு நிறுவனம் எப்டி தடை செய்யலாம்னு சொல்லி இளைஞர்கள் சமூக வளைதளங்கள் மூலமா கூட்டத்தை ஒருங்கிணைச்சு மிகப்பெரிய அளவில் கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க ஸ்தம்பிக்க செஞ்ச போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்.

போராட்டம் வெற்றி :

போராட்டம் வெற்றி :

அலங்காநல்லூர், சென்னை மெரீனா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம், கோவை வ. உ. சி மைதானம், திண்டுக்கல், திருச்சி, சேலம், திருநெல்வேலி வ.உ.சி மைதானம், வேலூர் புதுச்சேரி ஆகியன முக்கியப் போராட்டக் களங்களாக அமைந்தன.

முதல் ஏழு நாட்கள் பெரும்பாலும் அறவழியில் நடந்துவந்த போராட்டங்கள், எட்டாவது நாளில் காவல்துறை - பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு நிறைவுக்கு வந்தன.

இதில் எந்த அரசியல் கட்சியையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை.

பிப்ரவரி :

பிப்ரவரி :

பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் சசிகலா அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தமிழகத்தின் முதல்வர் ஆகப்போகிறார் என்ற செய்தியும் வெளியானது. அந்த தகவலுக்கு வலுவூட்டும் விதத்தில் பன்னீர் செல்லவம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

தியானம் :

தியானம் :

இந்நிலையில் பிப்ரவரி எட்டாம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் இருக்கிற ஜெயலலிதா சமாதிக்கு வந்த ஒ.பி.எஸ் தியானத்தில் ஆழ்ந்தார் சுமார் நாற்பது நிமிடங்கள் வரை நீடித்த அந்த தியானம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பிறகு , பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஒ.பி.எஸ் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொன்னதாக தெரிவிக்க பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒ.பி.எஸ் அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறினார்.

கூவத்தூர் :

கூவத்தூர் :

அதிமுக என்ற கட்சி இரண்டாக உடைந்தது. எங்கே எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் ஒ.பி.எஸ் பக்கம் சென்று விடுவார்களோ என்று நினைத்து எம்.எல்.ஏ.,க்கள் அத்தனை பேரையும் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர். '

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

மார்ச் :

மார்ச் :

இந்த மாதத்தில் ரசிகர்கள் எல்லாரும் குறிப்பிட்ட ஒருவரின் ட்விட்டர் வீடியோவுக்காக காத்திருந்தார்கள். பிரபல பின்னணிப் பாடகியும், ஆர்.ஜே.,வுமான சுசித்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

சுச்சீ லீக்ஸ் என பயங்கர வைரலாக அது பரவியது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்றும்,அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அப்போது சொல்லப்பட்டது.

ஏப்ரல் :

ஏப்ரல் :

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருக்கிற வைகை அணையின் நீர் மதுரை, தேனி மாவட்டங்களின் கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவியது. மேலும் தொடர்ந்து தண்ணீர் ஆவியாகிக் கொண்டே இருந்தது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் அதாவது ஏப்ரல் மாதத்தில் 35 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 2017 ஏப்ரலில் 23 அடியாக இருந்தது.

இதனால் தண்ணீரை ஆவியாகாமல் தடுக்க வேண்டும் என்ற அண்ணத்துடன் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்த விஷயம் உலகையே ஆண்டிப்பட்டி பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

 தெர்மாக்கோல் :

தெர்மாக்கோல் :

கரையிலிருந்து 200 மீட்டர் வரையில் உள்ள நீரில் தெர்மாகோல் அட்டைகளை மிதக்கவிட்டனர். அதை விட்ட பத்தே வினாடிகளில் காற்றின் வேகம் காரணமாக அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது. இந்த வீடியோ அப்படியே செய்தியாக வெளியாக சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாக பரவியது.

பாகுபாலி :

பாகுபாலி :

இதே மாசம் ஏப்ரல் 28 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பகுதி வெளியானது. இந்தியாவில் மிக அதிகபட்ச செலவில் தயாரிக்கப்பட்ட பாகுபலி திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பே ஐந்து பில்லியனுக்கு விற்பனையானது.

உலகளவில் பெரும் வசூல் வேட்டையை நடத்தியது. மே மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு ஆயிரத்து ஐநூறு கோடி வசூல் சாதனை புரிந்தது.

ஜூன் :

ஜூன் :

பெரும் சர்ச்சைகளும், எதிர்ப்பார்ப்புகளையும் விமர்சனங்களை தாங்கிக் கொண்டு இந்த மாத இறுதியில் ஒளிபரப்பான டிவி நிகழ்ச்சி பிக் பாஸ்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்போகிறார் என்பதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை தமிழில் அறிமுகமில்லாத நூறுநாட்கள் ஒரே வீட்டில் இருக்க வேண்டும். வெளியுலக தொடர்பு இருக்காது. சுற்றிலும் கேமரா கண்காணிக்கும் என்று பயங்கர எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியானது.

ஓவியா ஆர்மி :

ஓவியா ஆர்மி :

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்கள். அவர்கள் வீட்டிற்குள்ளே பேசுகிற வசனங்கள் ஒவ்வொன்றும் இங்கே சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது.

வெளியே ஓவியாவிற்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. எக்கச்சக்கமான மீம்ஸ் பறந்தது.

ஜுலை :

ஜுலை :

இந்த மாதம் இந்தியா முழுவதும் ஒரே வரிவிதிப்பு என்று சொல்லி ஜி.எஸ்.டி வரியை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்.

