For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைனில் மொபைல் ஆர்டர் செய்து, செங்கல், தேங்காய் விம் லிக்யூட் பெற்ற பாக்கியசாலிகள்!

ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்து, செங்கல், தேங்காய் விம் லிக்யூட் பெற்ற பாக்கியசாலிகள்!

|

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...." என்ற வரிகள் உண்மை தான். ஆனால், அதே போல ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றும் வழிகளும் அழியாது என்பதும் உண்மை என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் வந்த பிறகு திருட்டு அதிகமாகிவிட்டது என்பதைவிட, எளிமை ஆகிவிட்டது என்பது தான் நிதர்சனம். இன்டர்நெட் திருட்டை கண்டுபிடிக்கவும் தனி மூளை வேண்டும், திருடவும் அதிக மூளை வேண்டும்.

இந்த வகையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து, ஏமார்ந்து போன கஸ்டமர்கள் பகிர்ந்த படங்களின் தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விம் லிக்யூட்!

விம் லிக்யூட்!

சாம்சங் கோர் டியோ மொபைல் ஆர்டர் செய்ததற்கு, உடன் இரண்டு விம் லிக்யூட் பாட்டில்களும் கொடுத்த கம்பெனிக்கு நன்றி தெரிவித்துள்ள கஸ்டமர்.

சோப்பு!

சோப்பு!

ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்ததற்கு, வீல் பார் பார்சல் அனுப்பியுள்ளனர். இதை எதிர்த்து கம்ப்ளெயின்ட் செய்ததற்கு அவருக்கு இழப்பீடாக 20% பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்!

கல்!

ஐ-போன் ஆர்டர் செய்த நபருக்கு அதே எடையுடனான கல் பார்சல் அனுப்பியுள்ளனர். ஆனால், ஒரிஜினல் பெட்டியில் எப்படி கல்லு வந்தது என்பதை எண்ணி பார்த்தல் விசித்திரமாக இருக்கிறது.

தேங்காய்!

தேங்காய்!

ஷூ ஆர்டர் செய்த நபருக்கு தேங்காய் பார்சல் அனுப்பியுள்ளது ஒரு ஆன்லைன் நிறுவனம். இது பெண்ணுக்கு நடந்த அவலம். அதுவும் முத்தின தேங்காய் அனுப்பிச்சிருக்காங்க...

பிஸ்கட்!

பிஸ்கட்!

தேங்காய் கூட பரவால, இரண்டு ரூபா பிஸ்கட் எல்லாமா அனுப்புறது. ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்த நபருக்கு இரண்டு ரூபாய் பார்லி-ஜி பிஸ்கட் அனுப்பியுள்ளனர்.

மீண்டும் கல்லு!

மீண்டும் கல்லு!

ஆப்பிள் பிராடக்ட் ஆர்டர் பண்ணாலே கல்லு தான் அனுப்புவோம்ன்னு கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் போல. ஐ-பாட்'க்கும் கூட கல்லு தான் அனுப்பியிருக்கிறார்கள்.

எம்புட்டு தடவ...

எம்புட்டு தடவ...

பிளாக்பெர்ரி மொபைல் ஆர்டர் செய்ததற்கு முதலில் கல்லை அனுப்பியுள்ளனர். மீண்டும் கம்ப்ளெயின்ட் செய்த பிறகு, அவருக்கான அதே மொபைல் அனுப்பப்பட்டுள்ளது.

555!

555!

கல்லு இல்ல, சோப்பு பார் இந்த இரண்டு பொருட்களை வைத்து தான் அதிகமாக ஆன்லைன் ஆர்டர்களை ஏமாற்றியுள்ளனர். இவை எல்லாம் இன்டர்நெட்டில் வைரலான படங்கள். இவற்றை தவிர இன்னும் எத்தனை பித்தலாட்டங்கள் நடந்துள்ளதோ யாருக்கு தெரியும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Online Shopping Disasters People Faced!

Funny Online Shopping Disasters People Faced!
Story first published: Friday, July 21, 2017, 15:21 [IST]
Desktop Bottom Promotion