For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாத்தா பாட்டி காலத்துல நடந்திருக்கிற கூத்த பாருங்க!

நம்முடைய தாத்தா பாட்டி காலத்து சுவையான நினைவலைகள்

|

திரும்பச் செல்ல முடியாத காலங்களை, பருவங்களை எல்லாம் புகைப்படத்தில் சிறைபடுத்தி தான் பார்கக் வேண்டியிருக்கிறது. இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறையினருக்கு அவர்களது தாத்தா பாட்டி காலத்து உலகம் எப்படியிருக்கும் என்று தெரியாது.

Here are the some captions of unforgettable memories

Image Courtesy

பழைய நினைவுகளை திரும்பி பார்ப்பதில் நமக்கு எப்போதும் விருப்பம் உண்டு. இன்றைக்கு நமக்கு மிகவும் பரிச்சியமான பொருள் தாத்தா பாட்டி காலத்தில் எப்படி விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1 ரூபாய் ஸ்டார் :

1 ரூபாய் ஸ்டார் :

இன்றைக்கு விதவிதமான சாக்லெட்டுகள் இருந்தாலும் சிலரது எனிடைம் பேவரைட் 5 ஸ்டார் தான். 1970களிலேயே 5 ஸ்டார் வந்திருக்கிறது. விலையைப் பாருங்கள் வெறும் ஒரு ரூபாயாம்! அடேயப்பா.....

அனாசின் :

அனாசின் :

காய்ச்சல் அடிக்கிறது என்றாலே இன்றைய குழந்தைகள் கூட மாத்திரையின் பெயரைச் சொல்லிவிடும். அன்றைக்கு நம் அம்மா அப்பா கொஞ்சம் மக்காக இருந்திருப்பாரக்ள் போல....

தலைவலிக்கு அனாசின் சாப்பிடுங்கோ.... என்று விளம்பரம் வேறு!

சிக்லெட் :

சிக்லெட் :

இன்றைய ஆர்பிட் தான் இது. சிக்லெட் என்ற பெயரில் வெறும் பத்து பைசாவிற்கு கிடைத்திருக்கிறது. இதைப் படித்தவுடன் அருகிலிருந்து

'அன்னைக்கு பத்து பைசா எவ்ளோ பெரிய காசு தெரியுமா!!'

என்று ஒரு குரல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

ஃபியட் கார் :

ஃபியட் கார் :

ஃபியட் கார். 4 பேர் உட்காருவதற்கான சீட் உண்டு ஆனால் ஐந்து பேர் கூட உட்காரலாம் என்று தெளிவாக! விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

இன்றைக்கு டூவீலரிலேயே 4 பேர் செல்வது தெரியாது அவ்வளவு அப்பாவியாய் இருந்திருக்கிறார்கள்.

எச்சரிக்கை : காரின் விலையை மட்டும் உத்து பார்க்க வேண்டாம்.

குக்கர் :

குக்கர் :

இன்றைக்கு குக்கர் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாருமே குக்கர் பயன்படுத்துகிறோம். அன்றைக்கு கேஸ் அடுப்பு கூட இல்லாத காலத்தில் எப்பிடியா குக்கர் எல்லாம் வாங்கியிருப்பாங்க!!!!!!!

குடும்பத்து சொத்து :

குடும்பத்து சொத்து :

அம்பாசிடர் கார் வைத்திருந்தால் போதும் அவர் தான் அந்த ஊரின் பெரிய பணக்காரர். மித மிஞ்சிய வசதி படைத்தவர்கள் மட்டுமே கார் எல்லாம் வைத்திருப்பார்கள்.

அவர்களுக்கான விளம்பரம். ஒற்றை பிள்ளைக்கே குழந்தை பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று யோசிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு இதைப் பார்த்தால் கொஞ்சம் வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.

ஊறுகாய் :

ஊறுகாய் :

இன்றைக்கும் அம்மா மொட்டைமாடியில் ஊறுகாய் காய வைத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் ஆச்சரியமாய் இருக்கிறது, அன்றைக்கே அதாவது 1970களில் ஊறுகாய் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யத் துவங்கிவிட்டார்கள்.

மலிவானது என்றால் தரம் குறைவாக இருக்கும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான், விளம்பரத்திலேயே இது வணிக லாபத்திற்காகத்தான் தயாரித்து விற்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அந்த கேமரா என்ன விலை? :

அந்த கேமரா என்ன விலை? :

அடடே!... அந்த கேப்ஷனை பாருங்க என்ன ரொமாண்ட்டிக்கான விளம்பரம்...

கேமரா விலை 80 ரூபாய் அதனை வைப்பதற்கான கேஸ் ப்ளாஸ்டிக் என்றால் 14 ரூபாய் லெதர் என்றால் 27 ரூபாய்.

வாரே வாவ்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Here are the some captions of unforgettable memories

Here are the some captions of unforgettable memories
Story first published: Monday, September 11, 2017, 19:09 [IST]
Desktop Bottom Promotion