இதுவரை வாட், மத்திய விற்பனைவரி, கலால் வரி, சேவை வரி, செஸ்கள் என்று பலப் பெயர்களில் வசூலிக்கப்பட்டு வந்த வரிகளுக்குப் பதிலாக இனி ஜி.எஸ்.டி என்கிற ஒற்றை வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

ஜனாதிபதி :

ஜனாதிபதி :

இதே மாதம் இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1998 முதல் 2000 ஆண்டு வரை பாரதீய ஜனதாக் கட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் பிரிவின் தலைவராக இருந்த

இவர் 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் உத்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் ஆளுனராக இருந்தார்.

இந்நிலையில் ஜூலை மாதம் நடைப்பெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.

ஆகஸ்ட் :

ஆகஸ்ட் :

இந்த மாதத்தில் விவேகம் திரைப்படம் வெளியானது. படத்தில் உடற்கட்டுடன் நடித்திருந்த நடிகர் அஜித்தின் ஹார்டு வொர்க் என்று அவரது ரசிகர்கள் புகழ பலரும் அதற்கு எதிர் விமர்சனங்கள் வைப்பது கலாய்ப்பது என்று சொல்லி வைரலாய் பரவியது.

இதே மாதத்தில் ஹரியானாவைச் சேர்ந்த சாமியார் குருமீத் ராம் ரஹீம் என்பவர் மீது ஏரளமான குற்றச்சாட்டுகள் விழுந்து அவரைப் பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் வைரலாக பரவியது. கோரக்பூரில் உள்ள மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை திடீரென நின்று போனதால் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன.

செப்டம்பர் :

செப்டம்பர் :

வீட்டில் நிலவிக்கொண்டிருந்த கொடிய வறுமையை பொருட்படுத்தாது தன்னுடைய ஒரே லட்சியமான மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று விடாமுயற்சியுடன் போராடிய அனிதா.

நீட் தேர்வு முறையினால் தன்னால் எம்.பி.பி.எஸ் படிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் செப்டம்பர் மாதம் முதல் தேதி தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கௌரி லங்கேஷ் :

கௌரி லங்கேஷ் :

லங்கேஷ் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரும் இலக்கியவாதியுமான கௌரி லங்கேஷ் அவர் வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இடது சாரி சிந்தனை கொண்ட இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தார். அதே போல கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமலாக்க வைத்தார்.

ஜிமிக்கி கம்மல் :

ஜிமிக்கி கம்மல் :

மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம் வெளிப்பாடிண்டே புஸ்தகம். இந்த படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் என்ற பாடலை முன்னரே இணையத்தில் வெளியிடப்பட்டது.

அந்தபாடல் இணையத்தில் பயங்கர வைரலாக பரவியதை அடுத்து, ஜிம்மிக்கி கம்மல் சேலஞ்ச் மேற்கொள்ளப்பட்டது. பலரும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடி அதை வீடியோவாக எடுத்து தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தனர்.

குறிப்பாக, எர்ணாகுளத்தில் இருக்கும் புனித தெரசா கல்லூரி மாணவிகளும், ஆசிரியர்களும் ஜிமிக்கி கம்மலுக்கு ஆடிய ஆட்டம், கேரளாவில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் டாப் ட்ரெண்டிங் ஆக்கியது.

அக்டோபர் :

அக்டோபர் :

அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் அக்டோபர் பதினெட்டாம் தேதி இந்த திரைப்படம் வெளியானது.

இதில் விஜய் பேசிய வசனங்கள் பலவும் பாஜகவின் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி உள்ளிட்டவை மெர்சல் படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது அதை நீக்க வேண்டும் என்று பல்வேறு கண்டனக்குரல்களை எழுப்பினர்.

இது செய்திகளில் எல்லாம் பெரும் விவாதப்பொருளாக மாற, மெர்சல் பார்காதவர்களும் பார்த்து படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர். இந்நிலையில் படத்தை இணையத்தில் பார்த்தேன் என்று சொல்லி எச்.ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கி, பின்னர் அந்த குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் பார்த்தேன் என்று சொல்லி சமாளித்தார்.

ஆஷிஷ் நெஹ்ரா :

ஆஷிஷ் நெஹ்ரா :

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா நம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

நவம்பர் முதல் தேதி நியூஸிலாந்துக்கு எதிராக டெல்லியில் நடைப்பெற்ற டி20 போட்டியுடன் ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வுப்பெற்றார்.

மனுஷி சில்லர் :

மனுஷி சில்லர் :

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் பங்கேற்று உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2000மாவது ஆண்டில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்றார். அதன் பின் 17 ஆண்டுகளுக்கு பின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.

உலக அழகி பட்டம் வெல்லும் 6வது இந்திய பெண் மனுஷி சில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒகி புயல் :

ஒகி புயல் :

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் நவம்பர் 29ல் உருவான ஒரு வெப்ப மண்டல புயல் இது. இப்புயலுக்கு ஒகி என்ற பெயர் வங்காளதேசத்தால் சூட்டப்பட்டுள்ளது. ஒகி என்ற சொல்லுக்கு வங்காள மொழியில் "கண்" என்று பொருள்.

இதில் கன்னியாகுமாரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற எண்ணூறுக்கும் அதிகமான மீனவர்கள் காணமல் போயுள்ளனர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மீனவர்கள் சிலரை கேரள அரசு மீட்பது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மீனவர்கள் நீந்த முடியாமல் அப்படியே கடலில் இறந்து மிதக்கும் படங்களும் வெளியாகி பெருகும் அதிர்வை உண்டாக்கியது.

ஓகி புயலில் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தர வலியுறுத்தி குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Highlights And Trending Issues During 2017

Highlights And Trending Issues During 2017